02. உன்னை பிரியேனடி







“என்னங்க, இன்னக்கி சாயங்காலம் அலமேலு மதினிய வர சொல்லிருந்தீங்களே? அப்போ அவங்க வரலையா?” என்றார் அமிர்தம்.


“எவடி இவ? அவ என் கூட பொறந்த தங்கச்சிடி… அவ என்னமோ இது வரை என் பொண்ண பாத்ததே இல்லைங்கற மாறி பேசுற?”


“அப்போ பொண்ணு பாக்க வரது உண்மை… அப்டிதானே?” என்று இடையில் புகுந்தாள் துர்கா.


“ ப்ச், துர்கா என்னது இது? கொழந்த மாறி…, என்னக்கினாலும் உனக்கு கல்யாம் பண்ணி வைக்க தான் போறோம்…


உன்ட்ட போன வாரமே சொல்லலாம்னு தான் நினைச்சேன். சரி படிக்கற புள்ளய தொந்தரவு பண்ண வேண்டாமேனு தான் விட்டுட்டேன்.


நா அன்னக்கி ‘உனக்குனு எதாவது விருப்பம் இருந்தா சொல்லு?’னு சொன்னதுக்கு,


நீ “அப்டி எதுவுமில்லை”னு சொல்லிட்ட…


அதான் நம்ம சொந்தத்துலயே துவி கூட ரொம்ப நல்ல பையன்., அலமுக்குன்னு யாரும் இல்ல. ஒரே பையன் வேற. அதான் சாயந்தரம் சும்மா பேசி வச்சிக்கலாம்னு வர சொல்லிட்டேன். நீ சொல்றது போல உடனே உனக்கு கல்யாணம் வைக்கல சும்மா வந்து பேசிட்டு போறாங்க அவ்ளோதான்…” என்று 

அமிர்தத்தின் வயிற்றில் பாலை வார்த்தார்.


அதே சமயம் பெண்ணின் வயிற்றில் புளியை கரைத்தார்.


‘இத்தோடு பேச்சு முடிந்துவிட்டது’ என்பது போல் சென்றுவிட்டார்.


அதன் பின் அவள் கூறிய எதுவுமே அங்கு எடுபடவில்லை.


மாலையில் வந்த அலமேலுவும் நல்லதொரு பதிலை கூற அங்கே ஒரு மாதத்தில் நல்ல முஹூர்த்த தேதி குறிக்கப்பட்டது.


ஆறுமுகத்திற்கு அதிர்ச்சியாயினும் சில பல பேச்சுவார்த்தைகள் அவரை சம்மதிக்க வைத்தன.


வழக்கம் போல் அவள் அவனையே திட்டி கொண்டிருந்தாள்.


(அதாங்க, எல்லா பொண்ணுகளும் பண்ற மாறி நம்ம ஹீரோவ தான் திட்டுறாங்க)


இங்கு  ‘துவி’ என்று எல்லோராலும் அழைக்கப்படும் துவாரகீஸ் துர்காவின் புகைப்படத்தை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தான்.



“ஹேய் தும்ஸ் கட்ட… நீ எனக்கு சொந்தமாக முழுசா இன்னும் ஒரு மாசம் இருக்குடி!!


இந்த அம்மாட்ட படிச்சு படிச்சு சொன்னேன், சீக்கிரமே முடிஞ்சா நாளைக்கேனாலும் கல்யாணத்த வச்சிகோங்கனு… 


பட், இப்டி ஒரு மாசம் காக்க வேண்டியதா போச்சு” என்று பெரு மூச்சி விட்டான்.


(ஆனால் நம்ம ஹீரோயின்  துவி சார கரிச்சு கொட்டிட்டு இருக்காங்க… பாவம் ஹீரோ சார் இது தெரியாம ட்ரீம்ல இருக்கார்… சரி இந்த புள்ள மனச ஏன் கெடுக்கணும்? வாங்க நாம ஹீரோயின்ட்ட போவோம்)



“டேய் துவி கொரங்கு நீ இப்போ மட்டும் என் கைல மாட்டுன… மவனே சட்டினி தான்டா…  உன்னால தானே இப்போ நா வேலைக்கு போக முடியாம இருக்கேன்” என்று கருவ அவள் மனமோ,



‘ஆமா துவி இல்லாட்டாலும் நீ வேலைக்கு போய் இருப்ப பாரு போடி இவளே பெருசா பேச வந்துட்டா..’ என்று கூற



“ஆமால இப்போ கூட ஒன்னும் கெட்டு போய்டல நம்ம துவி தானே,


அவன்ட்ட போய் நா வேலைக்கு போவேன்னு சொன்னா?  அவன் ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டான் தானே” என்று  அவளும் மனதிற்கு எடுத்து கொடுக்க அதை அவள்  மனமும் ஓர் தலையாட்டாலுடன் ஒத்து கொண்டு அமைதியானது.


(ஆனா பாருங்க அவ மனசு நம்ம துவினு எவ்ளோ அழுத்தமா சொல்லுச்சு… அத இந்த மண்டு கவனிக்கவே இல்ல பட் நாம கவனிச்சிட்டோம்ல)

Post a Comment

0 Comments