மதுரையின் பெரிய தணக்காரர் கீர்த்தனாவின் அப்பா சிவராமனும் கார்த்திக்கின் அம்மா சாவித்திரியும் உடன் பிறந்தவர்கள்.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த சாவித்திரிக்கு தமயனே தந்தையாகவும் இருந்தார். சாவித்திரியின் திருமண வயதில் அவருக்கு மாப்பிள்ளை தேட சிவராமன் முனையும் போது சாவித்திரி சதாசிவம் என்பவரை கைகாட்ட தங்களை விட தகுதியில் குறைந்த சதாசிவம் மேல் இவருக்கு அவ்வளவாய் உடன்பாடு இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
'ஒரு வருடம் போகட்டும்… அதற்குள் தங்கை அவனை மறந்தாலும் ஆச்சர்யம் இல்லை …' என்று அமைதி காத்தவருக்கு
சாவித்திரியின் காதல் வெறும் ஈர்ப்பு இல்லை என்று புரிய, அதோடு சதா சிவமும் பொருளாதார வகையை தவிர குணத்தில் தங்க கட்டி… தன் தங்கையை கண் போல் பார்த்து கொள்வார் என்ற நம்பிக்கையில் அவருக்கே சாவித்திரியை கட்டி கொடுக்க பச்சை கொடி காட்டினார்.
இருப்பினும் சதா சிவத்திற்கு தன் பொருளாதார நிலையை முதலில் கண்டு பெண் கொடுக்க மறுத்த சிவராமன் மேல் வெறுப்பு இருந்தது என்னவோ உண்மை.
அதனால் அவர் அவ்வளவாய் தன் மனைவி வீட்டில் ஒட்ட மாட்டார்.
மனைவியையும் அவளுடைய பிறந்த வீட்டில் அவ்வளவாய் தங்குவதை தடுத்து வந்தார் .
சாவித்திரியின் வயிற்றில் கார்த்திக் நான்கு மாதம் இருக்க, சிவராமன் - ஜானகி திருமண வைபவம். திருமண வைபவங்களில் கலந்து கொண்டவர்கள் மறுநாளே ஊருக்கு திரும்பி விட்டனர். தன் வேலை பளுவை காரணம் காட்டி அழைத்து வந்து விட்டார் சதா சிவம்.
அவருக்கு எந்த பொருளாதார நிலையை காட்டி தன்னை ஒதுக்கினார்களோ... அதில் தன்னை நிரூபிக்க வேண்டும் என்று விரும்பினார். தன் திருமணம் முடிந்த கையோடு வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி வந்து விட்டார். இப்போது ஓரளவுக்கு நிம்மதி அடைந்து வருகிறார்.
அதனாலோ என்னவோ சாவித்திரியும் பதில் பேசாது உடன் வந்து விட்டார். அவருக்கு தெரியும் தன் கணவருக்கு அண்ணன் மேல் வருத்தம் என்று.
இருந்தும் பதில் பேச முடியாது. அப்படி அவர் எதும் மனத்தாங்கல் பட்டு பேசி விட்டால் தன் மாமியார் வார்தையாலே தன்னை வசை பாடி விடுவார் என்பதால் பல நேரங்களில் அமைதியாகி விடுவார்.
கார்த்திக் பிறந்த வீட்டில் தன் மனைவிக்கு தன் வீட்டிலேயே பிரசவம் பார்த்து கொள்வதாய் சதா சிவம் சொல்ல … சிவராமன் தயங்கினார்.
“ தலை பிரசவம் தாய் வீட்டில் தானே பார்ப்பது வழக்கம் “ எனக் கூற,
“நான் இருப்பதோ வெளியூரில் தவிர என் மகனை பார்க்க என்று நான் அடிக்கடி ஊருக்கு வந்து செல்வது சாத்திய படாது”
“இருந்தாலும்” என்று சிவராமன் தயங்க
“ முடியாது” என்று அடித்து கூறிவிட்டார்.
சதா சிவத்திற்க்கு சொந்த ஊரிலும் ஒரு வீடு உண்டு. தனக்கு கிடைக்கும் மாத விடுமுறையில் குடும்பத்தோடு அங்கு செல்வது வழக்கம். அப்படி அங்கு வரவே சிவராமன் தன் முறையை சிறப்பாக செய்து கொண்டார்.
அவர்களின் உறவு தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாமல் இருந்து வந்தது.
விக்கியின் பிறப்பும் அவ்வாறே அமைய சிவராமன் ஓய்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
விக்கி பிறந்த மூன்றாவது மாதம் நீண்ட வருடம் கழித்து சிவராமன் ஜானகிக்கு கீர்த்தனா பிறக்க அந்த நேரம் சதா சிவம் குடும்பம் ஊரில் இருந்ததால் வந்து பார்க்க முடிந்தது.
பஞ்சு போன்ற வெண்பொதியை கையில் அள்ளி நான்கு வயதே ஆன கார்த்திக்கிடம் காட்டி “இவள் தான் உன் முறை பெண் “ என்று சாவித்திரி கூற அது சதா சிவத்துக்கு பிடிக்க வில்லை.
வீட்டில் வந்து ஆடி தீர்த்து விட்டார்.
“ எப்படி நீ என் மகனுக்கு உன் அண்ணன் மகளை பேசலாம்” என்று ஆடிய கணவரை புரியாமல் பார்த்தார் சாவித்திரி.
என்னவோ தான் , அவர்கள் மகனுக்கு தன் அண்ணன் மகளை திருமணம் பேசி தட்டு மாற்றி விட்டு வந்தது போல்… பேசிய கணவரை என்ன சொல்லி புரிய வைக்க ?” என்று திண்டாடி போனார்.
இது பத்தாது என்று இந்த வாசுகி கிழவி வேற,
“ அதானே ஏற்கனவே உன்ன கட்டிகிட்டு என் மகன் படுற பாடு போதாதா… என் பேரனுக்கும் அந்த வீட்டுல இருந்து தான் பெண் வரணுமா… டேய் சதா நம்ம கார்த்திக்கு வேற இடத்தில இருந்து தான்டா பொண்ணு வரணும் சொல்லிட்டேன்..”
என்னவோ அவர் இப்போதே நான்கு வயது கார்த்திக்கு பெண் பார்க்க கிளம்பி விட்டார் போல் நடந்து கொள்ள தலையை வெடித்து விடும் போல் வலித்தது.
குனிந்து அமர்ந்தவர் அருகில் வந்த கார்த்திக்…
“ அம்மா எப்போமா அந்த குட்டி ரோஜாப்பூவ நம்ம வீட்டுக்கு கூட்டி வர போறோம்” என்று கேட்க…
முதலில் திகைத்தவர் பின் தன் மகனை கட்டி கொண்டார்.
“கடவுள் நாட்டம் அது தான்னா யாராலயும் அதை மாத்த முடியாது தங்கம்” என்று எண்ணி கொண்டார்.
கடவுளின் நாட்டமும் அது தான் போல.
ஒவ்வொரு விடுமுறையின் போதும் பாவாடை சட்டை போட்டு அத்தை குடும்பத்தை காண பக்கத்து ஊரில் இருந்து தாயுடன் கிளம்பி வந்து விடுவாள் அந்த குட்டி ரோஜா பூ.
சதா சிவதிற்கு சிவராமன் மேல் தான் கோவமே தவிர அவர்கள் குடும்பத்தை நல்ல முறையில் தான் அனுசரித்து அனுப்புவார்.
அப்போதெல்லாம் , “ரோஜாப்பூ ரோஜாப்பூ” என்று அவளையே சுற்றி வருவான் சிறுவன் கார்த்திக்.
இவளின் பத்து வயதில் கார்த்திக்கின் 14வது வயது அவளை “ ரோஜாப்பூ” என்று கூறுவதை விட்டு “ ரோஜா” என்று அன்பாய் அழைப்பான்.
எப்போதாவது ஊருக்கு வரும் கார்த்திக் குடும்பம் அன்று தங்கள் ஊர் திருவிழாவிற்கு வந்திருந்தது.
பதினெட்டு வயது கன்னியாய் கார்த்திக்கின் வீட்டுக்கு வந்தாள்.
முதலில் அவளை பார்த்த கார்த்தியின் பார்வையில் வெட்கி ஓடி விடுவாள்.
ஆனால் தன் வயதொத்த விக்கியிடம் மட்டும் சரிக்கு சமமாக வம்பிழுப்பாள்.
அன்றைய திருவிழா நாளில் அவளை பாவாடை தாவணி உடுத்தி பார்த்தவன், கிறங்கி போனான் ... என்று தான் சொல்ல வேண்டும்.
அப்போதே அவளிடம் தன் மனதை தொலைத்தான். கீர்த்தனாவுமே ,
தன் அத்தை மகன் ரத்தினத்தின் ஆஜானு பாகுவான உடற்கட்டு கண்டு சொக்கி போனவள் தன் மனதை அதற்கு விலையாக கொடுத்தாள்.
0 Comments