15. உனக்காக நான் இருப்பேன் (final)

 






“ அக்கா என்ன விஷயம் சொல்லு? எதுக்காக இங்க கூட்டி வந்திருக்க?” என்று நூறாவது முறையாக கத்தி கொண்டிருந்தாள் மாலினி.


“ கொஞ்சம் பொறுமையா தான் இருவேன்’ என்று நளினி கூறி கொண்டிருக்க மது வந்து சேர்ந்தாள்.


“ மதுவா? இவள பார்க்கவா கூட்டி வந்த… இவள வீட்லயே பாத்து இருக்கலாமே” என்று மாலினி கூறி கொண்டிருக்கும் போதே மதுவோடு  வந்தவரை பார்த்து அதிர்ந்தாள். 


ஆம், வந்து கொண்டிருந்தது வாணியே… 


“ அக்கா… அது!!!” 


“ வசந்தோட அம்மா…” என்று நளினி கூற


‘ஆம்’  தலையசைத்தவள் விறுவிறுவென வெளியேற போக  அவசரமாக அவளை தடுத்தார் வாணி.


“நான் உன் கிட்ட பேசத்தான்மா வந்திருக்கேன்” என்றார். 


அவரிடம் நேரடியாக கோவத்தை காட்ட முடியாத மாலினி

நளினியையும்  மதுவையும் முறைத்தாள். 


“ அவங்க மேல எந்த தப்பும் இல்லமா.. நான் தான் உன்னை பாக்கணும்னு உன் கிட்ட பேசனும்னு சொன்னேன்” என்று வாணி கூற மாலினி எதுவும் கூறாமல் அமைதியாகினாள். 


சிறிது நேரம் அமைதியாக இருந்த வாணி பின் மெல்ல,


“ என்னை மன்னிச்சுடுமா” எனவும் மாலினி பதறினாள்.


உண்மையில் மாலினிக்கு அவர் மேல் கோவம் எதுவும் இல்லை. 

இருந்ததெல்லாம் வருத்தம் மட்டுமே…


‘ வசந்தின் அம்மா தன்னை புரிஞ்சிக்கலையே’ என்ற வருத்தமே…


ஆனால் இப்போது அவர் மன்னிப்பு கேட்கவும் அவளால் தாங்கவில்லை.


“ அய்யோ, என்ன ஆன்ட்டி?  நீங்க போய் என் கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு? எனக்கு உங்க மேல எந்த கோபமும் இல்லை ஆன்ட்டி நிஜமா??” என்றாள் உண்மையாக. 


“ உனக்கு அப்படி இருக்கலாம் மாலினி, ஆனா நான் தப்பு பண்ணி இருக்கேனே… அதுக்கு மன்னிப்பு கேட்டே ஆகணுமே” எனவும் மாலினி தலை கவிழ்ந்தாள். 


அவர் கூறுவது அவளுக்கு விளங்க அவளால் ஏதும் பேச இயலவில்லை.  

மீண்டும் மௌனம்… 


ஒரு நீண்ட பெரு மூச்சுடன் வாணி,

“இன்னைக்கே இதை பத்தி பேசிடலாம் மாலினி… நான் நேரடியா விஷயத்துக்கு வரேன். நான் பண்ண தப்புக்கு என் மகனை தண்டிச்சுடாதமா” என்று கூற மாலினி புரியாமல் பார்த்தாள். 


அவளின் பார்வையை உள் வாங்கி கொண்டவாறே,

“ நீ வசந்த்தை கல்யாணம் பண்ணிகிறியாமா?” என்கவும் கேட்டு கொண்டிருந்தவள் அதிர்ந்தாள். 


“ ஆன்ட்டி, என்ன இது? வசந்த்தை நான்….”  வார்த்தை வராமல் அவள் துடிக்க அவளின் நடுங்கிய கரங்களை அழுந்த பற்றிய மதுவோ அவளிடம் வசந்தின் கடந்த பக்கங்களை கூறினாள். 


கேட்டு கொண்டிருந்த மாலினி மெல்ல மெல்ல பின் வெடித்து அழுதாள். 


ஏன் இந்த அழுகை?


தன்னவன் மேல் கொண்ட நேசத்தாலா?


இல்லை… அவனின் அந்த துயருக்கு தானும் ஒரு காரணம் என்பதாலா?


இல்லை.. அச்சமயம் அவன் அருகில் தான் இல்லாமல் போன துரதிர்ஷ்டத்தாலா?


எதுவென்று புரியாமல் எண்ணத்தின் பிடியில் சுழன்று அழுது கரைந்து கொண்டிருந்தவளை வலிய கரம் ஒன்று தோள் தொட அந்த தோடுகையை உணர்ந்தவளோ விருட்டென அவனை ஏறிட்டாள். 


எதுவும் தோன்றவில்லை… 

சுற்றம் விளங்கவில்லை…

மறுகணம் அவனை வாரி அணைத்திருந்தாள். 


அவர்களின் அந்த பிரிவை… வலியை… அந்த அணைப்பினில் போக்கி கொண்டிருந்தனர். 


நீண்டதோர் அணைப்பின் பின் கண்ணீரோடு இடைவிட்டவர்கள் பின்பே சுற்றம் உணர இருக்கையில் அமர்ந்தனர். 


நளினி, மது, வாணி மூவரும் வசந்தின் வருகையின் போதே நகர்ந்திருக்க இருவரும் இப்போது தன்னந்தனிமையில்.


மௌனம் அவர்களை ஆட்கொள்ள  ஒருவர் விழி வழி மற்றவர் விழியில் கலந்து காதல் கவி பாடினர்.


மௌனத்திரை கலைத்து வசந்த் பேசினான். 


“ எப்டி இருக்க டாலு?” என்று.


“ம்ம்” அவளிடம் முனகல் மட்டுமே பதிலாக வந்தது. 


மீண்டும்  மௌனமே தொடர வசந்த் அவளையே பார்த்த வண்ணம்,

“ போலாமா பேபி” என்றான். 


அவளும்  அமைதியாக எழுந்து அவனை தொடர்ந்தாள். 

இருவரின் தனிமையில் சூழும் மௌனம் ஆயிரம் கதை சொல்லும். 


இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கை பற்றிய வண்ணம் சாலையோரமாய் நடந்து கொண்டிருந்தனர். 


‘ எங்கு செல்கிறோம்? என்றெல்லாம் எண்ணமில்லை. 

ஆனால் இந்த பயணம் காலம் முழுதும் இப்படியே தொடர வேண்டும். 

எல்லைகளில்லா நீண்டதொரு பயணமாக இருக்க வேண்டம்.’ என்பதே இருவரின் எண்ணமாக இருந்தது. 


இவர்கள் ஒருவருக்கொருவர் மன்னிப்பை வேண்டிக்கொள்ளவில்லை. 


பழைய கசப்புகளை பற்றி பேசி தீர்க்கவும் இல்லை. 


பேசினால் தீராத பகையே இல்லை என்பர். 


ஆனால் இங்கோ,

பேசி தீர்த்து கொள்வதை காட்டிலும் கசப்புகளை தூர கடாசி விட்டு நிகழும் தருணத்தை அப்படியே ஏற்று கொண்டோமானால் பகை பாராட்ட தேவையில்லை. 


அவளின் எல்லா பக்கங்களும் அறிந்த அவனும் சரி,

அவனின் எல்லா பக்கங்களும் அறிந்த அவளும் சரி… 

அவர்களின் கடந்த கால கசப்புகளை பற்றி என்ன பயன்? 

                      


       ***


மூன்று மாதங்கள் கடந்திருந்தது. 

கழுத்தில் வசந்த்- மாலினி பெயர்  பொறிக்கப்பட்ட டாலர் கொண்டு செயின் மின்ன…


ஏற்காட்டில் இருக்கும் வசந்தின் வீட்டில் இதய ராணியாய் வலம் வந்து கொண்டிருந்தாள் மாலினி. 


நெருங்கிய சொந்தங்கள் மட்டும் சூழ வசந்த்-மாலினி விவாஹம் எளிமையாக நடந்தேறியது. 


கணேஷ்- லட்சுமி தம்பதியர்  இருவரையும் மனம் குளிர வாழ்த்தினர். 


அத்தனை நாளும் உறுத்தி கொண்டிருந்த ஏதோ ஒரு உறுத்தல் இன்று விடை பெற்றது போல ஒரு அமைதி. 


அவர்கள் வழி ஏற்பட்ட ஒரு பிழை அவர்கள் வழியே தீர்க்கப்பட்டதாய் ஒரு நிம்மதி. 


மாலினியை தன் மகள் ஸ்தானத்தில் வைத்து இருவரும் அவர்களுக்கு வாழ்த்து கூறினர். 


இந்த நாளுக்காய் காத்து தவமிருந்த கல்யாணி 

சந்தோஷ பூரிப்பில் முகம் விகாசிக்க மகளின் உச்சி முகர்ந்து முத்தம் வைத்து அவளை கட்டி கொண்டார் கண்ணீருடன். 


அது நிச்சயம் அந்த தாய் தினமும் மகளின் எதிர்காலம் குறித்து வடித்த கவலை தோய்ந்த கண்ணீரில்லை என்பதை நான் சொல்ல தேவையில்லை. 


“ பேபி எங்க இருக்க?” என்று கத்திகொண்டே வந்த  வசந்த் அடுக்களையில்  நடமாடி கொண்டிருந்தவளை பின்னால் இருந்து கட்டி கொண்டவாறு கிசுகிசுத்தான்.


“ பேபி, என்ன  பண்ற?” என்று. 


“ ம்ம், கிரிக்கெட் விளையாடுறேன் பாத்தா தெரியல” என்று அவனை உலுக்கி தள்ளியவள் மீண்டும் தன் வேலையை தொடர அவனும் மீண்டும் அவளை நெருங்கினான். 


“டேய், சும்மா இரு” என்று அவள் வாய் கூறினாலும் மனம் அவன் செய்கையை விரும்ப  வெட்கி சிரித்து கொண்டாள். 


அவளின் சிரிப்பை ரசித்த வண்ணம் அவனும் குனிந்து அவள் காதில்

“ கிடைச்சுட்டு பேபி” என்கவே,


சட்டென்று அவன் புறம் கரண்டியோடு திரும்பியவள்  கண்களை அகல விரித்து “நிஜமாவாடா?” என்றாள்.


கரண்டியை பிடுங்கி அதன் இடத்தில் வைத்தவன், 

அவளிடம் இரு பேப்பரை நீட்ட வாங்கி பார்த்தவள் ஆனந்த கூச்சலில் அவனை கட்டிக்கொண்டாள். 


அவர்களின் தேனிலவிற்கு வெனிஸ் செல்வதற்கான டிக்கெட்டுகள் அது.


கிடைக்காமல் தட்டி கழிந்த வண்ணம் இருக்க ஒருவழியாக அடித்து பிடித்துக்கொண்டு வாங்கி வந்திருந்தான்.


அந்த வாரக்கடைசியில் இருவரும் கிளம்புவதாக தீர்மானம்.


கதிர்- மதுவையும்  வசந்த் அழைக்க…


“ எதுக்கு அங்கேயும் உங்க பொண்டாட்டி பின்னாடியே என் பொண்டாட்டி சுத்திட்டு இருக்கவா? போங்க மாமா… நா என் ஹனிய வேற நாட்டுக்கு கடத்திட்டு போக போறேன். இப்போவும் அடிக்கடி ரெண்டு பேரும் நைட் ரொம்ப நேரமா போன்ல கதை பேசிட்டு இருக்காங்க…. இதுல ரெண்டும் ஒன்னா சேர்ந்தா என்னையும் உங்களையும் கண்டுக்க மாட்டாங்க” என்று கதிர் கூற அருகில் இருந்த மது அவனை அடித்தாள். 


செல்லில் இந்த பக்கம்  ஸ்பீக்கரில் கேட்டு கொண்டிருந்த மாலினி வசந்தை முறைக்க அவன் அசடாக சிரித்தான்.


“ மது என் பங்குக்கு நாலு சேர்த்து வை… அவனுக்கு” என்று மாலினி கூற 


“ சரி மாலினி” என்று மேலும் சில அடிகளை அவன் மேல் பொழிந்தாள்.


இந்த சில காலத்தில் மாலினியும் மதுவும் இணை பிரியா தோழிகளாய் நெருங்கி இருந்தனர். 


“ கேட்குதா மாமா? இந்த இரு பிறவிகளை ஒன்னா சேர விட்டோம் நம்ம பாடு அதோ கதி தான்… ஞாபகம் வச்சிக்கோங்க” என்று மனைவியிடம் அடிகளை வாங்கியவாறே கதிர் கூற 

கேட்டு கொண்ட மூவருமே சிரிப்பில் ஆழ்ந்தனர். 


“ மது…”


“ ம்ம்ம்,”


“ மதுஊஊஊ”  ராகம் போட்டு கதிர் அழைக்கவே 


“ என்னடா? ராகம் போடுற இங்க தான இருக்கேன் சொல்லு” என்றாள்.


“ அது ஒன்னுமில்ல…”


“ ஒன்னுமில்லனா பேசாம படு…” என்று அந்த புறம் திரும்பி படுத்த மதுவின் முகத்தில் சிரிப்பு. 


“ஏய், என்னடி நம்ம ஜெண்டில்மேன் அக்ரிமெண்ட் மறந்து போச்சா?” என்று அவன் கேட்க,


“ என்ன அக்ரிமெண்ட்?” என்றாள் திரும்பாமலே. 


“ம்ம், செவ்வாய்க்கு சேட்டிலைட் அனுப்ற அக்ரிமெண்ட்… நடிக்காத மது, இங்க திரும்பு… நீ தானே சொன்ன? மாலினியை வசந்த் கூட சேர்த்து வச்சத்துக்கு அப்றம் தான் நமக்குள்ள எல்லாம்னு”


“ ஆமா அதுக்கென்ன?”


“அதுக்கு என்னவா? அடியே, அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இப்போ ஹனிமூன்லாம் போறாங்கடி… ஆனா நாம?” என்று அவன் கூறவும் அவன் புறம் திரும்பி படுத்தவள் அவனின் அந்த பாவ முகத்தில் சிரித்து விட்டாள். 


“ இப்போ என்ன? அதான் நாம ஹனிமூன் போனோமே… ஏற்காட்டுக்கு” என்று அவள் கூற அவன் மேலும் முறைத்தான். 


“ அதுக்கு பேர் ஹனிமூனாடி? அங்கேயும் நீ மாலினிக்கு வேண்டி தான என்னை இழுத்துட்டு போன” என்று அவன் கேட்க இவள் சிரிப்பு பெரிதாய் விரிந்தது. 


“ சரிடா மாமு… இப்போ என்ன நாம செகண்ட் ஹனிமூன் போகணும் அவ்ளோ தான போயிட்டா போச்சு” என்று அவள் கூற அவளை வெட்டவா? இல்லை குத்தவா? என்று பார்த்தான். 


“ இன்னும் என்னடா?” என்று அவள் கேட்க,


“ இப்போ நான் என்ன கேட்குறேன்னு உனக்கு புரியல அப்டி தான?” என்று அவன் முறைக்க 


இவள் முகத்தில் மெல்லியதோர் வெட்கம்,


“ புரியல” என்று அவள் இடவலமாக தலையாட்ட அவளின் அந்த வெட்கத்தையும் அவளின் கொஞ்சலையும் ரசித்தவன் அவளின் புறம் நெருங்கி அவள் ஜிமிக்கியை சுண்ட அவன் விரலின் தீண்டலில் பெண் அவள்  மயங்கி கிறங்கி கண் மூடினாள். 


அத்தனை நாட்களும் காத்திருந்த அந்த காதல் உள்ளம்….

அன்று கரையுடைத்து சென்றது.

இனி நாம் இங்கு அதிக பட்சம். 


                                      ***


“ எல்லாம் பேக் பண்ணியாச்சுல பேபி… ஒன்னும் விட்டு போகலயே” என்று மீண்டும் மீண்டும் கேட்டு கொண்ட மாலினியை முறைத்தான் வசந்த். 


“ அடியே, நாம ஒன்னும் ஆள் இல்லா வனாந்தரம் போகல… அங்கே எல்லாமும் கிடைக்கும்.. அப்டி ஒருவேளை நாம எதையும் மறந்து விட்டு போய் இருந்தா கூட அங்க வாங்கிக்கலாம்.” என்று பொறுமையிழந்து கூறி கொண்டிருந்தான் வசந்த். 


மிதக்கும் நகரான வெனிஸில் ஒவ்வொரு மூலையாக சுற்றி வந்தனர் இருவரும். 


அது அவர்களுக்கு மட்டுமே ஆன உலகம்… 


அதில் அவ்விருவரை தவிர வேறவரும் இல்லை. 


சுற்றி உள்ள ஜனம் மொத்தமும் அவர்களின் பார்வைக்கு அப்பால். 

படகில் போய் கொண்டிருந்த அவன் அந்த சூழலை ரசித்தான். 

அவளும் தான்.


 குளிர் காற்று அவர்களின் மேனி தழுவ

கண் மூடி கிறங்கியவன் மெல்ல அவளிடம், “ ஏதாச்சும் பாடு பேபி” என்று  கேட்டான். 


அவளுக்கும் பாட வேண்டும் போல்  தோன்றியதோ என்னவோ கண் மூடி பாடினாள்.


புது வெள்ளை மழை  இங்கு பொழிகின்றது… 

இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது… 

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது.. 

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…


அவளோடு அவனும் இணைந்து கொண்டான் அந்த பாட்டில். 


புது வெள்ளை மழை  இங்கு பொழிகின்றது… 

இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது… 

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது.. 

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…


நதியே… நீயானால்  கரை நானே

சிறு பறவை… நீயானால் உன் வானம் நானே… 


புது வெள்ளை மழை  இங்கு பொழிகின்றது… 

இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது… 


பெண் இல்லாத ஊரிலே 

அடி ஆண் பூ கேட்பதில்லை… 


பெண் இல்லாத ஊரிலே 

கொடிதான் பூ பூப்பதில்லை.. 


உன் புடவை முந்தானை சாய்ந்ததில் 

இந்த பூமி பூப்பூத்தது… 

இது கம்பன் பாடாத சிந்தனை… 

உந்தன் காதோடு யார் சொன்னது…


புது வெள்ளை மழை  இங்கு பொழிகின்றது… 

இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது… 

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது.. 

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…


புது வெள்ளை மழை  இங்கு பொழிகின்றது… 

இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது… 



நீ அணைக்கின்ற வேளையில் 

உயிர்ப்பூ திடுக்கென்று மலரும்… 


நீ வெடுக்கென்று ஓடினால்

உயிர்ப்பூ சருகாக உலரும்..


இரு கைகள் தீண்டாத பெண்மையை

உன் கண்கள் பந்தாடுதோ… 


மலர் மஞ்சம் சேராத பெண்ணிலா 

எந்தன் மார்போடு வந்தாடுதோ…




புது வெள்ளை மழை  இங்கு பொழிகின்றது… 

இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது… 

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது.. 

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…


நதியே… நீயானால்  கரை நானே

சிறு பறவை… நீயானால் உன் வானம் நானே… 



புது வெள்ளை மழை  இங்கு பொழிகின்றது… 

இந்த கொள்ளை நிலா உடல் நனைகின்றது… 

இங்கு சொல்லாத இடம் கூட குளிர்கின்றது.. 

மனம் சூடான இடம் தேடி அலைகின்றது…



இனி அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் 


***உனக்காக நான் இருப்பேன்** என்று சொல்லாமல் சொல்லி பயணமாகி கொண்டிருக்கின்றனர். 

அவர்களின் காதல் வாழ்க்கையை நோக்கி…

                


                         ** முற்றும் **






Post a Comment

0 Comments