04. உனக்காக நான் இருப்பேன்






ஒரு வாரம் கடந்து இருக்க,

கல்லூரி கேண்டீனில் மாலினியும் இன்னும் சில பெண்கள் பட்டாளமும் குழுமியிருக்க ஒருத்தி கேட்டாள். 


“ மாலினி நீ நல்ல பாடுவியாமே? எங்களுக்காக ஒரு பாட்டு பாடேன்” 


“ அட ஆமா ரஞ்சி.. இவ அழகா பாடுவா” ரூபிணி எடுத்து கொடுத்தாள். 


“ ஏய் எருமைங்களா சும்மா இருங்க.. இன்னைக்கு நான் மாட்டுனேனா உங்க கிட்ட” என்று தப்பிக்க


“ பொய் சொல்லல மாலு… நிஜமாவே உன் வாய்ஸ் நல்ல இருக்குடா. நிச்சயமா இது காம்ப்லிமெண்ட் தான்டா” என்று ரூபி கூற


“ தேங்க்ஸ் டியர்… அதுக்குனு பெருசா ட்ரைன்லாம் எடுக்கல.

எனக்கு பிடிச்ச பாட்டை… ரசிச்சு அனுபவிச்சு பாடுவேன். அவ்ளோ தான்” என்று கூறினாள். 


“ இப்போ எங்களுக்காக பாடு செல்லம்… இவ்ளோ கேக்குறோம்ல?” என்று ரஞ்சி என்கிற ரஞ்சனா கேட்க 


சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் தொண்டையை செருமினாள். 


“ம்க்கும்” 


மார்கழி பூவே மார்கழி பூவே 

உன் மடிமேலே ஓரிடம் வேண்டும்

மார்கழி பூவே மார்கழி பூவே 

உன் மடிமேலே ஓரிடம் வேண்டும்


மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை


உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை 


மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை


உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை


மார்கழி பூவே மார்கழி பூவே 

உன் மடிமேலே ஓரிடம் வேண்டும்



பூக்களைப் பிரித்து புத்தகம் படிப்பேன்


புல்வெளி கண்டால் முயல் போல் குதிப்பேன்


நான் மட்டும் இரவில் தனிமையில் நடப்பேன்


நடைபாதைக் கடையில் தேநீர் குடிப்பேன்


வாழ்கையின் ஒரு பாதி நான் எங்கு ரசித்தேன்

வாழ்கையின் மறு பாதி நான் என்றும் ரசிப்பேன்

காற்றில் வரும் மேகம் போலே நான் எங்கும் மிதப்பேன்


மார்கழி பூவே மார்கழி பூவே 

உன் மடிமேலே ஓரிடம் வேண்டும்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு

செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்

கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு

சந்தம் தந்து விடும் மைனாக்கள்

வெண்பா பாடி வரும் வண்டுக்கு

செந்தேன் தந்துவிடும் சிறுபூக்கள்

கொஞ்சம் பாட வரும் பெண்ணுக்கு

சந்தம் தந்து விடும் மைனாக்கள்



காவேரிக் கரையில் நடந்ததுமில்லை


கடற்கரை மணலில் கால் வைத்ததில்லை


சுதந்திர வானில் பறந்ததுமில்லை

சுடச் சுட மழையில் நனைந்ததும் இல்லை


சாலையில் நானாகப் போனதுமில்லை

சமயத்தில் நானாக ஆனதுமில்லை

ஏழை மகள் காணும் இன்பம் நான் காணவில்லை


மார்கழி பூவே மார்கழி பூவே 

உன் மடிமேலே ஓரிடம் வேண்டும்

மார்கழி பூவே மார்கழி பூவே 

உன் மடிமேலே ஓரிடம் வேண்டும்


மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை

உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை 


மெத்தை மேல் கண்கள் மூடவும் இல்லை

உன் மடி சேர்ந்தால் கனவுகள் கொள்ளை

மார்கழி பூவே மார்கழி பூவே 

உன் மடிமேலே ஓரிடம் வேண்டும்

(திரைப்பட பாடல்)

கண் மூடி ரசித்து பாடி முடிக்க தோழியர் வட்டம் கை தட்டினர். 


“ ஹேய் மாலு, சூப்பர்” 


“ ஆமா மாலினி… நம்ம விஸ்காம் பசங்க ஒரு நல்ல வாய்ஸ் தான் தேடிட்டு இருக்காங்க. பேசாம நீ போயேன்…நான் வேணும்னா பேசி பார்க்கவா?” ரஞ்சி கேட்க,


“ சும்மா இருடி” என்று அவளை அடக்கி விட்டு  எல்லோருக்கும் காபி வாங்க சென்றாள். 


ரூபி, மாலினி இருவரும் தேவையானவற்றை வாங்கி திரும்ப   பின்னே வந்தவன் மேலே மோதினாள் மாலினி. 


‘ சிட்… காபி கொட்டிருச்சே’ என்று வெகுவாய் வருந்தி விட்டு 

‘தவறு தன் மேல் தான்’ என்பதால் எதிரில் இருப்பவனுக்கு சாரி சொல்ல நிமிர்ந்தாள். 


ஆனால் அவனோ, 

“ வாய் தான் சரியா வேலை செய்யாதுன்னு நினைச்சா… கண்ணுமா?” என்று சிரிப்பை மறைத்து கொண்டு கூறினான். 


அப்போதுதான் கவனித்தாள்.

அது அவன் தான். கல்லூரியில் முதல் நாள் அவள் நடத்திய 

‘ஊமை நாடகத்தின் நாயகன் அவன்’ என்பதை. 


அவன் கூற்றில் கோவம் வர… வாயில் வந்த சாரியை முழுங்கி விட்டு

அவனை முறைத்தாள். 

அவளின் முறைப்பில் அவன் சிரிப்பு விரிய…


“ இல்லையே முட்டை கண் நல்ல வேலை செய்யுதே” என்று நக்கலடிக்க…


“ மிஸ்டர்… என்ன கொழுப்பா? 

எனக்கு கண்ணு தெரியல சரி… உனக்கு தெரியும் தானே…

ஏன் நீ பார்த்து ஒதுங்க வேண்டியது தானே?” என்று கடுகடுத்தாள்.


“ அட வாய் கூட வேலை செய்யுது!!” அவன் மேலும் அவளை சீண்ட 


ரூபிணி தான் அவள் காதில் முனங்கினாள். 

“ ஏய் வாடி போகலாம். நமக்கு எதுக்கு வீண் வம்பு?” என்று


அவளையும் முறைத்தவள் அவள் கையில் இருந்த கப்பை பிடுங்கி அவன் மேல் விசிறினாள். 


நொடியில் நிகழ்ந்த அந்த நிகழ்வில் அவன் ஒரு கணம் ஸ்தம்பிக்க 

மறுகணம் சிரித்தான். 


“ மேடமை போல காபியும் சூடா இருக்கு சிஸ்டர்… பார்த்து கூட்டிட்டு போங்க” என்று ரூபிணியை பார்த்து கூறினான். 


அவளுக்கும் தோழியின் செய்கை பிடிக்கவில்லை என்றாலும்…

‘இவன் என்ன சொல்வானோ?’ என்று பயந்த படி பார்க்க


அவன் அதை பெரிது படுத்தாமல் பேசியது ரூபிணிக்கு கொஞ்சம் நிம்மதியை தந்தது. 


அவனிடம் பார்வையால் மன்னிப்பை வேண்டி விட்டு மலையிறங்காமல் முறைத்து கொண்டு நிற்கும் மாலினியை இழுத்து சென்றாள். 


வகுப்பிற்கு வந்தவள் நெடுநேரமாகியும் கோபம் தனியாமல் அமர்ந்திருக்க 

ரூபிணி அவளை கிள்ளினாள். 


“ ஸ்ஸ்ஸ்… ஏண்டி லூசு?” என்று வலித்த இடத்தை தடவி கொண்டபடி இவள் கேட்க… 


“  நானா லூசு? நீ தான் லூசு.. 

எங்கடி போச்சு உன் மூளை?

அப்படியென்ன ஒரு மனுஷன் மேல சூடான காப்பிய கொட்டுற அளவுக்கு உனக்கு கோவம்?

அவரா இருக்க போய் பெருசு பண்ணலை. 

இதுவே வேற யாராவது இருந்தா… 

என்ன ஆகி இருக்கும்?” 


“ கன்னம் பேந்துருக்கும்.. இந்தாடி நீ எனக்கு பிரண்டா? இல்ல அவனுக்கா? 

அவனும் என்னை என்ன பேச்சு பேசுனான் பார்த்தல்ல.”என்று சப்பை கட்டு கட்டினாலும் அவளுக்கும் ஒரு குற்ற உணர்வு ஏற்பட்டது. 


‘ தான் அப்படி நடந்து கொண்டது அதிகப்படியோ?’ என்று. 

‘ அடுத்த முறை அவனை பார்த்தா அவனிடம் மன்னிப்பு கேட்டுறனும்’ என்று எண்ணியவாறு நேரத்தை நகர்த்தினாள். 


அவள் எண்ணியது போலவே அவனை சந்தித்தாள். 


ஆனால், அவள்  மன்னிப்பை கேட்க முடியாத படி 

அவன் அவளை ஹெச்.ஓ.டி.யிடம் கோர்த்து விட்டு இருந்தான்.


***

Post a Comment

0 Comments