சென்னை – உயர்ந்து நிற்கும் பலமாடி கட்டடங்களில் ஒன்றான
Rose Inc. interior designs company –
ரிசப்சனில் விசாரித்து கொண்டிருந்தாள் கீர்த்தனா.
Excuse me, interview க்கு எந்த பக்கம் போகணும்.
“இப்படி லெப்ட்ல போய் straight போங்க”புன்சிரிப்புடன்-ரிஸப்சனிஸ்ட் பதில் கூற
“தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்.
அங்கு ஏற்கனவே இவளுக்கு முன் ஏழு பேர் காத்து இருந்தனர்.
இவளின் செல் ஒலித்தது. எடுத்துப் பார்த்தாள்.
விக்னேஷ் என்ற பெயரில் “ஆல் தி பெஸ்ட்” என்று குறுஞ்செய்தி. சிரித்தவாறு போனை பேக் -ல் போட்டு மற்றவர்களுடன் அமர்ந்தாள்.
கார்த்திக்கின் செல் அழைத்தது. எடுத்துப் பார்த்தான். ஆபீசில் இருந்து அழைப்பு.
“ஹலோ கார்த்திக் சார்”
“சொல்லுங்க விஷ்வா என்ன விஷயம்?"
“நீங்க ஆபிஸ் வர லேட் ஆகுமா சார்?"
“11.30 னு நேத்து சொன்னேனே மீட்டிங் இருக்கு . என்ன விஷயம்?"
“சாரி சார் உங்க P.A க்கான interview நடந்துட்டு இருக்கு. எட்டு பேரில் மூன்று பேர் தேர்வாகி இருக்காங்க. நீங்க வந்து direct interview பண்ணிட்டீங்கன்னா ஒருத்தருக்கு ஆஃபர் லெட்டர் கொடுத்துடலாம்” எனக் கூறினான்.
“இதுக்கு நான் வரணுமா ? விக்கிய பாத்துக்க சொல்லுங்க” என்று போனை வைக்க போனவனிடிடம் ,
“ சார் ஒரு நிமிஷம்... விக்கி சார் important work இருக்குன்னு சொல்லி காலையிலேயே வெளிய போய்ட்டாங்க... அதோட அண்ணாவோட பி.ஏ அவரே செலக்ட் பண்றது தான் பெட்டர் னு சொன்னாங்க. எனக்கும் அது சரின்னு பட்டுச்சு அதான்” என்று இழுத்தவனிடம் ,
“ ஓகே நான் வரேன் “ என்று விட்டு தயாராக சென்றான் கார்த்திக்.
தேர்வாகிய மூன்று பேரில் கீர்த்தனாவுக்கும் இடம் உண்டு அவள் செல் சிணுங்கியது மீண்டும்.
“ சிங்கத்தை அதனுடைய குகையிலேயே சந்திக்க காத்திரு… சிங்கம் ஆன் தி வே” என்று அதே விக்னேஷ் இடம் இருந்து மீண்டும் மெசேஜ் எடுத்துப் பார்த்தவள் சிரித்து கொண்டாள் .
சிறிது நேரம் கழித்து ஆபீஸ் வந்தவன் தன் அறையில்,
“ சொல்லுங்க விஷ்வா யார் அந்த மூணு பேர்… file கொடுங்க" என்றவனிடம் பைலை நீட்டினார் விஷ்வா.
“செல்வி – சென்னை ;
கண்ணன் - திருச்சி ;
அப்புறம் கீர்த்தனா - மதுரை" என்று கூற,
“வாட் ??” என்று அதிர்ந்தான்.
“என்ன ஆச்சு சார் ?”
“ நத்திங்” என்று விட்டு பைலை திருப்பினான்.
“ கீர்த்தனா … அவளேதான்… ஆனால் எதுக்கு இப்ப வந்து இருக்கா ?”
கோபம் தலைக்கேற அமர்ந்திருந்தான்.
“நீங்க போய் ஒவ்வொருத்தரா அனுப்புங்க” என்றான்.
ஒவ்வொருவரும் நேர்காணல் முடிந்து வெளிவர அவர்களின் முகமே உள்ளே அவனின் இருப்பை இவளுக்கு உணர்த்த ,
“ மே ஐ கமின்” என்று கேட்க ,
“ எஸ்” என்று காண்டாகவே பதில் வந்தது.
அவனின் எதிர் இருக்கையில் அமர்ந்தவாறு தன் resume ஐ அவனிடம் கொடுத்தாள்.
அதை வாங்கியவன், சட்டமாக தன் முன் வைத்து விட்டு அவளை முறைத்தான்.
“எதுக்கு இந்த திடீர் விஜயம்?” கோவம் குறையாமல் அவன் கேட்க,
இவளோ “ சார் என் பேர் கீர்த்தனா” என்றாள் அப்பாவியான முக பாவத்தோடு.
இவளின் இந்த பதிலில் மேலும் கடுபுற்றவன்,
“ வேணாம்னு ஒதுக்கினவன் உயிரோட இருக்கானானு பார்க்க வந்தியா?”
“ஹா, குட் ஜோக்.. நான் ஒதுக்கி வச்சேனா… நான் தான் ஒதுக்கப் பட்டேன்” என்று ஏதோ சொல்ல தொடங்கும் முன் அவன் அவளை முறைக்க…
தலையை சிலுப்பியவள்,
“ சார் நான் இங்கு வேலைக்கு interview வந்து இருக்கேன்”
மேலும் அவளை முறைத்தவன்,
“ நீங்க போகலாம் மிஸ். கீர்த்தனா” என வாயிலை நோக்கி கை காட்டினான்.
“ Interview சம்பந்தமா என் கிட்ட எந்த கேள்வியும் கேக்கல” என இவள் பல்லை கடித்தாள்.
“ ப்ச், என்ன கேக்கணும்? உங்க பேர் என்ன ? அப்பா அம்மா குடும்பம்? படிப்பு, பழக்க வழக்கங்கள் பத்தி கேட்கணுமா? அதெல்லாம் உன்ன விட எனக்கு நல்லாவே தெரியும். சோ...” மீண்டும் வாயிலை நோக்கினான் முறைப்பாகவே.
ஒரு முறை அவனை ஆழ்ந்து பார்த்தவள் பின் வெளியேறினாள்.
இவள் சென்ற சில நிமிடங்கள் கழித்து விஷ்வா அங்கு வர,
“ சார் யார செலக்ட் பண்ணி இருக்கீங்கனு சொல்லிட்டா அவங்களுக்கு கையோட ஆஃபர் லெட்டர் கொடுத்துடலாம்”.
“ உங்களுக்கு யார் இதுல பெட்ஸ்னு தோணுது விஷ்வா.”
“ சார், எனக்கு இந்த கீர்த்தனா பொண்ணு பெஸ்ட்னு தோணுது....ஏன் சொல்றேன்னா.. இவங்க கிட்ட கண்டிப்பும் இருக்கும் பேச்சு திறமையும் இருக்கு… இந்த வேலைக்கு அவங்க தகுதினு தோணுது சார். மத்தபடி உங்க விருப்பம் தான் சார் எங்களோட விருப்பம்” என்று முடித்தார்.
“அப்போ சரி, அவங்களுக்கே லெட்டர் கொடுத்துடுங்க” என்று இருக்கையில் சாய்ந்து கண் மூடினான்.
அவன் மனமோ , கொதித்து கொண்டு இருந்தது.
‘ ஏன் மறுபடியும் வந்தாள்.?? எல்லாம் இந்த விக்கி பய வேலையா தான் இருக்கும்.. அவனை' … என்று கடுப்புடன் அவன் செல் எண்ணை தொடர்பு கொள்ள அது not reachable என்று வந்தது.
செல்லை அணைத்து விட்டு தலையை பிடித்தவன் காதினில்,
“சார் என் பேர் கீர்த்தனா” என்ற குரல் ஒலிக்க ,
“ சாராம் சார்”… என்று பல்லை கடித்தவனுக்கு நீண்ட நேரம் ஆகியும் கோபம் மட்டும் குறையவே இல்லை.
0 Comments