ஒவ்வொருவராய் பார்த்து கொண்டு வந்தவளின் பார்வை ஓரிடத்தில் நிலை கொண்டது. அவளின் பார்வை திக்கில் பார்த்த மஹிமா, வாயில் பிடியில் திராணியற்று நிண்று கொண்டு அவளை விழியிமைக்காது பார்த்து கொண்டிருந்த சகியை கண்டு அவனை இழுத்து வந்து ரிஷிகாவின் அருகில் அமர்த்தினாள்.
அவன் விழிகள் அவளிடம் மன்னிப்பு கோரின. பதிலுக்கு அவள் இமை சிமிட்டி வேண்டாம் என்றாள்.
சபை நாகரிகம் கருதி அனைவரும் வெளியேறினர். அவளின் கைபிடித்து அதில் தன் இதழ் பதித்தான். அவள் மனம் நிறைந்தது.
" அவனுக்கு தன்னை பிடிக்காது " என்றொலித்த செவிகளில்
" நான் உன்னை காதலிக்கிறேன் ரிஷிகா " என்ற அவனின் வார்த்தைகளே திரும்ப திரும்ப ஒலித்தது.
சகியின் வீட்டு தனியறையில் மணமகள் ரிஷிகாவை அலங்கரித்து கொண்டிருந்தனர் வனிதாவும் மஹிமாவும்.
“பாருடி வனிதா... நமக்கெல்லாம் அப்புறம் நிச்சயமான பொண்ணு நமக்கு முன்னாடியே கல்யாணம் பண்ணிகிட்டா....ஆனால் நாம தான் இன்னும் லவ் பண்ணிட்டு இருக்கோம்...”
இழுத்து கூறியவளை நருக்கென கிள்ளி வைத்தாள் ரிஷிகா.
“ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா...வலிக்குதுடி குரங்கு...ஆனால் பாரு உன் ஆள் செம ஃபாஸ்ட்... நிச்சயம் பண்ண மறு நாளே கல்யாணத்த வைக்கணும்னு ஒரே பிடியாய் நின்னு அதுல ஜெயிச்சும் காட்டிட்டாரு...” குங்குமமாய் சிவந்த முகத்தை மறைக்க பெரும் பாடுபட்டாள்.
அவளின் சந்தோஷ முகத்தை கண்டு அழகாய் நெட்டி முறித்தாள் மஹிமா... ‘நீ எப்பவுமே இப்படி சந்தோஷமாய் இருக்கனும் ரிஷிகா...’ மனதினுள் கூறி கொண்டாள்.
தனியறையில் தள்ளப்பட்ட ரிஷிகாவின் கால்கள் பின்னியது. அவளின் தயக்கம் கண்டு கலகலவென சிரித்தான்...
அவள் அவனை செல்லமாய் முறைத்து,
“எதுக்கு இப்படி சிரிச்சு பயமுறுத்துறீங்க?”
“நீ எதுக்கு இப்போ குழந்தை மாதிரி பயந்துகிட்டு வந்த?”
“அது... அதுவந்து....”
“அதான் வந்தியே நானும் பார்த்தேனே... சொல்லு”
“ச்சு... போங்க” வெட்கி தலை கவிழ்ந்தாள்.
“ரிஷிகா... இங்க பாரு...” அவள் அவனை காணாது நிலம் கண்டாள். “ரிஷிகா...” மெல்ல நிமிர்ந்து அவனை பார்க்க...
அவன் அவளை பிடித்து அருகில் அமர வைத்தான்...
“இதோ பாரு, இங்க உன்னை மீறி எதுவும் நடந்துடாது... அதனால இந்த குழந்தை மாதிரி பயப்படுறத நிறுத்து...” அவன் வார்த்தைகளின் தைரியத்தில் கொஞ்சம் ஆசுவாசமடைந்தாள்.
அந்த தைரியத்தோடே, “என்னை பார்த்தா உங்களுக்கு குழந்தை மாதிரி இருக்கா?” சீறினாள்.
“உன்னை முதல் தடவை பார்த்த நாளில் இருந்து இப்போ வரை என் கண்ணுக்கு நீ குழந்தையா தான் தெரியுற”
“சத்தம் போட்டு சொல்லிடாதீங்க.. அப்புறம் சைல்ட் மேரேஜ்னு உங்கள தூக்கிட்டு போய்ட போறாங்க...”
“ஹாஹாஹா... சரி நீ சொல்லு என்னை பார்க்கும் போது உனக்கு என்ன தோணும்...?”
அவனின் கேள்வியில் வெட்கி முகம் திருப்பினாள். நினைவில் அவனை முதன்முதலாய் கண்ட நிகழ்வு தோன்றியது.
“ஹேய், என்ன இப்படி வெட்கப்படுற சொல்லு?” ஊக்கினான்.
“அது.... வந்து...”
என்னவென்பது போல் அவன் புருவம் உயர்த்த...
அவனின் கன்னம் பற்றி விழிகளில் இதழ் பதித்தாள்.
கண் மூடி கிறங்கியவன்,
“இது தான் தோணும்... அடிக்கடி.. என்னை பார்த்து இப்படி இப்படி கண் சிமிட்டுவீங்களே அப்போ, சிமிட்ற அந்த கண்கள முத்தமிடனும்னு தோணும்....”
“ஹேய்... ரிஷிகா...” கிறங்கி ஒலித்தது அவன் குரல்.
“ம்ம்ம் ...” கிணற்றுக்குள் இருந்து ஒலிப்பது போல் அவள் குரல்.
“ஐ லவ் யூ டீ பொண்டாட்டி..”
“ஐ லவ் யூ டூ சஹா...”
“என்ன?”
“என்ன என்ன?”
“என்னை என்னனு கூப்ட்ட?”
“சஹானு...”
“என் பேரு சாஹித்யன்...”
“அது மத்தவங்களுக்கு..”
“அப்போ சகி...”
“அது உங்க நெருக்கமானவர்களுக்கு... எனக்கு மட்டும் இந்த சஹா..”
“சஹா’னா என்ன தெரியுமா?”
“தெரியுமே... நண்பன் தானே அர்த்தம்”
“ம்ம்ம்.. நான் உன் புருஷன்டி”
“இருக்கட்டுமே, என் கணவன் என் தோழன் "என்றாள்.
‘அப்படியா?’ என்பது போல் அவன் விழி வினாவெழுப்ப...
‘ஆம்’ என்ற ரீதியில் அதில் இதழ் பதித்தாள் ரிஷிகா.
இவர்களுக்கு நாமும் வாழ்த்தி விட்டு விடைபெறுவோம்.
** முற்றும்**
0 Comments