அதே நேரம்.
கார்த்திக்கின் ஆபீசில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்த restaurant உள்ளே கையில் ஆஃபர் லெட்டர் உடன் விக்கியை கொலை வெறியோடு பார்த்து கொண்டிருந்தாள் கீர்த்தனா.
அதை அலட்சியம் செய்தவன், கூலாக கேட்டான் .
“ என்ன முடிவு பண்ணிருக்க கீர்த்து வேலைக்கு வருவல்ல?” என்று.
“ நான் முடிவு பண்றது இருக்கட்டும் .. நீ என்ன நினைச்சுட்டு இருக்க ? எதுக்காக என்னை மறுபடியும் உன் அண்ணாவோட லைஃப்ல இணைக்க பார்க்கிற. எல்லாமே முடிஞ்சு போச்சு... என்று எத்தனை வாட்டி சொல்றது. நீ யாருக்காக இப்டிலாம் பண்றனு புரியல” முகத்தை வேறு புறம் திருப்பி கொண்டாள்.
“ஒரே ஒருத்தற்காக மட்டும் தான் கீர்த்து”
“முறிஞ்சு போன உறவு முறிஞ்சது தான் விக்கி யாருக்காகவும் நீ முயற்சி பண்றது வேஸ்ட்”
“ நிச்சயமா வேஸ்ட் இல்ல. என்னோட அம்மாவுக்காக இது இல்ல.. இன்னும் என்ன வேணும்னாலும் பண்ணுவேன். உனக்கு தெரியுமா அவங்க கடைசியா எப்போ சிரிச்சாங்க என்று?”
அவனின் அம்மா என்ற வார்த்தையில் சர்வமும் அடங்க அமைதியானவள்,
“ மூணு வருஷத்துக்கு முன்னாடி” என்றவனின் கூற்றில் கண் கலங்கி விட்டாள்.
“ அத்தை” என்றாள் உதடு கடிக்க.
“ அவங்க கடைசியா சிரிச்ச அந்த நாள் எதுன்னு நான் சொல்லி உனக்கு தெரிய வேண்டாம்.
அந்த நாள் அப்போ fullஆ அவங்க முகத்துல அவ்ளோ சந்தோசம் பூரிப்பு.
யார் கண்ணு பட்டுச்சோ தெரியல? அந்த நாள் முடியுறதுக்குள்ள அவங்க சிரிப்பும் சந்தோசமும் முடிஞ்சு போச்சு” என்றான் .
அத்தனை நேரமும் அவன் பேச்சில் இருந்த ஒரு வகை துள்ளல் மாறி இப்போது கரகரப்பு வந்திருந்தது
“ ஏன்? எங்களுக்கு இல்லையா அந்த நாளின் தாக்கம்.
சொந்த ஊர விட்டுட்டு , சுத்தி உள்ளவங்க கேலி பேச்சும் இரக்க பார்வையும் தாங்கிக்க முடியாம , எங்க சந்தோசம், கலகலப்பு எல்லாத்தையும் தொலச்சிட்டு…
இந்த நிலைமை யாரல வந்தது விக்கி"
மீண்டும் முருங்கை மரம் ஏறினாள்.
“ இருக்கலாம். உன் சைடு இழப்பு இல்லைனு நான் சொல்ல வரல. ஆனா என் அம்மா அளவுக்கு இல்லைனு தான் சொல்வேன்” அவன் அதிலேயே நின்றான்.
கண்ணீரை துளிர்த்தவள்,
“ அத்தை எப்படி இருக்காங்க விக்கி ?” நெடு நேரம் அரித்து கொண்டிருந்த கேள்வியை கேட்டு விட்டாள் பொறுக்க முடியாமல்.
“ ம்ம்ம்.. இருக்காங்க அவங்க மட்டுமே தனியா இருக்க கூடிய உலகத்துல. அவங்க அமைதி தேடுற இரண்டு இடம் ஒன்னு கடவுள் இன்னொன்னு புக்.. இது ரெண்டுமே இல்லனா அம்மா என்ன ஆகி இருப்பாங்களோ தெரியல”
கூறும் போதே அவன் குரல் இடரியது.
ஆதுரமாய் அவன் கைகளை தட்டி கொடுத்தாள்.
சட்டென ஒரு சொட்டு கண்ணீர் அவன் கையில் விழ அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன்,
“ நிறைய நடந்துருச்சு கீர்த்து… அந்த நாளுக்கு அப்புறம் அம்மா தனியா ஒதுங்கிட்டாங்க. யார் கூடவும் பேசுறது இல்ல… நான் எவ்வளவோ முயற்சி செய்தும் கார்த்திக் கிட்ட அறவே பேசுறத நிறுத்திட்டாங்க. பாட்டி, அப்பா கூடவும் பேச்சு என்ன ஒரு பார்வை கூட இல்ல. இப்படி இரு ஜீவன்கள் வீட்டுல இருக்கின்றது வெளிய தெரியவே இல்லனா பாத்துக்கோ” குரலில் வெறுப்பு மண்ட அவன் கூறுவது அவளுக்கும் புரிந்தது.
செய்தவற்றுக்கும் மேலான அதிக தண்டனையோ ?!
ஒரு ஆண் மகனுக்கு தன் மனைவியின் புறக்கணிப்பை விட வேறு தண்டனை இருக்கவா முடியும்.
இதில், அவருக்கு தன் மனைவியின் மேல் எத்தனை பாசம் உண்டு என்பதை தன் தந்தை வாயிலாகவே கேட்டவள் ஆயிற்றே. அவருக்காக மனதின் ஒரு மூலையில் இரக்கம் எழாமல் இல்லை.
இருப்பினும் செய்தவற்றை மாற்ற முடியுமா? இல்லை மறக்க தான் முடியுமா?.
“கார்த்திக் கூட இப்போலாம் வீட்டுக்கு வரது இல்லை. தனியா வீடெடுத்து தனியா தனி குடித்தனம் பண்றான். என் குடும்பத்துல எல்லாரும் இருந்தும் ஆளுக்கு ஒரு மூலையில் வாழுற மாதிரி ஒரு ஃபீல்.
என் குடும்பத்தை … இல்ல என் அம்மாவையாச்சும் மீட்டு கொடுப்பன்ற நம்பிக்கைல தான் உன்னை வர வச்சேன்” நீண்ட விளக்கம் கொடுத்தவனை
‘ நான் என்ன பண்ண முடியும் ' என்பது போல் பார்த்தாள்.
இருந்தாலும் ,
“ உங்க பரம்பரைக்கே இந்த என் குடும்பம்ன்ற எண்ணம் போகாது போல “ என்றாள் பல்லை கடித்துக்கொண்டு.
“ அத விடு கீர்த்து… என்ன முடிவு எடுக்க போற?… எங்களுக்காக இல்லைனாலும் உன் அத்தைகாகவது” அதிலேயே நின்றான்.
சிறிது நேரம் அமைதி காத்தவள், ''நான் இன்னக்கி நைட் ஊருக்கு போறேன். போய் உனக்கு மெசேஜ் பண்றேன்” என்றாள்.
“அப்பாடி லேசாக எட்டி பார்த்த green signal போதும்” என்று அமைதி காத்தான்.
அன்று இரவே அவளை பஸ்ஸில் ஏற்றி விட்டவன் அவளிடம் விடை பெற்று கிளம்பினான்.
அவனுக்கு விடை கொடுத்தவள் மெதுவாய் சீட்டில் சாய அவளின் எண்ணவோட்டம் பின் ஓடியது.
அதே நேரம் , விக்கியுடன் போனில் சண்டை போட்டு கட்டிலில் சரிந்த கார்த்திக்கின் எண்ணமும் பின்னோடியது.
0 Comments