ஒருவாரம் கடந்திருந்தது.
தாரணி கற்றுக்கொள்ள வேண்டியவற்றை விரைவிலேயே கற்று தெரிந்து முழுமூச்சாக இறங்கி வேலையில் இருந்தாள்.
அப்போது தான் உள்ளே நுழைந்த அஷ்வின் இவர்கள் குழுமிருந்த அறையை கடக்க..
எப்போதையும் போலவே தன் தேவதையின் முகம் பார்த்தான்.
உதடுகளுக்கு நடுவிலே பேனாவை வைத்து எதையோ யோசித்தவள்,
குனிந்து கிறுக்கிவிட்டு சுற்றி உள்ளவர்களிடம், ‘ எப்டி?’ என்று வினவ..
அவர்களோ உதட்டை பிதுக்கினர்.
பதிலுக்கு இவளும், ‘ அப்டியா?’ என்று உதட்டை குறுக்கி விட்டு மீண்டும் விட்டதை தொடர்ந்தாள்.
அறைக்குள் வந்த அஷ்வின்,
‘ ச்ச, அந்த ரூமை இன்னும் கொஞ்சம் பெருசாக்க சொல்லணும். சீக்கிரம் கடந்து வர மாதிரி ஆகிட்டு’ என்று கடுகடுத்தான்.
இந்த அறையினுள்…
மேலும் சில பல சொதப்பல்களுக்கு பின் ஒருவராக சிலவற்றை முடிவு செய்திருந்தனர்.
அதற்குள்ளாகவே நேரம் மதிய இடைவேளையை தொட ஒருவரின் பின் ஒருவராய் கலைந்தனர்.
தாரணி மட்டும் தனித்து இருந்தவள்,
கையில் இருந்த புத்தகத்தில் கண்ணை பதித்தபடி இருக்க பின்னால் கேட்ட காலடியோசையில் திரும்பி நின்றாள்.
அஷ்வின் நின்று கொண்டிருந்தான்.
அவளை எப்போதும் மயக்கும் அதே புன்னகையுடன்…
மனம் படப்படத்தாலும் வெளியில் அமைதியாகவே காட்டி கொண்டாள்.
இதுவரை இவனோடு இதுபோல் தனியாக அகப்படவில்லை.
அப்படி அகப்படாமல் நழுவி சென்று கொண்டிருந்தாள்.
ஆனால் இப்போதோ??
‘ அவர்கள் அழைக்கும் போதே போயிருக்க வேண்டுமோ?’ என்ற கண் கெட்ட ஞானோதயம்.
ஆனால் அஷ்வின் அவள் எண்ணவோட்டதை அறியாதவன் போல,
“ தாரணி, ஒர்க் எப்டி போயிட்டு இருக்கு?” என கேட்டான்.
“ நல்ல போய்ட்டு இருக்கு சார்”
“ கால் மீ அஷ்வின்” அவள் விழிகளில் ஊடுருவி இவன் கூற
அவள் தலை கவிழ்ந்தது.
என்ன நினைத்தானோ?,
“ சரி மிஸ் தாரணி, ம்ம்ம்ம் மிஸ்ஸா? இல்ல மிசஸா? என்று மிசஸில் அழுத்தம் கொடுத்து கேட்க இவள் பல்லை கடித்தாள்.
‘ ஆள முழுங்குற மாறி பார்க்க வேண்டியது!! இதுல மிசஸானு டவுட் வேற இவனையெல்லாம்???” என்று மனதினுள் திட்டி கொட்ட.
நொடியில் அவள் முக கடுப்பை அறிந்தவன்
‘ ஆகா மனசுல எனக்கு தான் பாராட்டு விழா நடக்குதா?’ என்று உள்ளுக்குள் சிரித்து விட்டு வெளியே அவளிடம்
“ டிசைன் எந்த லெவல்ல இருக்கு மிஸ்ஸ். தாரணி” என்று மிஸ்ஸிலும் அழுத்தம் கொடுத்து கேட்டான்.
அங்கிருந்த சோபாவில் அமர்ந்தபடி முடிந்தவற்றை விளக்கி கொண்டிருந்தாள் அவனுக்கு.
ஆனால் அவை அவன் கருத்தில் பதிந்தால் தானே?
அவனோ வெகு சீரியசாய் அவளை நோட்டம் விட்டு கொண்டிருந்தான்.
அவன் பார்வை உணர்ந்தாலும் அவளோ அதை சட்டை பண்ணாமல் மேலும் தொடர…
“ ஏன் தாரணி ஆளே மாறிட்ட? முன்னாடி இருந்த பட்டாம்பூச்சி பொண்ணு எங்க?” என்று கன்னத்தில் கை வைத்து அவன் கேட்க
இவளோ அதிர்ந்து போனாள்.
‘ என்ன இவன்? காலம் காலமாக பழகி பிரிந்து சென்ற காதலனை போல கேட்டு வைக்கிறான்?’ என்று மூளை சிடுசிடுக்க
மனமோ, ‘ காதலுக்கு காலம்காலமாக பார்த்து பழக வேண்டிய அவசியமில்லேயே. ஓர் நொடி போதாதா? அதை உணர,
ஏன்? நீ கூட அவனை கண்ட மாத்திரத்தில் காதல் கொண்ட கன்னி தானே?
அவனை பற்றி என்னுள் ஆசை வார்த்தை விதைத்தவள் தானே? இப்போதும் இது வேண்டாம்!! தள்ளிப்போ என்று சொல்பவள் தானே?’ என்று அடுக்கி கொண்டே போக மூளை மனதின் பேச்சில் மயங்க தொடங்க…
அவள் முகத்தில் திடீரென ஒரு பொலிவு…
மனம் அவளின் காதல் கனவுகளை தட்டி எழுப்பி இவளின் முன் வைக்க
‘இவன் என் காதலன்’ என்று ஓலம் போட்டு கூறியது.
அமைதியாக தலையை கவிழ்த்து கொண்டாள்.
அஷ்வினோ அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்து வந்தவன்,
இறுதியில் அவள் முகம் கொண்ட வெட்க பூச்சை எண்ணி மனம் துள்ள மெல்ல அவள் கையை பிடித்தான்.
படபடத்து கொண்டிருந்த மனதை விழி சிமிட்டி அமர்த்தி கொண்டவள்,
அவன் கை அவளின் நாடி தாங்க வர தடுக்க இயலாமல்..
தடுக்க தோன்றாமல் நின்று கொண்டிருந்தாள்.
காதலாம் விளையாட்டில் அடுத்த கட்டமாக அவன் இதழை நோக்கி குனிய
பெண்ணிவள் தோற்று போனவளாய் அவன் கைகளில் நழுவி கொண்டிருந்தாள்.
மீளாத… மீள விரும்பாத ஓர் தனி பிரபஞ்சத்தில் அவர்கள் சஞ்சரிக்க…
திடுமென ஓர் குரல் அவள் மூளையில்…
இன்னதென்று கூறாமல்
அது எதையெதையோ மனக்கண் முன் காட்சி படுத்த….
விருட்டென விலகினாள் அவனுள் இருந்து.
“ தாரணிய்ய்” பாதியில் பண்டம் பறிக்கப்பட்ட பாலகனாய் மாறி அவன் அழைக்க…
“ லீவ் மீ அஷ்வின்… என்னால இன்னொரு பிரிவை எக்காரணம் கொண்டும் தாங்க முடியாது… ப்ளீஸ் லீவ் மீ அலோன்” என்று வாயிலை கை காட்ட,
அவளின் இந்த திடீர் மாற்றம் மனதை தைய்ய அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் வெளியே செல்லவும் அடைத்த அழுகை பொங்கியது இவளுக்கு.
காயம் கொடுத்தவரே காயப்பட்டு போவது காதலில் மட்டுமே சாத்தியம்…
அறையில் அமர்ந்தபடி நடந்தவைகளை அசைபோட்டு கொண்டிருந்த அஷ்வினின் மனதில் முந்தைய நாள் தர்ஷினி சொன்னவை மனதில் நிழலாடியது.
முந்திய இரவு:
‘ஒருவாரமாக தன்னில் படாமல் கழண்டு ஓடும் தாரணியின் மனதில் என்ன தான் இருக்கிறது?’ என்று புரியாமல் குழம்பி போனவன் அதை தீர்க்கும் வழி பொருட்டு தங்கையை அழைத்தான்.
“ என்னணா இந்த நேரத்துல கால் பண்ணியிருக்க? அங்க எல்லாரும் எப்டி இருக்கீங்க?”
என்று எடுத்த எடுப்பிலேயே கேட்டாள்.
“ ம்ம், எல்லாரும் நல்ல இருக்காங்க பாப்பு…
ஆனா எனக்கு தான் மனசு சரியில்ல” என்று அவன் கூற
‘அவன் மனம் சரியில்லாமல் போக யார் காரணம்?
அதற்கு மருந்தும் யார்? என்பதை அவள் தான் நன்கு அறிவாளே!!’
“ ஏன்டா? நான் அன்னைக்கே சொன்னேன்ல…
அவளுக்கு நான் இளங்கோ இல்லைனு தெரிய வந்தாலும்…
என்னை ஏத்துக்க தயங்குவா…
காரணம், உன்னோட நட்பையும் இழக்க வேண்டி வருமோனு பயந்து
காதலை தூக்கி சாப்டுறுவானு சொன்னேனே…
இப்போ நான் பயந்த மாறி தான்டா நடக்குது…
இதுல உன்னால மட்டும் தான் எனக்கு உதவ முடியும்னு புரியலையா?” என்று கெஞ்சும் குரலில் அவன் கேட்க,
தர்ஷினி உதட்டை கடித்து உணர்வுகளை அடக்கினாள்.
‘அவளால் முடியும் தான் ஆனால்?’
பேச்சு குரல் கேட்டு அவர்கள் அருகில் வந்த சந்தோஷ் அவன் தர்ஷினியிடம் பேசுவதை உணர்ந்து கொண்டு,
“ மச்சி, பேசிட்டு போன குடு… என் மொபைல் சார்ஜ் டவுனாகிட்டு” என்ற எண்ணையை ஊற்ற
அவனை பேய் போல முறைத்தான் அஷ்வின்.
“ இந்த பன்னாடையெல்லாம் காதலிச்ச உன் கூட குடும்பம் நடத்தலாம். நான் கூடாதா?” என்று பல்லை கடிக்க,
“ எதுஊஊஊ? டேய், அவளை பொறுத்தவரை நான் தான்டா ஹீரோ…” என்றபடி இவன் பாய
இவர்களின் இந்த சண்டையை கண்டு தர்ஷினி அந்த பக்கம் சிரிப்பது இவர்களுக்கு தெளிவாய் கேட்டது.
மொபைலை ஸ்பீக்கரில் போட்டவர்கள்,
“ தர்ஷிமா அண்ணாவ பார்த்தா பாவமா இல்லையாடா?” என கேட்க….
மறுமுனை ஓர் நொடி மௌனம்…
“ அண்ணா, உனக்கு என்னை பத்தி தெரியும்ல?” என்ற இவளின் சம்பந்தமில்லா பீடிகையில் மற்றவர்கள் புருவம் நெறிக்க இவளே தொடர்ந்தாள்.
“ என்ன தான் சந்தோஷ் என்னை காதலிச்சாலும்…
அவன் அந்த காதலை என் கிட்ட சொல்லாம உன் கிட்ட சொல்லச்சொல்லி சொன்னது எனக்கு இப்போவும் வருத்தம் தான்ண்ணா”
இங்கு சந்தோஷின் முகம் சிறுத்தது.
‘ அவன் செய்தது தவறென்றாலும்…. அது இன்னும் எத்தனை காலத்துக்கு தன்னை துரத்தும்…
அவளின் மனதை எவ்வளவு முயன்றாலும்… இந்த எண்ணத்தை மட்டும் தன்னால் மாற்றவே முடியவில்லையே’ என்று எண்ணியவன்,
“ தர்ஷி செல்லம், நடந்தவைக்கு காரணக்காரியம் கற்பிக்க முடியதுடா. ஆனா நடப்பவை என் வசம் இருக்கு அதை நாம விரும்புவதுக்கும் மேலா என்னால மாற்ற முடியும்டா கண்ணா… இப்போவும் உனக்கு அது பத்தி வருத்தமா இருக்காடா?”
தன்னவனின் பரிவில் மனம் லேசாக,
“ இல்ல சந்தோஷ்” என்றாள் உண்மையாகவே.
“ ஆனா, இது உனக்கான பதில் இல்லைடா…
அண்ணா, எந்த பெண்ணும் காதலன் தன் கிட்ட தான் காதலை சொல்லணும்னு எதிர்பார்ப்பா. இடையில தரகர் வரதை எவளும் விரும்பமாட்டாள்.
என்னை தரகரா இருக்க சொல்றியாணா?” என கேட்க….
இவன் அமைதியாக கேட்டு கொண்டிருந்தான்.
“ அவ மனசுக்குள்ள புதைச்சு வச்சிருக்குற உன் காதலை எழுப்ப வேண்டியது உன் பொறுப்புணா…
இதுல நீ நினைக்குற மாறி… நான் பிரச்சனையா வந்தேன்னா???
சில நொடிகள் அமைதியானவள், “நான் பேசும் நிலை வரும்போது கண்டிப்பா பேசுரேண்ணா...” என்று முடிக்க,
அதன் பின் பல தீவிர யோசனைக்கு பின் தான் முன் சொன்ன அஷ்வினின் கைங்கர்யம்.
யோசனையில் மூழ்கி இருந்தவன் தனக்குள் கேட்டு கொண்டான்.
‘ இவளுக்கு என்ன தான் பிரச்சனை?’
அவள் குரலே காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க செய்தது.
“ லீவ் மீ அஷ்வின்… என்னால இன்னொரு பிரிவை எக்காரணம் கொண்டும் தாங்க முடியாது… ப்ளீஸ் லீவ் மீ அலோன்”
‘மற்றுமோர் பிரிவா??? அப்படினா???’
சிக்கலின் முனை பிடிப்பட்டது போல் உணர்ந்தவன் அடுத்த கட்டத்துக்கு முன்னேறினான்.
ஆனால் அவனின் அந்த முயற்சி வெல்லுமா??? இல்லை தாரணியை அடியோடு அவனை விட்டு விலக்குமா?? என்ற கேள்வியோடு.
0 Comments