07. உன்னை பிரியேனடி






நாட்கள் செல்ல செல்ல,
அவளை பற்றிய உணர்வு அவனை பாடு படுத்த இறுதியில் தன் நண்பனிடமே சரண் அடைந்தான் துவி.

அவன் கூறிய அறிவுரை படி அவளின் கல்லூரி நாட்களை அவளை விட அவனே அதிகமாக எண்ண ஆரம்பித்து அதையும் கடந்தவன்,

மேலும்  பொறுமை காக்க இயலாது. அவளை பக்கத்தில் வைத்தும் பாராது போல நடக்க 
அவள் பாராத சமயம் காதல் கணை வீச என காதலுக்கும் கட்டமைக்கும் நடுவில் அவன் தத்தளிக்க 

இனியும் அது வேண்டாம் என  அவளின் தேர்வு  தொடங்கிய சமயமே இருவர் வீட்டிலும் பேசி 

தேர்வு முடிந்த அன்றைய தினத்திலேயே நிச்சயம் செய்து அதை விட வேகமாக திருமணமும் செய்து கொண்டான்.

(இத அவரோட ஸ்டைல்ல தாங்க டைரி எழுதி இருக்காரு...  இத படிச்ச துர்கா எந்த நிலைமைல இருக்காங்க பாப்போம் வாங்க )

கண்ணில் நீர் கோர்க்க டைரியை அதன் இடத்தில் வைத்து விட்டாள் துர்கா.

(இதுல கண்ணீர் விட என்ன இருக்குனு நீங்க நினைக்கலாம்.  நா டைரிய முழுசா வாசிக்க விடலையே பாதிய ம்யூட் மோட்ல போட்டேன்.  பின்ன, துவி டைரிய படிக்க துர்காக்கு தான் ரைட்ஸ் இருக்கு நமக்கு இல்லைல...  நமக்கு கடமை கண்ணியம் கட்டுப்பாடு ரொம்ப முக்கியம் இல்ல) 


'தன்னவன் தன்னை இந்த அளவிற்கு நேசித்தான்' என்று என்னும் போதே அவள் தன்னிலையில் இல்லை.

'இனி தன்னுள்ளும் அவனை போன்ற நேசம் வேண்டும் நிச்சயம்' என்று உறுதி பூண்டாள்.

அதன் பின் வந்த நாட்களில் அவள் அவனிடம் அதிக விலக்கம் காட்டுவதில்லை இதை அவனும் அறிய தான் செய்தான்.

இருந்தாலும் 'இது தன் கற்பனையோ?' என்று அதை பெரிதாக எடுக்க வில்லை.

சில  நாட்களுக்கு பின்

இப்போது துர்காவும் வேலைக்கு செல்கிறாள்.
அவளுக்கு உபயோகமான ஒரு கம்ப்யூட்டர் துறையில் வேலை.

அன்று இரவு உணவிற்கு பின் அவர்களின் அன்றாட செயலான வராண்டாவில் அமர்ந்து நிலவை ரசிக்கும் பணியில் ஈடு பட்டு கொண்டிருக்க அடிக்கடி சிரித்து கொண்டே இருந்த தன் மனைவியை ரசித்து கொண்டிருந்தான் துவி 

(ஒருத்தி ராத்திரில பேய் மாறி சிரிக்குறா அத இவன் ரசிக்குறான் இவங்க ரெண்டு பேரையும் கீழ்பாக்கம் கொண்டு போய் தான் விடனும்)

"என்னனு சொல்லிட்டு சிரியேன்  நானும் உன் கூட சேர்ந்து சிரிப்பேன்ல" என்றான்.

சட்டென்று அவன் புறம் திரும்புயவள்,

அவன் கண்களில் தோன்றிய காதலை கண்டு வெட்கி தலை குனிந்தாள்.

அப்பொழுது அவன் என்றோ படித்த கவிதை நினைவு வர அதை மெலிதாக அவள் கேட்கும் வண்ணம் அவளருகில் நெருங்கி அவள் காதில் இதமாய் கிசுகிசுத்தான்.

நீண்ட நாட்களாய் 
உன் வெட்கத்தை 
இந்த பூமி மட்டும் 
தரிசிக்கிறதே...
ஒரு முறையேனும் 
வான் நோக்கி வெட்கம் கொள்வாயா?
உன் குங்கும முகத்தை
காண துடிக்கிறது 
வானம்.

(ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி வார மலர்ல படிச்ச கவிதை) 

அவனின் அருகாமையில் கிறங்கியவள்  அவனின் மெல்லிய மூச்சு காற்று அவளின் ஸ்பரிசம் தொட சில்லிட்டு நின்றாள்.

" தும்ஸ், நா உன்னை என் உயிரை விட மேலா விரும்புறேன்னு சொல்ல மாட்டேன்டி" என்று கூற சிறிது நேரம் சென்றே அவன் கூறியதன் அர்த்தம் புரிய விழி விரித்தாள்.


குழந்தை போல் முழிக்கும் தன்னவளின் மூக்கை செல்லமாய் சீண்டியவன்,

"ஆமாடி தும்ஸ்  என்னோட உயிர் நீ  அந்த உயிரை விட எனக்கு வேற ஏதும் பெரிசு இல்ல அம்மு... இன்க்ளுடிங் மை லவ்" என்று கூறியவனை இறுகி அணைத்து கொண்டாள். 

தன் மனைவியின் அணைப்பில் இன்ப அதிர்ச்சி கொண்டவன் அவளை தன் மார்போடு அணைத்து கொண்டான்.

கோழியின் இறகிற்குள் அடங்கும் குஞ்சி போல் அடங்கி விட்டாள் அவள்.

மோகன நிலை கலைக்க மனம் இல்லை இருவருக்கும். 

எவ்வளவு நேரம் அப்படி நின்றனரோ அவர்களே அறியார் பிறகெப்படி நாம் அறிய இயலும்.

அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன், அவளின் பூ நெற்றியில் முத்தமிட்டு,

  "அம்மு" என்று மெல்ல அழைக்க அந்த அழைப்பு அவள் காதில் விழவே இல்லை.

(மேடம் இன்னும் உலகம் திரும்ப வில்லை போல)

சரி பிள்ளைக்கு இப்போ தான் காதல் மோட் ஸ்டார்ட் ஆகி இருக்கு.. 
நாமளும் டிஸ்டர்ப் பண்ணாம அடுத்த பகுதியில சந்திப்போம். 

முக்கிய அறிவிப்பு என்னன்னா அடுத்த பகுதியோட *முற்றும்* அது கொஞ்சம் பெரிய எபினு நினைக்கிறேன். 
அதனால கொஞ்சம் தாமதம் ஆகலாம்...
அட்ஜஸ்ட் ப்ளீச்... 

Post a Comment

0 Comments