10. என் உள்ளம் உன் வசம்



உணர்வுகளை இந்த சில வருடங்களில் கட்டுக்குள் கொண்டு வர பழகி இருந்தவளுக்கு கார்த்திக்கை எதிர் கொள்வது சுலபமாக இருந்தது.

“வரமாட்டேனு நினைச்சேன்” குத்தலாய் கேட்டான்.

அவனை அமர்த்தலாய் பார்த்தவள்,

“நாம நினைக்கிறது எல்லாம் நடந்து விடுறது இல்லையே அது போல தான் இதுவும்.”

இந்த பதில் தாக்குதலை எதிர் பார்க்காதவன் பல்லை கடித்தான்.

“ஏய், நான் இந்த ஆஃபிஸ் ஓனர். உனக்கு சம்பளம் தர முதலாளி .சோ, வார்த்தையை அளந்து பேசு”

அசால்டாய் தலையை திருப்பியவள்,

“வெரி சாரி, நான் இன்னும் வேலைக்கு சேரவே இல்லை. அதோட யார் கையாலயும் சம்பளமும் வாங்கலை.”

அவளிடம் இருந்து வந்த பட்டென பதில் அவனின் கோபத்தை கிளப்ப அவளையே கூர்ந்து பார்த்தான். சளைக்காமல் அவன் பார்வையை எதிர் கொண்டாள்.

இவள் முன்பு இருந்த பெண்ணே இல்லை. முற்றிலும் மாறி விட்டாள். முன்னெல்லாம் என் பார்வையை தாங்காமல் வெட்கி நிலம் பார்ப்பாள். இன்றோ எல்லா உணர்வுகளையும் அடக்கி கொண்டு, ஒரு போலியான முகத்திற்குள் தன்னை ஒளித்து கொண்டாள்.

  நீண்ட பெரு மூச்சு விட்டவன், அதற்கு மேலும் அங்கு நின்று பேச்சு வளர்க்க விரும்பாமல் உள்ளே செல்ல திரும்ப, அங்கு விக்கி வந்து கொண்டிருந்தான்.

ஏற்கனவே கொதித்து கொண்டு இருந்தவன் தலையில் எண்ணெய் ஊற்றி விட்டார் போல் விக்கி

“ஹாய் கீர்த்தி டார்லிங்..” என கூவி கொண்டே வர,

மேலும் சூடானவன் உள்ளே செல்ல போனான். ஆனால் எதர்ச்சையாக போடுவது போல் விக்கி அவன் தோளில் கை போட்டு அவனை நகர விடாமல் செய்தான்.

கீர்த்துவுமே அவனின் டார்லிங்கில் ஜர்க் ஆகினாலும் கார்த்திக்கின் கோபம் அவளை மறுத்து பேச விடாமல் செய்தது .

“அப்புறம் வீடு வசதி எல்லாம் பரவா இல்லையா…”

காலையில் என்ன சாப்பிட்ட…. தொடங்கி

ஆஃபிஸ் எப்படி வந்தாய் வரை,

அவன் கேட்ட அத்தனை கேள்விக்கும் சமர்த்தாய் பதில் வந்தது அவளிடம்.

' நான் கேட்டா மட்டும் பட்பட்னு பதில், அதுவே இவன் கேட்டா,

பழம் நழுவி பாலில் விழுவது போல பதிலா?'

சட்டென்று விக்கி கையை உதறி தள்ளிவிட்டு உள்ளே சென்று விட்டான்.

அவன் சென்ற சில நிமடங்கள் கழித்து இருவரும் வந்தனர்.

கீர்த்தனா கார்த்திக்கின் P.A என்பதால் அவனின் அறையில் ஒரு பகுதியில் இவளுக்கு இருக்கை அமைந்தது. இவள் என்று இல்லாமல், இதற்கு முன்பு வேலை செய்தவர்களுக்கும் இது தான் என்பதால் முதலில் தயங்கினாலும் பின் அமைதி கொண்டாள்.

காலையில் வந்த சில நிமிடங்கள் தெரிந்த முகங்களுக்கு சிரிப்பை பரிசளித்து இருந்தாள் அதனாலோ என்னவோ , அங்கு உள்ளவர்கள் அவளையும் தங்களோடு இணைத்து கொண்டனர்.

சீனியர்கள் உதவியால் தெரிந்தவரை வேலைகளை முடித்து கார்த்திக்கின் முன் பைலை வைத்தாள். ஏற்கனவே அவள் மேல் கொதித்து கொண்டு இருந்தவன் ,

“இது சரி இல்லை. அது இப்படி செய்ய கூடாது. திருத்தி வா.. இது கூட சொல்லி தரணுமா” என்று எரிந்து விழுந்தான்.

முதலில் அவனின் செய்கை தன்னை வேண்டும் என்றே குறை சொல்கிறான் என்று எண்ணினாலும் ,

பின் ' இல்லை நமக்கு தான் இந்த வேலையில் முன் அனுபவம் இல்லையே. இவையெல்லாம் உண்மையில் நான் திருத்தி கொள்ள வேண்டியது தான்' என்று சமாதானம் கூறி கொண்டாள்.

அதனாலோ என்னவோ, சீக்கிரமே வேலைகளை கத்து கொண்டது போல் அவன் முன் போய் நிற்க ,

அவ்வளவு சீக்கிரத்தில் அவள் தெளிவு பெற்றது போல் கை தேர்ந்தவளாய் நின்றவளை கண்டவன் உண்மையில் அதிசயித்து தான் போனான்.

“ம்ம்ம்… குட்” என்றான் இதமாக

அவனின் புகழில் மெய் சிலிர்க்க அவனை ஒரு கணம் பார்த்தவள், பின் மெதுவாய் நகர்ந்தாள்.

மதியம் ஒரு மணிக்கு உணவு இடைவேளை என்பதால் அவளும் ஆஃபிசில் உள்ள மற்றவர்களோடு இணைந்து கொண்டாள்.

காலையில் ஏற்கனவே அறிமுகமான ப்ரியா தான் அவளை வரவேற்றாள்.

“வாங்க கீர்த்தனா”

Guys இவங்க கீர்த்தனா. கீர்த்தனா, இது பவித்ரா, சங்கர், ப்ரசாத்.”

ஒவ்வொருவரையும் மற்றவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

ப்ரியா, இந்த அலுவலகத்தில் ரொம்ப துடிப்பான பெண் என்று எல்லாரிடமும் பேர் எடுத்திருப்பவள். பழகிய சில நிமிடங்களிலேயே கீர்த்தனாவின் நெருங்கியவர்களுள் ஒருத்தியாக மாறி போனாள்.

பேச்சும் சிரிப்புமாக உணவை உண்டு முடித்தவர்கள் தமது இருக்கைக்கு சென்றனர்.

கீர்த்தனாவும் தன் இருக்கைக்கு வர அங்கு கார்த்திக் ஏற்கனவே இவளுக்கு முன் வந்திருப்பான் போல என்று எண்ணினாலும், சில நொடிகளில் அவன் உணவு உண்ண செல்லவே இல்லை என்று புரிந்தது. ஏன் இப்படி மாங்கு மாங்கு என உழைக்கணும்?

இவள் வேலைக்கு சேருவதற்கு முன்பே ஒரு ஆடரை வாங்கி இருந்தான்.

“ஏற்கனவே போய் கொண்டிருக்கும் வேலைகளோடு இதுவும் சேர்ந்தால் சிரமம் தான்” என்று விக்கி கூறியதை மறுத்து விட்டு , ' இப்போது உண்ண கூட செல்லாமல் ஏன் இப்படி இருக்கணும்' என்று தான் கீர்த்தனா எண்ணி கொண்டாள்.

அவள் தன்னை பார்த்து நிற்பதை கண்ட கார்த்திக் ,

“வந்துட்டியா வா.. இத சீக்கிரம் டைப் பண்ணி கொண்டு வா”

அவளையும் துரத்தினான். அவசரம் புரிய அவளும் வேலையில் தன்னை இணைத்து கொண்டாள். இடையில் அவன் வெளியில் சென்று வர, உணவு உண்டு விட்டு தான் வருகிறான் என்று உறுதி படுத்தி கொண்டு வேலையை தொடர்ந்தாள்.

அதன் பின் நேரம் வேகமாய் சுழல அலுவலகம் முடிந்து அனைவரும் கிளம்பினர். கீர்த்தனாவும் அவனிடம் சொல்லி விட்டு செல்ல எழுந்தவள், அவனருகில் தயங்கி நின்றாள். “ இவன் இப்போதைக்கு கிளம்ப மாட்டான் போல” என்று எண்ணியவள் அவனை அழைத்தாள்.

“கார்த்திக்…”

அந்த நாளில் அப்போது தான் அவனை அழைக்கிறாள். அதுவரை அவனாக தான் அவளுக்கு வேலையை கொடுத்து கொண்டிருந்தான்.

சட்டென நிமிர்ந்தது அவன் கண்கள்.

“என்ன? ஓ, டைம் ஆய்டுச்சா… சரி நீ போய் வா கீர்த்தனா… ” என்று அவளுக்கு விடை கொடுத்தான்.

அவனும் அப்போது தான் அவளை பேர் சொல்லி அழைக்கிறான்.

அவள் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய மறு நொடி இமை சிமிட்டி அதை மறைத்தாள்.

மாறாக சரி என்று தலையாட்டி விட்டு நகர்ந்தாள்.

“ஹாய் கீர்த்து டார்லிங்,” என்ற விக்கியின் குரலில் சற்று பதட்டமானவள் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள்.

அவளின் செய்கையை கண்டு சிரித்த விக்கி ,

“பயப்படாத கீர்த்து…யாரும் இல்லை அதான் அப்படி கூப்பிட்டேன்” என்றான்.

அது அவளுக்கும் புரிய திரும்பி அவனை முறைத்தாள்.

அதை சட்டை பண்ணாதவன்,

“முதல் நாள் வேலை எப்படி போச்சு கீர்த்து?”

அதெல்லாம் நல்லாத்தான் போச்சு. நீ பண்றதுதான் நல்லாவே இல்ல… முகத்தை கோபமாய் காட்டினாள்.

“ஏன் நான் என்ன பண்ணேன் ?” என்றான் அப்பாவியாய்.

“என்ன பண்ணல விக்கி ?”

“ சரியா பார்த்தா இந்நேரம் நான் உனக்கு என்ன முறையாக இருக்கணும் ? ஆனா நீ என்னை எப்படி கூப்பிடுற டார்லிங்னா சகிக்கலை” என்றாள் முகத்தை அஷ்ட கோணலாய் வைத்து கொண்டு.

அவளை கண்டு எழுந்த புன்னகையை அடக்கியவன்,

அடுத்த கணம் சமாதானமாய் “ஓகே டார்லிங்னு கூப்பிடலை. சரி வீட்டுக்கு எப்படி போகிற நான் வேணும்னா ட்ராப் பண்ணவா?”

அவனை முறைத்தவள் ,

“இதோ பார் விக்கி உனக்கும் எனக்கும் பழக்கவழக்கம் இந்த ஆபீசோடையே நிக்கணும். அதுதான் நல்லது காலையில ஆஃபிஸ் வர தெரிஞ்ச எனக்கு இப்போ வீட்டுக்கு போகவும் தெரியும். சோ வேண்டாம் …” என்று நடையை போட்டாள்.

அவளையே கூர்ந்து பார்த்தவன் தோளில் ஒரு கை விழ திரும்பி பார்க்க அங்கு கார்த்திக் நின்று கொண்டிருந்தான்.

“வாடா நீ எப்போ வந்த”

“அதுவா நீ பல்ப் வாங்கிட்டு இருக்கும் போதே வந்துட்டேன். சரி டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டுட்டேன் ” என்றான் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியவாறு.

“ஆமாடா பேய் மாறி கத்திட்டா…. ஆனால் நமக்கு அதுலாம் புதுசு இல்லையே, அதான் சட்டுனு சரண்டர் ஆயாச்சு” என்றான் .

“அது சரி நீ வீட்டுக்கு போகல.”

“ம் கிளம்பிட்டேன்” கார்த்திக்கும் கூற

இருவரும் பிரிந்து தத்தமது வீட்டிற்கு சென்றனர்.

வீட்டிற்கு வந்த கீர்த்தனா குளித்து விட்டு

தனக்கு குடிக்க டீ போட்டு கொண்டு சோபாவில் சாய்ந்தாள். டிவியை ஆன் பண்ணி மியூசிக் சேனலை வைத்தவள், அதில் கவனம் செலுத்தியவாறே டீயை உறிஞ்சினாள்.

சிறிது நேரம் டிவியில் கவனம் செலுத்தினாலும் அதுவும் சலிப்படைய ஆஃப் பண்ணியவள் தனக்கும் மித்ராவிற்கும் இரவு உணவு தயாரிக்க சென்றாள்.

சிறிது நேரம் செல்ல மித்ராவும் அலுவலகம் முடிந்து வர அவளுடன் இணைந்து செய்து முடித்தவர்கள் ஒன்றாக அமர்ந்து உண்ண தொடங்கினர்.

அன்றைய பொழுதை பற்றி பேசி கழித்தவர்கள் உறங்க சென்றனர்.


Post a Comment

0 Comments