காலையில் எழுந்ததில் இருந்தே வழக்கமான வேலைகளில் மனம் லயிக்கவில்லை.
உணவு மேஜையில், தட்டில் வெறும் இட்லியை மட்டும் வைத்து கொண்டு சாப்பிடும் மகளையே விசித்திரமாய் மீனாவும் ரகுராமனும் பார்க்க
‘இயல்பாய் இருப்பது போல் காட்டி கொள்ள படாத பாடு பட்டாள்.’
உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து ஆபிசிற்குள் நுழைந்தவளுக்கு போனும் கையுமாக வனிதாவும் மஹேனுடன் கை கோர்த்து பேசி சிரித்து கொண்டிருக்கும் மஹிமாவும் கண்ணில் பட கண்ணை கரித்தது.
‘தன்னால் இப்படியெல்லாம் ஏன் சகியோடு இருக்க முடியவில்லை?’ என்ற தன்னிரக்கம் உண்டானது.
விடுவிடுவென்று தன் கேபினுக்குள் சென்று கணினியுள் தலையை புகுத்தி கொண்டாள்.
தத்தி தத்தி டைப் பண்ணி முடித்தவளுக்கு சிஸ்டம் எரர் காட்ட
“ஸ்ஸ்ஸ்” என்று தலையை பிடித்து கொண்டாள்.
‘என்னடா இது?’ என்றாகி போனது.
“ப்ரசாந்த்” அந்த வழியாக சென்ற அவள் கலீகை அழைத்தாள். “
என்ன ரிஷிகா?”
“சிஸ்டம் எரர் காட்டுது.”
“அப்படியா?” சட்டென்று குனிந்து அவளின் திரையில் பார்வையிட்டு நொடிக்கும் குறைவான வினாடியில் சரி செய்து விட்டு நிமிர்ந்தான்.
இத்தனைக்கும் அவனின் நகமும், ஏன் மூச்சு காற்றும் கூட அவள் மீது பட வில்லை. ஏனோ? அவனின் அந்த செய்கை அவளுக்கு கடந்த காலத்தை நினைவு படுத்தியது.
அன்றைய நாளில் போக்கு காட்டி கொண்டிருந்த சகியின் நினைவு முழு உருவம் பெற்று அவளின் மனத்திரையில் வந்து நின்று அவளை பார்த்து புருவம் உயர்த்தியது.
தாங்க மாட்டாமல் அழுது விட்டாள் பேதை.
“ஹேய், ரிஷிகா ஆர் யூ ஓகே...?” புரியாது ப்ரசாந்த் வினவ,
“இல்லை ப்ரசாந்த் ஐம் நாட் ஓகே... என்னால இன்னைக்கி வர்க் பண்ண முடியும்னு தோணலை?? நான் சார்ட்ட சொல்லிட்டு கிளம்புறேன்.”
“ஸ்யூர்?? நீ உன் ஸ்கூட்டில போய்டுவியா? இல்லை நான் என் கார்ல் ட்ராப் பண்ணவா?”
“நோ தேங்க்ஸ் , நான் போய்க்குவேன்.” சொன்னபடி தன் மேலதிகாரியிடம் கூறி கிளம்பி விட்டாள்.
வீட்டின் வாயில் வரை வந்து விட்டவள் ஒரு கணம் தயங்கி நின்றாள். அலுவலகத்தில் சொல்லி விட்டு வந்து விட்டோம், ‘இனி அம்மாவை எப்படி சமாளிப்பது? வந்தாயிற்று, சமாளிப்போம்’ என்று வீட்டிற்குள் சென்றவள்,
அதிசயத்திலும் அதிசயமாக அந்த நேரம் அங்கு அப்பா இருப்பதை பார்த்தாள்.
“என்னமா இப்போதானே ஆபிஸ்க்கு போன அதுகுள்ள வந்துட்ட?”
“ஒன்னுமில்லைப்பா தலை வலி அதான் லீவ் சொல்லிட்டு வந்துட்டேன்.” ரகுராமன் அவளை நெற்றி சுருங்க பார்த்தார்.
“நீங்க என்னப்பா ஆபிஸ்க்கு போகலை?”
“திலீபை பார்த்துக்க சொல்லிட்டேன்மா இன்னைக்கு லீவ்.”
அவரின் பார்வை எடை போடுவதை நிறுத்த வில்லை. அவரை பார்ப்பதை தவிர்த்து வேறு திக்கில் பார்த்தாள்.
“என்னப்பா திடீர்னு?” எதோ கேட்க வேண்டும் என்பதற்காக கேட்டாள்.
“ஒன்னுமில்லைமா... அப்புறம் நானே உன் கிட்ட கொஞ்சம் பேசனும்னு நினைச்சிட்டு இருந்தேன்மா..”
தந்தையின் பீடிகையில் அவரை புரியாமல் பார்த்தாள்.
“என் ஃப்ரண்ட் சங்கரன் தெரியும்லமா?”
“ம்ம்ம் ... தெரியும்பா”
“ அவனோட பையனுக்கு ரொம்ப நாளாவே உன்னை கல்யாணம் பண்ண கேட்டான்மா... நான் தான் பிடி கொடுக்காம இருந்தேன். நீ என்னமா சொல்லுற...?”
“அப்பா இப்போ என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்?”
“அவசரமில்லைமா ... அவசியம், நான் நல்லா இருக்கும் போதே உனக்கு கல்யாணத்த பண்ணி பார்த்துடணும்னு ஆசை அவ்வளோ தான்..”
“அப்பா என்னப்பா இப்படியெல்லாம் பேசுறீங்க?”
“தெரியலமா எதோ கெட்டது நடக்க போற மாதிரி உள்ளுக்குள்ள பயமா இருக்குமா.”
“அப்பா என்னதிது சின்ன பிள்ளையாட்டம்?”
“அதவிடுமா இப்போ நீ என்னதான் சொல்ல வர்ற?”
“எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிக்கனும்னு தோணலைப்பா...”
“சரி, இந்த இடம் பிடிக்கலைனா உனக்கு பிடிச்ச வேற இடம் பாக்குவோமா?”
இதற்கு மேல் ஒரு தந்தையால் வேறு எப்படி கோடிட்டு கேட்க முடியும்...
‘உனக்கு யாரையும் பிடித்திருக்கா என்று?’ அவளுக்கும் புரிந்தது.
‘எப்படி சொல்வாள் எனக்கு ஒருவனை பிடிக்கும் அவனுக்கு???’ வர நினைத்த கண்ணீரை உதடு கடித்து அமர்த்தினாள்.
“ப்சு.. அப்பா எனக்கு இப்போ கல்யாணம் பண்ணிகணும்னு தோணலை...”
கிளிபிள்ளை போல் கூறி கொண்டிருந்தாள்.கோபம் வந்தது ரகுராமனுக்கு வாழ்வின் முதல் முறையாக தன் மகளை கடிந்து கொண்டார்.
“என்ன நீ? நீ என்ன சொன்னாலும் நான் கேட்கனும்னு நினைச்சிட்டு இருக்கியா என்ன..? வனிதாவுக்கும் மஹிமாவுக்கும் உன் வயசு தானே ஆகுது அவங்களுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டாங்க தெரியும்ல? நீ மட்டும் ஏன் இப்படி பிடி கொடுக்காம பேசுற? உனக்கு இரண்டு நாள் டைம் தரேன் அதுக்குள்ள யோசிச்சு நல்ல முடிவா சொல்லு இல்லனா அப்பா கிட்ட விடு நானே பாத்துக்கறேன்.” கோபமாய் பேசிவிட்டு வெளியேறிவிட்டார்.
நிஜமாகவே ‘தலைவலி வரவா?’ என்று பயமுறுத்தியது.
கைப்பையை சோபாவில் விட்டெறிந்தவாறே தொப்பென்று அமர்ந்தாள்.
இருகைகளாலும் தலையை பிடித்து கொண்டாள். சூடான டீயின் மணம் நாசியை தொட நிம்ர்ந்தாள்.
அருகில் இருந்த மீனா இவள் கையில் டீயை கொடுத்தார். அதை வாங்கி மடக்மடக்கென்று உள் தள்ளினாள்.
‘தன் உள்ளக் கொதிப்பை இது ஆற்றுமா?’ என்ற வேதனையோடு.
இருக்கையை விட்டு கைப்பையோடு எழுந்தவள், “அம்மா, மனசுக்கு கஷ்டமாய் இருக்கு கொஞ்சம் வெளிய போய்ட்டு வறேன்” என்று நடந்தாள்.
“ரிஷிகா???”என்றவரின் அழைப்பு காற்றில் கலந்தது.
கடற்கரையில் நிழலுக்காக போடப்பட்டிருந்த குடையின் கீழ் அமர்ந்தவாறு கடலை வெறித்து கொண்டிருந்தாள்.
மிதமான வெயிலிலும் அலைகடல் எழுப்பிய குளிர் காற்று அவளின் மனதை சமன் படுத்தவில்லை.
கடந்து சென்றவர்கள் அவளை ஒரு தினுசாய் பார்ப்பதையும் உணரவில்லை.
ஏன்? மறைவாக இருந்த சாஹித்யனும் அவளையே பார்த்து கொண்டிருப்பதை உணரவில்லை.
***
0 Comments