12.உனது விழியில் எனது காதல்



“ஹலோ?” 
“ஹலோ, நான் கவுதம் பேசுறேன்.”
 “கவுதம் சார், எப்படி இருக்கீங்க?” மறு முனையில் ஒரு நொடி மௌனம்,
  “உன் கிட்ட கொஞ்சம் பேசனுமே வனிதா?”
 பக்கென்றது அவளுக்கு ‘சாஹித்யனை பற்றிய தகவலாய் இருக்குமோ’ ஒரு முறை ரிஷிகாவை திரும்பி பார்த்தாள்.
 கம்ப்யூட்டரில் தன் பார்வையை பதித்து கொண்டிருந்தாள் ரிஷிகா.  “எதாவது முக்கியமான விஷயமா சார்?”
 “ஆமாம், நேர்ல சொல்றேன்.” ஆபிசில் விடுப்பு சொல்லிவிட்டு  போனில் அவன் கூறிய ரெஸ்டாரண்ட்டிற்குள் நுழைந்தாள். 
“சாரி சார் வந்து ரொம்ப நேரம் ஆச்சா?” ஒரு நொடி அவளை பார்த்தவன்,
 “இல்லை, இப்போ தான் வந்தேன் உட்காரு” தனக்கு எதிரில் போடப்பட்டிருந்த இருக்கையை காண்பித்தான்.
 “வனிதா, நீ இப்போ என்னோட ஸ்டூடண்ட் இல்ல... அப்புறம் எதுக்கு இன்னும் சார்னு கூப்டுற?” புரியாமல் பார்த்தாள். 
“ஏதோ பேசனும்னு வர சொன்னீங்களே சார்?” 
“ம்ம் ஆமா... வேலைலாம் எப்படி போகுது?” 
“ம்ம்ம் நல்லா போகுது சா...” அவன் பார்த்த பார்வையில் “சாரி” என்று உதடு கடித்தாள்.
 ‘இதை கேட்கவா அவள் வேலையில் அரை நாள் விடுப்பு எடுத்து வந்தாள். இந்த லட்ஷணத்தில் தேவையே இல்லாமல் எதேதோ நினைத்து பதறி வந்து சேர்ந்தாள்’
 “அப்புறம்?” 
“அப்புறம், வீட்டுல மாப்பிள்ளை பாக்குறாங்க போல?” 
‘அவன் எங்கு வருகிறான்?’ என்பது புரிவது போல இருந்தது.
 “ஆமா சார்.” அவளால் அப்படி அழைப்பதை தவிர்க்க முடியவில்லை. அருகில் இருந்த தண்ணீர் தம்ளரை எடுத்து பருகினாள்.
 “என்னை கல்யாணம் பண்ணிக்கிறயா வனிதா?” என்று அவன் கூறவும்  குடித்து கொண்டிருந்த தண்ணீர் புரைக்கேறியது. அவசரமாய் எழுந்து அவளருகில் வந்தவன், அவள் தலையை தட்டி கொடுத்தான். 
அவன் கையை தட்டி விட்டவள், ‘கடைசியில் இதுக்கு தான் தன்னை அழைத்தானோ’ என்று எண்ணமே அவளின் கோபத்தை கூட்டி முகத்தை ரத்தமென சிவக்க செய்திருந்தது. 
கோபமாய் இருக்கையை விட்டு எழ போனவளின் கை பிடித்து நிறுத்தினான்.
 சட்டென்று அதையும் தட்டி விட்டவள், ‘ யாரும் தங்களை பார்க்கிறார்களோ’ என்று சுற்றும் முற்றும் பார்வையிட்டாள். 

“யாரும் பார்க்கல, நீ முதல்ல உக்கார்” குரலில் கடுமை வந்திருந்தது. கோபமாகவே அமர்ந்தவள் அவனை பார்ப்பதை தவிர்த்து வேறு புறம் பார்த்தாள். 
“முதல்ல நான் என்ன சொல்லவாறேன்னு கேட்டுட்டு அப்புறமா எழுந்து போ.” 
அவளிடம் பதில் இல்லாது போகவே நீண்ட மூச்சோடு தொடர்ந்தான். 
“என் வீட்டுல எனக்கு கல்யாணம் பண்ணனும்னு நினைக்றாங்க.” 
‘யாருக்கு வந்த விருந்தோ?’ என்ற ரீதியில் அமர்ந்திருந்தாள். 
“அதுக்காக அப்பா தெரிஞ்ச தரகர்ட்ட சொல்லி வச்சாங்க, அவரும் கொஞ்ச நாள் முன்னாடி ஒரு பொண்ணோட போட்டோ கொண்டு வந்து கொடுத்துட்டு போயிருக்கார். அப்பா அம்மாக்கு பொண்ண ரொம்ப பிடிச்சு போச்சு என் கிட்ட போட்டோ காட்டி கேட்டாங்க, எனக்கும் பிடிச்சிருந்துச்சு. அப்புறம் பொண்ணோட அப்பாட்ட பேசுனேன். அவங்க சைட்லயும் என்னை ஏத்துகிட்டாங்க... பட் பொண்ணுக்கு என்னை பிடிச்சிருக்கானு கேக்க ஆசை பட்டு பொண்ண பார்க்கனும்னு அவர் கிட்ட சொன்னா? “அதுக்கென்ன பொண்ணு பார்க்க வரப்ப கேட்டுகோங்க?னு சொல்லிட்டார்.” ஆனால் எனக்கு அதுல இஷ்டம் இல்ல... பொண்ணோட தனிப்பட்ட முறைல பேசி அவளுக்கு என்னை பிடிச்சிருக்கானு தெரிஞ்சிக்க ஆசை பட்டு அந்த பொண்ண தனியா வர சொல்லி கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்டா? அவளோ கோபமா போறா... இப்போ சொல்லு நான் என்னதான் செய்ய...?”
 பாவம் போல் முகம் வைத்து கேட்டவனை கண்டவளுக்குள் வெட்கம் குடி கொண்டது. நாணி தலையை குனிந்து கொண்டாள். 
“அப்போ அப்பா சொன்ன... மா...ப்..பி..ள்..ளை.. நீங்களா?” தந்தியடித்தன வார்த்தைகள். 
“ம்ம்ம்ம்” அவளை பார்த்து கொண்டே அவன் கூற, முக சிவப்பு பெருகியது பெண்ணவளுக்கு. 
அதை ஆசையாய் ரசித்தவன், “பார்டா, கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கோபத்துல சிவந்த முகமா இப்போ வெட்கத்துல சிவந்திருக்கு.” அவளின் விரலை பற்றினான். வெட்கம் கூட மனம் தடதடக்க அமர்ந்திருந்தாள்.
 “வனிதா நான் கேட்டதுக்கு பதிலே சொல்லலையே?”
 “அத அப்பா கிட்டயே கேட்டுகோங்க...” அடுத்த கணம் அவள் அங்கு இல்லை சிட்டாக பறந்திருந்தாள். 
இரு வீட்டு பெரியோர்களும் கூடி கவுதம்- வனிதா திருமண நிச்சயத்தை நடத்தி முடித்தனர்.
 உணவு இடைவேளையின் போதெல்லாம், வனிதா கவுதமிடம் போனில் மணி கணக்கில் பேசுவாள். 
அவள் வாயில் உணவு செல்லுமோ? இல்லையோ? அவனுடன் பேசிய படி பாதி கீழே தான் கொட்டும்.
 “பாறேன், பார்க்க இந்த பூனையும் பால் குடிக்குமானு இருந்தவ... இப்போ சாப்ட கூட நேரமில்லாம பேசிட்டு இருக்கா..”
 “உனக்கு ஏன்டி பொறாமை..?” 
“எனக்கு என்ன பொறாமை ரிஷிகா?” என்றவள் வனிதாவை ஒரு முறை பார்த்தவள், “லைட்டா” என்று கண்ணடித்தாள். 
 அவளின் முகத்தை பார்த்த ரிஷிகா அழகாய் சிரித்தாள் அவளுடன் சேர்ந்து சிரித்தாள் மஹிமா. 
“நீ வேணும்னா பாரு? நானும் இவள போல சீக்கிரம் ஒருத்தன காதலிச்சு இவள விட அதிகமாவே கதை பேசல என் பேரு மஹிமா இல்ல.”
 “எஸ்க்யூஸ்மீ, கூப்ட்டீங்களா?”
 மஹிமாவின் அருகில் வந்தமர்ந்தான் மஹேன்.
 பணியில் சேர்ந்த நாளன்றில் இருந்து மஹிமாவின் பேச்சால் கவரப்பட்டவன் அடிக்கடி அவன் மனதை அவளிடம் கோடிட்டு காட்ட நினைத்து பேசுவான். 
ஆனால் அதெற்கெல்லாம் மசியாது பதில் கொடுப்பாள் மஹிமா. 
“இல்லையே அங்கிள்...” இப்போதும் அப்படியே பதில் கூற, 
"களுக் "என்று சிரித்த ரிஷிகாவிடம் ஒரு மாதிரியான சிரிப்பை உதிர்த்து விட்டு, 
“அங்கிள்? யூ மீன் மாமா?”
 “ஆ...மா...”
 “எப்படி? இந்த கிராமத்து சைடுல முறை பொண்ணுங்க எல்லாரும் கட்டிக்க போறவங்கள கூப்டுவாங்களே அந்த மாதிரியா..?”
 ‘இதற்கு என்ன பதில் சொல்வாள்?’ உதடு கடித்து அமைதியாகி விட்டாள்.
 அதன் மீது ரசனையோடு படிந்தது மஹேனின் பார்வை. 
அவனறியாது முக சிவப்பை அந்த பக்கம் திரும்பி மறைத்து கொள்வாள். மஹிமாவிற்கும் மஹேனிடம் நல்ல எண்ணம் உண்டு. அது மஹேனின் பேச்சிக்கு தடையிடாமல் இருந்த மஹிமாவை வைத்தே கண்டு கொள்ளலாம்.
 பேசி பேசியே அவளை தன் காதலை ஒப்பு கொள்ள வைத்தான். 
முடிவில் இரு வீட்டு பெற்றோரும் இவர்களின் திருமண நிச்சயத்தையும் உறுதி செய்தனர். 

***

Post a Comment

0 Comments