26. நட்பெனும் பூங்காற்றே (final)



“எங்கே போகிறோம்?” என்ற கேள்வியை நூற்றி ஓராவது முறையாக மஞ்சு கேட்க காரின் முன் சீட்டில் இருந்த அனுவும் இளங்கோவும் சிரித்து கொண்டனர்.

சிறிது நேரத்தில் கார் ஒரு பெரிய வீட்டின் முன் நிற்க காரில் இருந்து இறங்கியவர் யோசனையாக பார்த்தார்.

“வாங்க வாங்க.. ரெண்டு பேரும் உனக்கு தான் ரொம்ப நேரமா காத்துட்டு இருக்காங்க போ மா..” என்று ஒரு பெண்மணி கூற இவள் சிரித்தாள்.

“சரிங்க ஆன்ட்டி தர்ஷினி உள்ள இருக்காளா? நான் போய் பாத்துட்டு வரேன்..” என்று திலகாவிடம் கூறியவள் தன் பெற்றோரை அழைத்து சென்றாள்.

“ஏய் அனு, உன் ஃப்ரண்ட் ஒருத்திக்கு கல்யாணம்ன்னு சொன்னியே அங்கயா வந்து இருக்கோம்? யார் உன் கூட படிச்சவளா? அப்டினா நீ மட்டும் கல்யாணத்துக்கு வர வேண்டி தானடி.. எங்களையும் ஏன் இழுத்துட்டு வந்த? இங்க எங்களுக்கு யார தெரியும்?” என்று மஞ்சு அடுக்கி கொண்டே செல்ல

“அம்மா… ரிலாக்ஸா இரு.. கொஞ்சம் கேப் விடுமா.. உன் எல்லா கேள்விக்கும் இதோ வரா பரு அவ பதில் சொல்லுவா?” என்று அனு கை காட்டிய திசையில் பார்த்த மஞ்சு அங்கு தாரணியை கண்டமஞ்சு ஓடி சென்று அணைத்து கொண்டார்.

இளங்கோ மூலம் ஓரளவுக்கு மேலோட்டமாக விபரம் அறிந்து வைத்து இருந்தவர் மனதில் பயம்,

“பிள்ளைய போல வளர்ந்தவ… இப்போ எங்க என்ன கஷ்ட படுறாளோ?” என்று தனக்குள் புலம்பி கொண்டு இருந்தவர் இப்போது அவளை காணவும் ஆசையாக அவளை அணைத்து உச்சி முகர்ந்தார்.

நாதனும், “ எப்டிமா இருக்க?” என்றார் அதே பரிவோடு.

“நல்ல இருக்கேன் அப்பா.. நீங்க எப்டி இருக்கீங்க? எப்டி இருக்கீங்கமா?” என்று கேட்டாள் அவளும் அவரை பிரிந்து வாடியவள் ஆயிற்றே..

“என் கிட்ட பேசாத போ… ஒரு வார்த்தை என் கிட்ட சொல்லிட்டாவது போகணும் தோணிச்சா உனக்கு? எவ்ளோ பயந்து போயிட்டேன் தெரியுமா?” என்று கூற

அவளும் புன்னகையோடு அவரை அணைத்து கொண்டாள்.

“சாரிமா…” என்று கொஞ்சலாக கூற

அனு, “ அப்பா அம்மா, இவ போனதுல நமக்கு ஒரு நல்லது நடந்து இருக்கு.. அது என்ன அப்டினா… நாமளே தேடி இருந்தாலும் கிடைக்காத அளவுக்கு ஒரு மாப்பிள்ளையை பார்த்து வச்சிருக்கா..” என்று கூறினாள் அந்த சூழ்நிலையை மாற்றும் பொருட்டு.

முதலில் அவள் சொல்வது விளங்காமல் இருவரும் பார்க்க பின்

“அனு…. நிஜமாவா…. தாரணி…. யாருமா அது… நாங்களும் பாக்கணுமே? எங்க தேவதைய கட்டிக்க யாருக்கு கொடுத்து வச்சிருக்குன்னு?” என்று நாதன் கூற

ஒரு அம்மாவாக மஞ்சு கேட்டாள் இளங்கோவின் காதில்,

“இளங்கோ, இந்த விஷயம் உனக்கும் தெரியுமா? ஏன் எங்க கிட்ட சொல்லல நீ? அப்புறம்அந்த பையன்.. அது யாரு என்னனு நல்ல விசாரிக்கணும்.. அப்புறம் தான் மத்தது எல்லாம் சொல்லிட்டேன்?” என்று கூறி கொண்டு இருப்பது திலகாவின் காதில் விழ அவர் சிரித்த முகத்துடன்

“தேவையே இல்லைங்க… இதோ இவன் தான் பையன்… அனுவே சொன்ன மாதிரி தேடி பார்த்தாலும் இப்டி ஒரு பையனை கண்டெடுக்க முடியாது..” என்று பெருமையாக கூறினார்.

அருகருகே நின்று கொண்டிருந்த தாரணியையும் அஷ்வினையும் பார்த்த மஞ்சுவுக்கும் திருப்தி தான்.

அவரின் பார்வையே அவர் மெச்சுதலை கூற

 யார் சொன்னது வெட்கம் பெண்மைக்கு அழகென்று?

இதோ அவளோடு சேர்த்து அவனும் அழகாய் வெட்கத்தில் நெளிந்தான்.

ஜோடி பொருத்தத்தில் இருவருக்கும் ஒருவரை ஒருவர் அள்ளி வழங்கும் பேருவகையாக இருக்க

தங்கையின் திருமணத்தில் பொறுப்பான தமயனாக அவன் ஓடியாடி செய்யும் செயல்களில்

அவர்களை மேலும் கவர்ந்து சென்றான்.

வந்த சில நிமிடங்களில் அவரிடம் நல்ல பெயர் எடுத்திருந்தான் அஷ்வின்

அவருக்கும் இப்போது மனதளவில் முழு சம்மதம் என்பதாய் கணவரிடம் கூற

அவரோ, ‘ உனக்கு முன்னே நான் முடிவு பண்ணிட்டேன்’ என்று செய்தி அனுப்பி கொண்டு இருந்தார்.

வேறென்ன அனைவரின் மனதிலும் சந்தோசம் துள்ள

அவையோரின் வாழ்த்துக்களோடு

தன் ஆசை காதலி தர்ஷினியை தன் மனையாளாக ஆக்கி கொண்டான் சந்தோஷ்.

அடுத்த அடுத்த மூன்று நாட்களும் விசேஷமாக நகர

அன்று..

“ஏய் அனு... என்ன நீ நானும் பாக்குறேன் ரெண்டு நாளா என்னை கண்டுக்கவே இல்ல…?” என்று அந்த அறையின் வளைவில் அவளை உள் இழுத்து சுவற்றில் சாய்த்து கொண்டு அருகே நின்ற படி கேட்டிருந்தான் இளங்கோ.

“அய்யோ நகரு மாமா.. யாராவது பார்த்தா… என்ன ஆகும்?” என்று கெஞ்சி கொண்டிருந்தாள்.

“அப்டியாவது நமக்கும் கல்யாணம் பண்ணி வைக்கட்டுமே செல்லம்..

 நானும் எவ்ளோ நாள் தான் காத்திருப்பேன்..?” என்று அவன் ஏகத்துக்கும் கவலை கொள்ள அவன் கவலையில் இவள் சிரித்து வைத்தாள்.

“சிரிக்குற நீ.. கண்ணு முன்னால இப்டி இடுப்பு தெரியிற மாதிரி சேலை கட்டிட்டு அங்கையும் இங்கையும் நடமாடி மனுஷனை கடுப்பேத்துறதும் இல்லாம.. இப்போ என் நிலைமையை பார்த்தா உனக்கு சிரிப்பு வருதா.. உன்னை….” என்று கோபத்தோடு கூறினாலும் இரண்டு நாட்களாய் அவனுள் அவள் எழுப்பி சென்ற கிளர்வை தாபமாக அவள் இதழில் இறக்கி வைத்தான்.

“ம்க்கும்..” என்று யாரோ தொண்டையை செரும அவசரமாக மீண்ட இருவரும் ஆளுக்கு ஒரு திக்கில் ஓட முற்பட

செருமியபடி நின்ற சந்தோஷ் கையில் வசமாக சிக்கி கொண்டான் இளங்கோ.

அருகே கேலி ஓடும் முகத்தோடு அஷ்வினும்.

அந்த பக்கம் ஓடி தப்பியிருந்தாள் அனு.

ஆனாலும் அறைக்குள் வந்து நின்றவளின் சிவந்த முகமே காட்டி கொடுக்க

தோழியர் “என்ன?” என்று கேட்டு படுத்திவிட்டனர்.

இங்கு இளங்கோவோ அய்யோ பாவம்…

“மச்சான்… இங்க கொஞ்ச நாளா ஒரு அமுல் டப்பா சுத்திட்டு இருந்துச்சே நீ பார்த்த?” என்று சந்தோஷ் கேட்க

“ அந்த அமுல் பேபி… இப்போ தான் வளர்ந்து ரொமான்டிக் ஹீரோவா மாறி ஒரு செம ஹாலிவுட் லெவல் ரொமான்டிக் ஸீன் நடிச்சுச்சு.. நீ பாக்கலையா?” என்று அஷ்வின் கூறினான்.

அவர்களின் கேலியில் வெட்கம் கொள்ள

“ போங்க ப்ரோஸ்..” என்று நழுவ சென்றவனை விடுவதாய் இல்லை மேலும் அவனை வெட்கம் கொள்ள செய்த பின்பே போனால் போகட்டும் என்று விட்டனர்.

உண்மையில் அவர்களுக்கும் சந்தோஷமே..

அதிலும் அஷ்வின்,

அன்று அவனை ஒரு நண்பனாக மதித்து தன் கவலைகளை கொட்டியவன் இன்று கவலை மறந்து காதல் நிறைவேற நிறைவாய் நின்றவனை கண்டு அவனும் மனம் நிறைந்தான்.

அன்றைய இரவு..

அனைவரும் உறங்கி கொண்டிருக்க

தோட்டத்தில் குளிர் காற்றை உள்ளிழுத்து சுவாசித்து கொண்டிருந்த தாரணி காதலாய் தன் கள்வன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

தன்னிச்சையாக அவளை தன்னோடு அணைத்து கொண்டது அவன் கைகள்.

“ ரொம்ப சந்தோஷமா இருக்கேன் அஷ்வின்.. இந்த உலகத்துலயே இந்த நொடி இவ்ளோ சந்தோஷமா இருக்க ஒரு ஆள்னா அது நானா தான் இருப்பேன்..”என்று கூற

அவன் ஏனென்று கேட்கவில்லை.

தெரிந்த பதில் தானே!!

வாழ்க்கை அவளுக்கு எல்லாவற்றையும் காட்டி சென்று விட்டதே..

ஓர் நொடியில் அனாதையாக மாற்ற பட்டவள் முன் எல்லாமுமாக தர்ஷினி எனும் நட்பு வந்து நின்றது.

காதலை பற்றி சொல்லவும் வேண்டுமா??

இனி கிடைக்கவே கிடைக்காது என்று எண்ணி கொண்டிருக்கும் ஒரு பொருள்

மாய விந்தையாக கைக்குள் சிக்கினால் எவ்வளவு பேரானந்தம் வரும்..

அது போலவே அஷ்வின் அவளுக்கு கிடைத்தது.

பிறக்கும் போதே தாயை இழந்தவள் இப்போது இரு தாய்க்கு சேயாக…

ஒரு அன்பான அண்ணனுக்கு தங்கையாக..

இனி வாழ போகும் வீட்டின் மகராணியாக..

சோகங்கள் பல சுமந்து வந்த வாழ்க்கையின் பக்கங்கள் இப்போது சுகமாக

எல்லா சொந்தங்களையும் அவளுக்கு அள்ளி கொடுத்தது.

இனியும் கேட்க வேண்டுமா??

அவளின் சந்தோஷத்திற்கான காரணத்தையும்..

நட்போடு காதலும் இனி அவளின் வாழ்வை இனிதான

தென்றலாக வீசி செல்லும் அல்லவா??

அதற்கான முன் அடியே அந்த குளிர் நிலவின்

பூங்காற்றும்.

        ** முற்றும்**


Post a Comment

0 Comments