ஒரு தனியார் கன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பனி , தாங்கள் கட்டவிருக்கும் பட்ஜெட் வீடுகளுக்கு உள் கட்டமைப்பு வசதிகள் செய்து தர சொல்லி கொடுத்திருந்த பிராஜெக்ட் நல்லதோர் முறையில் வடிவமைக்க பட்டு அந்த கம்பனியின் உரிமையாளர் மத்தியில் நன்மதிப்பை பெற்று இருந்தது.
ஆகவே பேசிய தொகையை கொடுத்தது மட்டுமில்லாமல், அடுத்த தங்களின் அடுக்கு மாடிக் குடியிருப்பு பிராஜக்ட்டையும் அவர்களிடமே கொடுத்து அதற்கு அவர்கள் கேட்ட தொகையையும் தருவதாக ஒத்து கொண்டு இருக்க கார்த்திக் அண்ட் கோவிற்கு
அலுவலகத்தில் எல்லாருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி அதை கொண்டாடும் விதமாக அந்த வார கடைசியில் ஒரு சிறிய பார்ட்டி ஏற்பாடு செய்ய பட்டிருக்க…
எல்லாரும் அந்த வார கடைசியை ஆவலோடு எதிர் பார்த்து கொண்டிருந்தனர். இதோ அதோ என போக்கு காட்டி விட்டு வார கடைசியும் வந்தது.
வான் நீல வண்ணத்தில், கோல்ட் சரிகை பார்டர் கொண்டு, சிறு சிறு கற்களும் பாசி மணிகளும் கோர்க்க பட்டு, கீர்த்தனாவின் உடம்பில் அழகாய் படர்ந்து இருக்க, சேலையில் இருந்தே வெட்டி தைக்க ப்ளவுசும், வான் நீல வண்ணம் கொண்டு கழுத்து, கை மற்றும் காதுகளை நிரப்பி இருந்தாள்.
படியிறங்கி வந்தவளை கண்ட மித்ரா,
“ வாவ், கீர்த்து அசத்துற. இன்னக்கி உங்க ஆஃபிஸ்ல எல்லாரும் உன்னை பாத்து க்ளீன் போல்ட் ஆக போறாங்க” என்க
அழகாய் சிணுங்கினாள்.
“பட்டு சேலை கட்டி இருந்தா இன்னும் சூப்பரா இருப்பியே” மித்ரா கூற,
“எனக்கு பட்டு சேலை கட்ட வராது மித்து” என்று கூறினாள்.
“ சொல்லி இருந்தா நான் ஹெல்ப் பண்ணி இருப்பேனே . சரி நெக்ஸ்ட் டைம் பட்டு சாரி கட்டுறதா இருந்தா தயங்காம என்னை கூப்பிடு . அப்புறம் என் டிரஸ் எப்படி இருக்கு?” என்றாள் கண்ணடித்து கொண்டே.
“உனக்கென்ன மித்து, தேவதை போல இருக்க இந்த வொய்ட் கலர் சுடியில்”
“ ம்ம், உன்ன விடவா?” கண்ணடித்து கேட்டாள்.
“ நீ உங்க ஆள் கிட்ட வேணும்னா கேட்டு பாரு” என்க மற்றவள் எப்போதும் போல் சிரித்து வைத்தாள்.
இரவின் தனிமையில் அதிக நேரம் போனிலேயே வாசம் செய்யும் அவளின் மனதை வந்த சில நாட்களிலே கண்டு பிடித்து விட்டாள்.
ஒரு முறை அவளிடம் உறுதி படுத்தி விட்டு, பின் அவளை கேலி கிண்டல் செய்து ஓய்ந்து “எப்போது இன்ட்ரோ கொடுப்ப” என்றவளின் கேள்விக்கு சிறிது நேரம் அமைதியாக பின் மெல்ல “சீக்கிரமே” என்பாள்.
கீர்த்துவும் அதன் பின் அவ்வளவாய் துருவ மாட்டாள். ஆனால் எப்போதாவது இது போன்று பேச நேரிடும் போது இவள்,
' அவனை இன்னும் நீ கண்ணில் காட்ட வில்லை'
என்ற ரீதியில் பேசுவாள்.
வாய் இப்படி கூறினாலும் கண்கள், 'இன்னுமா அந்த சீக்கிரம் வரவில்லை' என்று கேட்கும்.
பேசிய படியே மணியை பார்க்க அவசரமாய் அவளிடம் விடை பெற்று கிளம்பினாள்.
பார்ட்டி நடக்கும் ஹோட்டலுக்கு ஆட்டோவில் வந்திறங்கியவள், வாசலிலேயே பிடிபட்ட ப்ரியாவோடு உள்ளே நடந்தாள்.
எதிரில் வந்த விக்கி கீர்த்தனாவை கண்டு வாயை பிளக்க, “ கீர்த்து ரொம்ப அழகா இருக்க. அப்படியே அம்மா போல” என்று கூறி விட்டு நாக்கை கடிக்க,
கீர்த்தனா ப்ரியாவை பார்வையால் சுட்டி காட்டி அவனை முறைத்தாள்.
நொடி பொழுதில் அவர்களுக்குள் ஏற்பட்ட சம்பாஷனையை கண்டு கொண்டாள் ப்ரியா. இருந்தும் எதையும் வெளிக் காட்டாமல் அமைதியாய் இருந்தாள்.
“அது வந்து… அம்மா… அதான் கோவில் அம்மன் சொல்வாங்களே அப்படி இருக்க” என்று ஏதோ கூறி சமாளிக்க பார்த்தான். கீர்த்தனாவும் அவனுக்கு இணையாய்,
“ அதுக்காக கால்ல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிடாதீங்க” என்று கூறி ப்ரியாவின் கவனத்தை கலைக்க முயன்றாள்.
“ சரி உள்ளே போங்க. கீர்த்தனா செகண்ட் ப்ளோர்ல பார்ட்டிக்கு தேவையான சாப்பாடு வகைகள் இருக்கு, எல்லாம் சரியா இருக்கானு ஒரு டைம் செக் பண்ணிட்டு எனக்கு இன்பாம் பண்ணு” என்று கூறி விட்டு நகர்ந்தான்.
உள்ளே சென்று அமர்ந்தாலும் ப்ரியாவின் எண்ணம் விக்கி கீர்த்தனா பற்றியே இருக்க அவள் மனம் ஏதேதோ எண்ணியது.
“கீர்த்து சாரி ப்ளீட்ஸ் கலைஞ்சுட்டு கொஞ்சம் ஹெல்ப் பண்ண வா” என்று அவளை தனியே கடத்தி சென்றாள்.
இரண்டாம் தளத்தில் மூன்று அறைகளை புக் செய்து இருந்தனர். ஒன்று பெண்களுக்கு அவசர நேரத்திற்காகவும் அடுத்த அறையில் பார்ட்டிக்கு தேவையான உணவு வகைகளையும் அதற்கு அடுத்த அறையை ஆண்களுக்கும் ஒதுக்கி இருந்தனர்.
பெண்களுக்கு என்று தனியாக ஒத்துக்க பட்டிருந்த அறையில் தன் ப்ளீட்ஸை சரி செய்து கொண்டிருந்த கீர்த்தனாவை பார்த்த ப்ரியாவின் மனதில் ஏகப்பட்ட சந்தேகங்கள்.
விக்கியும் கீர்த்தனாவும் பேசி கொள்வதை பார்க்க அவர்கள் இதற்கு முன்பே அறிமுகமானவர்கள் போல் தெரிய… இது மட்டுமல்ல அவர்களுக்குள் வேறு ஏதோ பந்தம் உள்ளது போல் தோன்றியது.
“கீர்த்து உன் சொந்த ஊர் மதுரை தானே” கொக்கி போல் வினவ,
“ஆமாம்டி” அப்பாவியாய் அவள் விரித்த வலையில் சிக்க தொடங்கினாள்.
“ மதுரையில எங்க?”
“ பூங்குடில் கிராமம். ரொம்ப அழகா பசுமை மாறாம இருக்கும்”
தன் ஊரின் காட்சியை கண்ணில் கொண்டு வந்து கூறினாள்.
‘என்றோ? எப்போதோ? விக்கியும் தன் ஊரின் பெயரை கூறி இருக்கிறான். ஆனால் இப்போது நினைக்கும் போது அவன் பூங்குடில் என்றா சொன்னான்.'
கவனமாய் தன் அடுத்த தூண்டிலை மிக ஆழமாக போட்டாள்.
“அப்போ விக்கி உன்னோட அத்தை பையனா?”
ஏற்கனவே ஊரின் நினைவில் இருந்தவள் ப்ரியாவின் கேள்வியில்,
“ உனக்கு எப்படி தெரியும்?” என்று கேட்டு நாக்கை கடித்து கொண்டாள்.
' ஆக மீன் மாட்டிகிச்சு ' என்று எண்ணியவள்,
“அப்போ அன்னகி சங்கர் கிட்ட சொன்ன அந்த அத்தை மகன் விக்கி தானா?. நீயும் விக்கியும் லவ் பண்றீங்களா?. குடும்ப பிரச்சனையா? அதான் ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டீங்களா?” அவளின் ஏகப்பட்ட சந்தேகங்களுக்கும் தீர்வு கிடைத்தது போல் அவள் அடுக்கி கொண்டே போக,
“பளார்” என்ற அறையை கன்னத்தில் வாங்கியவள் அதிர்ந்து போய் கீர்த்தனாவை பார்த்தாள்.
“கீர்த்து”
அவளை கையமர்த்தியவள்,
“விக்கியையும் என்னையும் சேர்த்து வச்சு உன் வாயில இருந்து இன்னொரு வார்த்தை வந்துச்சு. உன்னை கொலை பண்ணிடுவேன் ஜாக்கிரதை” விரல் நீட்டி எச்சரித்து விட்டு நகர்ந்தவளை இமைக்காமல் பார்த்தாள்.
0 Comments