அது மே மாதம் என்பதால் வெயில் சுட்டெரித்து கொண்டிருந்தது.
நண்பர்களோடுஅரட்டை அடித்துவிட்டு வீட்டில் நுழைந்த கார்த்திக்கின் தலைவிண் விண்னென்று வலித்தது. அது நேரம் வரைஇல்லாத தலைவலி இப்போது எங்கிருந்து வந்தது என்ற கடுப்புடன்சோபாவில் சாய்ந்தவன்,
“அம்மா டீ” என்று குரல் கொடுத்தான்.
சில நிமிடங்களிலேயே அவன் நாசியில் சூடான இஞ்சி டீ யின் மணம் வீசகண்கள் திறக்காமலேயே,
“நீ எப்போ வந்த ரோஜா” என்றான்.
“எப்படி மாமா கண்டுபிடிச்ச” அவள்விழி விரித்து கேட்க,
“உன் வாய் பேசலைன்னாலும் உன் வாசம் என்னிடம் பேசும்” அவள் மேனியை வாசம் பிடிப்பவன் போல் மூச்சை உள்ளிழுத்தவாறு அவன் கூற பெண்ணவள்,
“ஸ்ஸ் , அத்தை” என்று அடுக்களையை காட்டினாள்.
இருவரும் ஒரு சேர சமையலறையை எட்டிப்பார்க்க,
“நான் எதையும் கேட்கலைப்பா” குரல் கொடுத்தார் சாவித்திரி.
இருவருக்கும் ஒரு சேர சிரிப்பு வர, “ அம்மா உன் காதை மேசையில் இருந்து எடுத்து சமையல் கட்டுக்கு கொண்டு போ” என்றான் சிரிப்பாக.
சாவித்திரிக்குமே சிரிப்பு வர அவர் அமைதியாய் பின் பக்கம் சென்றார்.
காலடி ஓசையை கேட்டு அவர் அங்கு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டவன், கீர்த்தனாவின் கையை பிடித்து இழுத்து சோபாவில் அமர வைத்தான்.
“இப்போ சொல்லு மகாராணிக்கு என் மேல் என்ன கோபம்”
“எப்படி தெரியும் மாமா” மீண்டும் விழி விரித்து அவள் கேட்க,
அவளின் நெற்றிப்பொட்டை தட்டியவன் “ இந்த சுருக்கத்தை வைத்துதான் சொன்னேன்.
“சரி சொல்லு என்ன விஷயம்? ” ஆசுவாசமாய் சோபாவில் சாய்ந்து அவன் கேட்க,
“பின்ன என்ன? எதுக்கு இந்த வெட்ட வெயில்ல போகணும்? தலை வலியை இழுத்துட்டு வரணும்?
பேசாம வீட்டிலேயே இருந்தா, இப்படி சாப்பாடு சாப்புடுற நேரத்துல டீ குடிக்காம இருந்து இருக்கலாம் தானே. இப்போ டீ குடிச்சா எப்போ லன்ச் சாப்பிடுறது. அதான் கோவம்”
அவனின் சட்டை பொத்தானை திருக்கி கொண்டவாறு இவள் கேட்க, ' இவளுக்கு என் மேல் கோபமாம்' இந்த லட்சணத்தில் கோபப்படும் அவளை அவனால் ரசிக்கத்தான் முடிந்தது.
“சரி இப்போ நான் லன்ச் சாப்பிடணும் அவ்ளோதான”
கையிலிருந்த டீ கப்பை மேசையில் வைத்தவன்
“ ஆனால் ரோஜா, உனக்கு என்னை தெரியும்ல. இந்த கடுமையான தலை வலியோடு நான் சாப்பிட்டேன்னா, கண்டிப்பா வாமிட் பண்ணிடுவேன். அது உனக்கு ஓகேன்னா . நான் சாப்பிட ரெடி”
மேசையில் இருந்த டீ கப்பை எடுத்து அவனிடம் கொடுத்தவள்,
“ நீ லேட்டா சாப்பிட்டாலும் ஓகே. ஆனா சாப்பிடுற சாப்பாடு உடம்புல ஒட்டுனா சரிதான்”
அவளின் மூக்கை பிடித்து ஆட்டியவன், “என் செல்லம்” என்றான்.
“அய்யோ, பிடிங்க பிடிங்க” பிரியாவின் குரலில் நினைவு மீண்டவள்,
“எதைடி பிடிக்க சொல்லுற” என்றாள் புரியாமல்.
“ஹான், அதுவா உன் மண்டைல இருந்து கழண்டு ஓடுச்சே ஒரு நட்டு அதை தான் பிடிக்க சொன்னேன்” என்கவும் பவித்ரா சிரிக்க கீர்த்தனா அவளை மொத்தினாள்.
“ பின்ன என்னடி நானும் பாக்குறேன் சாப்பிட வந்த நேரத்துல இருந்து எதையோ நினைச்சு நினைச்சு சிரிக்கிற. இப்படி சிரிக்கிறவங்களை எங்க ஊர்ல பைத்தியக்காரன்னு தான் சொல்வாங்க. உங்க ஊர்ல எப்படி பவி ?” என்று கேட்டு மேலும் சில மொத்துக்களை வாங்கி கொண்டாள்.
0 Comments