சிக்னலில் காத்து கொண்டிருந்தவன் கிளம்ப தயாராக வண்டியை கிளப்பினான். சரியாய் அதே சமயம் ஒரு மூன்று பேர் குடித்து விட்டு வண்டியில் தாறுமாறாய் அவனை கடந்து சென்றனர். சும்மா செல்லாமல் அப்போது தான் வண்டியை கிளப்பியவனை ஒரு தட்டு தட்டி செல்ல...
நிலை தடுமாறி அங்கும் இங்கும் வண்டியை ஒடித்து கடைசியில் கீழ் விழாமல் சரியாய் நின்றான். ஆனால் ஒரு காரின் மேல் மோதியதை அவன் கவனிக்கவில்லை.
அதற்குள் காரில் இருந்து வெளியே வந்த ரகுராமன்...
“ஏன்டா? வண்டிய ஒழுங்கா ஓட்ட தெரிஞ்சா ரோட்ல வந்து ஓட்டு… இல்லனா வீட்டுலயே இருக்க வேண்டியதானே... நல்ல வந்து சேர்ந்து இருக்கானுக பாரு? குடிச்சிட்டு வண்டிய ஓட்டிட்டு ரோட்ல தேமேனு போய்ட்டு இருக்க வண்டியில மோத வேண்டியது. அப்புறம் எங்க தலை உருள வேண்டி வரும்”
வாய்க்குள் இன்னும் எதேதோ முனக..
முதலில் மன்னிப்பு கேட்க வாயெடுத்தவன், அவர் பேசிய வார்த்தைகளின் ரீதியில் கோபம் தலைக்கேற,
‘ யாரை பார்த்து குடிகாரன்னு நினைச்சான் இந்த ஆள்’ என்ற கோபத்தில்,
“ஆமாய்யா, நான் குடிச்சிருக்கேன்.. நீ தான் வந்து எனக்கு க்ளாஸ்ல ஊத்தி கொடுத்த.. வந்துட்டாரு பேச.. யார் வீட்டுலயே இருக்கனும்? வயசான காலத்துல நீ வீட்டுல இருக்குறத விட்டுட்டு என்னை சொல்றியாக்கும்?”
அவரின் முகமே அவரின் கோபத்தை வெளிப்படுத்த திருப்தியாய் உணர்ந்தான்.
‘யாரை பார்த்து என்ன சொன்னார்? பதிலுக்கு பதில்’ என்று மனதில் கூறி கொள்ள வைத்தது.
பதிலுக்கு அவர் பேச இவன் பேச என வார்த்தைகள் தடிக்க ட்ராஃபிக் இன்ஸ்பெக்டர் வந்து கூட்டத்தை விலக்கி அவரவரை அனுப்பி வைத்தார்.
ரகுராமனின் மேல் இருந்த கோபத்தை பைக்கில் காட்ட அது ஒரே உதையில் கிளம்பியது. வேகம் கூட்டி சிட்டென பறந்தான்.
ஆயினும் அவன் கோபம் அடங்கிய பாடில்லை.
அவர் கூறிய வார்த்தைகளை அவன் காலப்போக்கில் மறந்தாலும் , இன்று அவரை பார்த்த நொடியில் மீண்டும் கோபம் திரும்பியது.
‘எவ்வளோ சந்தோஷமாய் ரிஷிகாவை தேடி சென்றான். அந்த சந்தோஷத்தை நொடியில் காவு வாங்கியது. அதையே தூக்கி தின்னும் அளவு அவளே அந்த ஆளின் மகள்’ என்ற செய்தியில் அவன் மனம் சுக்கலாகியது.
மனதின் காயம் காதலை தின்றது.
நண்பனின் கோபம் புரிந்தாலும்,
‘அதனால் பாதிக்கப்படுவது ரிஷிகா தான் என்பதை யார் அவனிடம் சொல்வது?’ தெரியாமல் கூறி விட்டால்,
“என்னை பற்றி தெரிந்து எப்படி இப்படி பேசலாம்?” என்று அவன் மேலேயே கோபம் கொண்டாலும் ஆச்சர்ய பட ஒன்றுமில்லை.
அவனோடே பேசாமல் போனாலும் போய்விடுவான்.
அதனால் ஏதும் கூறாமல் அமைதியாகி விட்டான் கவுதம்.
***
0 Comments