16. என் உள்ளம் உன் வசம்



இரண்டு நாட்களாக தொங்கிய முகத்துடன் வலம் வரும் சங்கரை பார்த்த விக்கி அவனிடம் விசாரித்தான்.

“ என்ன ஆச்சு சங்கர்? ஏன் ரெண்டு நாளா ஒரு மாதிரி இருக்குற? உடம்பு எதும் சரியில்லையா?”

“ இல்லை சார்”

“ அப்புறம் லீவ் ஏதும் வேணுமா?”

“இல்லை சார்”

“பின்ன ஏன் இப்படி இருக்க? என் கிட்ட சொல்லலாம்னு தோனுச்சுனா சொல்லு” அமைதியாய் கூறியவனை தயங்கிய படி பார்த்தான் சங்கர்.

“ அது வந்து சார்….”

“ ஓகே. உனக்கு விருப்பம் இல்லைனா விடு”

“அய்யோ அப்படிலாம் இல்லை சார்” தயங்கிய படியே அனைத்தையும் அவனிடம் கூறியவன்,

“நீங்களே சொல்லுங்க சார். கீர்த்தனாவுக்கு என்னை பிடிக்குமா..? பிடிக்காதா..?”

இரண்டு நாட்களாக அவன் மனதில் அரித்து கொண்டிருந்த அந்த கேள்வியை அவனிடமே கேட்டான்.

சிறிது நேரம் யோசித்தவன்,

“ கீர்த்தனாவுக்கு உன்னை பிடிக்கும் சங்கர். ஆனால் அது நட்புன்ற ஒன்னை தாண்டி வேற எதுவாகவும் இருக்க வாய்பில்லை.”

“ போங்க சார், இதையே தான் அவளும் சொல்றா”

“ இசிட், என்னனு சொன்னா?”

அவள் அனுப்பிய குறுஞ்செய்தியை அவனிடம் காட்டினான். அதை படித்து பார்த்தவன் முகம் யோசனையில் ஆழ்ந்தது.

“ பார்த்தியா… நான் சொன்னது போல தான் அவளும் சொல்லிருக்கா”

“ இல்லை சார், உங்களுக்கு கீர்த்தனாவ பத்தி தெரியாது. அவளுக்கு வேற ஏதோ ஒரு பிரச்சினை…” அவன் மனம் ஒப்பாமல் குழந்தை போல் கூற,

வாய் விட்டு சிரித்தான் விக்கி.

“சார் இப்போ எதுக்கு இப்படி சிரிக்கிறீங்க?” கடுப்பாய் கேட்டான். சும்மா போனவனை கூப்பிட்டு பேசி இப்போ இப்படி சிரித்து வைத்தால் கடுப்பாகாமல்.

“ குட் ஜோக், எனக்கு கீர்த்துவ பத்தி தெரியாதா? ஹா ஹா…”

“என்ன சார் சொல்றீங்க? உங்களுக்கு கீர்த்தனாவ முன்னாடியே தெரியுமா? எப்படி தெரியும்? எப்போல இருந்து தெரியும்? இதை ஏன் நீங்க சொல்லவே இல்லை?” கேள்விகளை அவன் அடுக்கி கொண்டே போக,

“ ஹேய் சங்கர், கூல் ஏன் இவ்வளவு எமோசன். உன்னோட ஒவ்வொரு கேள்விக்கா பதில் சொல்றேன்.

முதல் கேள்வி,உங்களுக்கு கீர்த்தனாவ முன்னாடியே தெரியுமா?

ஆமா தெரியும்.

அடுத்தது, எப்படி தெரியும்?- இதுக்கு பதில் தெரியல..

அப்புறம், எப்போல இருந்து தெரியும்?”

ஒரு விரலை நெற்றியில் வைத்து யோசித்தவன்,

“ அவ பிறந்ததுல இருந்து தெரியும்…

லாஸ்ட்,

இதை ஏன் நீங்க சொல்லவே இல்லை?”

சொல்ல வேண்டிய சூழல்ல அப்போ நாங்க இல்லை.”

“ என்ன சொல்லுறீங்க சார் கீர்த்தனாவை உங்களுக்கு பிறந்ததும் முதல் தெரியுமா? தெளிவாக சொல்லுங்க சார்”

“ அடேய் சங்கரா, உனக்கு எப்படி சொன்னா புரியும்.சரி இது புரியுதா பாரு? கீர்த்தனா என்னோட மாமன் மகள், அதாவது எங்க அம்மாவும் கீர்த்துவோட அப்பாவும் கூட பிறந்தவங்க… இப்போயாச்சும் புரியுதா?”

அவன் என்ன சொல்கிறான் என்பது மண்டையில் உரைக்க, “ ம்ம், புரியுது சார்” என்றவன் பதறி,

“சார் அப்போ கீர்த்தனா சொன்ன அந்த அத்தை மகன் நீங்க தானா?”

“ கீர்த்தனாவின் அத்தை மகன் தான் நான். ஆனால் அவ என்ன சொன்னா தெரியாம அது நான் தான் ஒத்துக்க முடியாது. சோ, அவ என்ன சொன்னானு சொல்லு. அப்புறம் அது நானானு சொல்றேன்.” முக பிரகாசத்துடன் கேட்க,

“ அய்யோ சங்கர் சொன்னா புரிஞ்சுகோங்க. எனக்கு வேற ஒருத்தரை பிடிக்கும். என் மனசில் எப்பவுமே என் அத்தை மகனுக்கு மட்டும் தான் இடம். அதனால் இப்படி பிணாத்தாமல் உங்க வேலையை போய் பாருங்க”

சங்கர் கூறியதை கேட்ட விக்கிக்கு ப்பூ… என்றாகி விட்டது.

‘ இது தனக்கு தெரிந்த விஷயம் தானே, கார்த்திக்கும் கீர்த்துவுமே ஒருவரை ஒருவர் பிரிந்து சென்றாலும், கார்த்திக் கீர்த்தனாவை தவிர வேறொரு பெண்ணை கனவிலும் நினைக்க மாட்டான். கீர்த்துவும் அப்படியே.’ அதனால் சங்கர் கூறிய செய்தியில் தனக்கு வேண்டிய தகவல் ஒன்றும் இல்லை என்றே தோன்றியது அவனுக்கு.

“ என்ன சார் எதுவும் சொல்ல மாட்டேங்றீங்க, நீங்க தானே அது. கீர்த்தனா விரும்புறது உங்களை தானா?”

“ அடேய், வாயை கழுவுடா, நீ சொன்னத மட்டும் அவ கேட்டிருந்தா உன்னை இங்கேயே பொலி போட்டுருப்பா..”

“ ஏன் சார்?” புரியாமல் மலங்க மலங்க விழித்தவனிடம் ,

“ சங்கர் ரெண்டு நாளா உன் மூளைய யார்ட்டயும் கடன் கொடுத்துட்டியா?”

“ எனக்கு நிஜமாக புரியலை சார்..”

“ நான் கீர்த்தனாவின் அத்தை மகன்னு சொன்னேன். நான் மட்டும் தான் அத்தை மகன்னு சொனேன்னா?”

‘ கீர்த்தனாவிற்கு விக்கி அத்தை மகன்… அப்போ விக்கியோட அண்ணன் கார்த்திக்கும் கீர்த்தனாவிற்கு அதே முறை தானே… அப்படின்னா….' மின்னல் போல் அவன் புத்தியில் உரைக்க,

“சார் அப்போ கார்த்திக் சாரா?”

“ பரவாயில்லையே, இமாலய ரகசியத்தை கண்டு பிடிச்சுட்டியே..”

அவனின் கேலி புரிந்தாலும் அதை கவனியாதவன் போல்,

“ ஆனா இவங்க ரெண்டு பேரையும் பார்த்தா காதலிக்குறவங்க மாதிரி தெரியலையே, சார்”

“ இவங்க காதலிக்கிற லட்சணம் அப்படி சங்கர்”

“ புரியலையே சார்”

'உனக்கு விளக்கம் சொல்லியே என் நேரம் போகுது பார்' என்று முறைத்தான்.

“ சார், please சார்… இது மட்டும் சொல்லுங்க இல்லைனா என் தலையே வெடிச்சுடும்” பாவமாய் இருந்தது அவனை பார்க்க.

ஒரு நெடு மூச்சுடன், அவர்களின் கடந்த கால பக்கங்களை புரட்டி அவனுக்கு கூறினான். கடைசியாக அவன் இங்கு கீர்த்தனாவை வர வைத்தது வரை.

“ என்ன சார் சொல்றீங்க…? அப்போ இந்த இடைப்பட்ட காலத்தில் கார்த்திக் சார் கீர்த்தனா மேடமை தேடி போகவே இல்லையா”

'அவனின் மனதில் கீர்த்தனா உரிய இடத்தை பெற்று விட்டாள்' என்பதை அறிந்த விக்கி சிறு சிரிப்புடன் அதை ஏற்று கொண்டான்.

மறக்காமல் அவனின் கேள்விக்கு பதில் சொன்னவனின் முகம் கலங்கி இருந்தது. ( அது என்னவென்பதை பின்னே சொல்கிறேன் )

அவன் கூறியதை கேட்ட சங்கரோ,

“ அட கடவுளே, நிஜமாவா சார்.” தன் பங்கிற்கு பதட்டம் காட்டினான்.

அன்றைய நாளின் நினைவில் இன்றும் விக்கிக்கு கண்கள் கலங்க,

“ அந்த சமயம் நான் பக்கத்துல இருந்ததால கொஞ்சம் பரவாயில்ல. கூடவே தெரிஞ்ச குடும்பமும் ரொம்பவே உதவி செஞ்சாங்க.”

“ நீங்க உங்க வீட்டுக்கு கூட இத பத்தி சொல்லலயா சார், அவங்களும் உங்களுக்கு உதவியாக இருந்து இருப்பாங்களே”

“ நான் இதை பத்தி யார் கிட்டயும் சொல்லலை சங்கர்”

“ அப்போ கீர்த்தனா மேடம்க்கும் தெரியாதா சார்?”

“ ஆமா”

“ அப்போ, அவங்க எப்படி வர சம்மதிச்சாங்க…”

“ இதை சொல்லி இருந்தா அவளுக்குள்ள இரக்கம் தான் வந்திருக்கும். அதனாலே அவளை முதல் இங்க வர வச்சு அவள் மனசுல புதைச்சு வச்சிருக்கிற கார்த்திக் மேலான காதலை வெளியே கொண்டு வந்த பிறகு இதை பத்தி சொன்னா தான் தகும் பட்டுச்சு. அதான் அவளை வர வைக்க என் அம்மான்ற பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்தேன். நான் நினைச்சது போல கார்த்திக் மேல கோவம் இருந்தாலும் அத்தைக்காகவாச்சும் வருவானு கணக்கு போட்டேன். என் கணக்கு தப்பலை.

இதை யோசிக்க தெரிஞ்சவளுக்கு, அத்தையோட சந்தோசமே “ இவங்க ரெண்டு பேரும் சேருவதில் தான் இருக்கு” என்றதை மறந்தது எனக்கு கூடுதல் வசதியா போச்சு”

பார்த்து பார்த்து அவன் போட்ட பிளானை கண்டு பிரமித்து நின்றான் சங்கர்.

அவனின் பார்வை புரிந்தது போல் இவன் சிரித்து வைக்க,

“அப்புறம் சங்கர், இந்த விசயம் நமக்குள்ளே இருக்கட்டும். உன்னை விட்டு வெளியே போகாது அது எனக்கு தெரியும் இருந்தாலும் சொல்ல வேண்டிய அவசியம் அதான் தப்பா எடுத்துக்க வேணாம்.”

“ நிச்சயமா சார்”

“ அப்புறம், என்னால் முடிந்த ஒரு சின்ன உதவி, அடுத்த முறை கீர்த்துவ பார்த்து பேசும் போது அவள் கண்ணை நேரா பார்த்து பேசு. ஏன்னா, கீர்த்துவோட வாய் பொய் சொன்னாலும் கண் பொய் சொல்லாது. அது வச்சு நீ ஈசியா உன்னை சுத்தி நடக்குறத கேப்ட்சுவர் பண்ணிக்கலாம். புரியுதா”

“சரி சார்” நன்றியோடு அவனை பார்த்தான்.

“ சரி இப்போ கொஞ்சம் வேலையும் பார்ப்போம்.” என்று கூறி விட்டு அமைதியாக வேலையை தொடர்ந்தனர்.

எப்போதடா லன்ச் ப்ரேக் வரும் என்று காத்து கொண்டிருந்த சங்கர் அவசரமாய் கேன்டீன் பக்கம் ஓடினான்.

மூவரும் அமர்ந்திருந்த மேசைக்கு அலறி அடித்து வந்தவன் காலியான ஒரு சேரை இழுத்து போட்டு அவர்களோடு அமர்ந்து கொண்டான்.

மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்தவனை பார்த்த ப்ரியா, கீர்த்தனாவை முறைத்தாள்.

' இதென்ன வம்பா போச்சு. இவன் இப்படி ஓடி வந்தா இவள் என்னை எதுக்கு முறைக்கனும்? நல்லா இருக்குடி உன் நியாயம் '

ஏதோ எண்ணி கொண்டிருந்த கீர்த்தனாவை அழைத்த சங்கர்,

“ ஐ அம் சாரி கீர்த்தனா. விக்கி சார் இப்போதான் எல்லாமும் சொன்னாங்க”

விட்டால் அவன் இன்னும் என்னென்ன கூறி இருப்பானோ,

தன் பெரிய கண்ணை முழுதும் விரித்து அவனை முறைத்தாள்.

அதன் பின்னே தான் சுதாரித்துக் கொண்டான் சங்கர்.

“இட்ஸ் ஓகே சங்கர், அண்ட் ஐ அம் அல்சோ சாரி… அன்னக்கி நானும் உங்க கிட்ட அப்படி பிஹேவ் பண்ணி இருக்க கூடாது. மன்னிச்சுடுங்க”

இதை கீர்த்தனா கூறும் போது அடிக்கடி அவள் ப்ரியாவை பார்ப்பதை சங்கர் குறித்து கொண்டான்.

' ஆக இவள் ப்ரியாவை பற்றி தான் என்னிடம் சொல்ல எண்ணினாளா?'

அவன் திரும்பி ப்ரியாவை பார்க்க அவள் இப்போது இவனை முறைத்தாள்.

' எதுக்கு முறைக்குறா?' புரியாமல் முழித்தான்.

அவன் எண்ணி கொண்டு இருக்கும்போதே ப்ரியா பொரிய தொடங்கினாள்.

“ மன்னிப்பு கேக்குறா.. மன்னிப்பு… யாருக்குடி வேணும் உன் மன்னிப்பு. எல்லார் முன்னாடியும் திட்டிட்டு இப்போ எங்க முன்னாடி மட்டும் மன்னிப்பு கேக்குறா பார்.

இவனும் பதிலுக்கு நாலு திட்டு திட்டுறத விட்டுட்டு வாயை பிளந்தபடி போஸ் கொடுக்குறத பாரு”

அவளின் பேச்சை பவியும் சங்கரும் புரியாமல் பார்க்க, கீர்த்தனா மட்டும் தான் ' ஆகா பூனை குட்டி வெளியே வருது ' என்ற நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.

இது எதையும் அறியாத நிலையில் ப்ரியா இருந்தாள். இரு நாட்களாக அவள் அடக்கி கொண்டு இருந்த கோவம் இன்று மடையை உடைத்து கொட்டி கொண்டிருந்தது.

அப்போது தான் அவளை முழுமையாக பார்த்தான் சங்கர்.

கையை பிசைந்த வண்ணம்,

“இதோ பார் சங்கர், எனக்கு இந்த மத்த பொண்ணுங்க மாதிரி எல்லாம் பேச தெரியாது. சோ அதனால் பட்டுனு சொல்லிடுறேன்.

எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு… ஐ லவ் யூ”

அவள் அப்படி கூறவும் கீர்த்தனா பவியை பார்வையால் அழைத்து நகர்ந்திருந்தாள்.

பிரமை விலகாத சங்கர் அவளின் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து கொண்டான்.

“ சாரி ப்ரியா, என் மேல உனக்கு இப்படி ஒரு எண்ணம் இருக்கும்னு நான் நினைக்கவே இல்லை. அது தெரியாம நான் வேற மட்டியாட்டம் உன் முன்னாடியே கீர்த்தனாக்கு ப்ரபோஸ் பண்ணி… ச்ச உன் மனசு எவ்ளோ கஷ்ட பட்டிருக்கும். ஐ ஆம் ரியலி சாரிடா”

அத்தனை நேரம் படபடவென பொரிந்து கொண்டிருந்தவள், அமைதியாக அமர்ந்து இருந்தாள்.

“ நீ இப்படி திடீர்னு சொன்னதும் எனக்கு என்ன சொல்றதுன்னு தெரியலைமா, எனக்கு கொஞ்சம் டைம் கொடு ஒரு ஒன் வீக். அதுக்குள்ள நான் என்னோட விருப்பத்தை சொல்றேன்” என்று கூறி விட்டு நகர்ந்தான்.

Post a Comment

0 Comments