05. சட்டென்று மாறிய வானிலை

 


“ஹாய் எழில்!!!”

“ம்ம்ம்ம், சொல்லுங்க சரோ, பொதுவா பசங்கலாம் பொண்ணுங்க நம்பர் கிடச்சா தானே பத்து நிமிசத்துல கால் பண்ணுவாங்க.... என் நம்பர் வாங்கிட்டு போய் ஒரு ஒன் அவர் கூட முழுசா நிறையல அதுகுள்ள கால் பண்ணிருக்கீங்க.... என்ன விஷயம்? ம்ம்ம்ம்....”

“ என்ன பண்றது? எழில் கால் பண்ண வேண்டிய கட்டாயம் வந்துருச்சே அதான்”

“கட்டாயமா! என்ன கட்டாயம்? அதும் எனக்கு கால் பண்ற அளவுக்கு” என்று சீரியசாக அவன் வினவ,

சரோ நடந்த கூத்தை கூறினான். மிகவும் கஷ்ட பட்டு சிரிப்பை அடக்கியவாறு,

அருகில் இருந்த சந்திரன் தன்னை முறைப்பதையும் பொருட்படுத்தாதவாறு.... மேலும் தனக்கு வேண்டிய உதவியையும் கூறினான்.

“என்ன விளையாடுறீங்களா? நீங்க சொல்ற மாதிரி செஞ்சி… தப்பி தவறி அந்த ஜான்சி ராணி கிட்ட மாட்டுனா யார் காப்பாத்துவா? ஆள விடுங்க..” என்று மானசீகமாக அவனுக்கு ஒரு கும்பிடு போட்டான்.

“என்ன எழில்? இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா? எதுவானாலும் ஃபேஸ் பண்ண கத்துக்கங்க, ஒரு பத்து நிமிசம் கழிச்சி ஒரு நம்பர்ல இருந்து கால் வரும் அதுக்குள்ள உங்க போன அண்ணிட்ட சேர்த்துடுங்க ப்ளீஸ்” என்றவாறு அவன் செல்லை அணைக்க…

'அது எப்படி தான் அடுத்தவங்க காதலுக்கே நம்ம ஊறுகாயா ஆக்குறாங்களோ!!! ம்ம்ம்ம்' என்று பெரு மூச்சு விட்டவாறு அங்கிருந்து சென்றான் எழில்.

கன்னத்தில் கையூன்றி கவலையோடு இருந்தாள் சந்தியா..

சிறிது நேரத்திற்க்கு முன் திவ்யா ஏதேதோ காரணம் சொல்லி தன் செல்லை பிடுங்கி சென்றதே காரணம்.

‘ ச்ச்ச… இப்போ என்ன பண்றது?' என்ற யோசனையோடு இருந்த அவளின் முன் தன் செல்லை நீட்டினான் எழில்.

அதை ஆர்வத்தோடு கையில் வாங்கினாலும் சற்று நேரத்தில் ஒன்றும் புரியாது அவனை நோக்கினாள் எதுக்கு என்பது போல்.

“ம்ம்ம், இன்னும் மூணு நாள்ல உனக்கு கணவரா வர போறவர் போன் பண்ணுவார் பேசு...” அவளுக்கு பதில் கொடுத்தான்.

“எப்படிடா நா கூட அத பத்தி தான் யோசிச்சிட்டு இருந்தேன்.. என்ன பண்ணலாம்னு? சரியான சமயத்துல உதவி செஞ்சதுக்கு ரொம்ப நன்றி தம்பி...”

“ரொம்ப புகழாத, எனக்கு புகழ்ச்சி பிடிக்காது... அதோட சீக்கிரம் பேசிட்டு கொடு… கோமதி கால் பண்ணுவா”

“பார்டா, கோமதிட்ட போன்லலாம் பேசுவியா என்ன?”

“ஏன்? பத்தாம் வகுப்பு படிக்கிறவனே தன் ஃபிகரோட ஃபேஸ் புக்லயும் வாட்ஸ் அப்லயும் கனக்ட்டாகி இருக்கும் போது,

கோமதி என்னோட சொந்த மாமன் பொண்ணு அவள்ட்ட நா பேசுறதுல என்ன தப்பிருக்கு?”

இவர்கள் பேசி கொண்டிருக்கும் போதே செல் சிணுங்க அதை தன் காதில் வைத்தவாறு அவனை வெளியேறுமாறு கண் காட்டினாள் சந்தியா.

“காரியம் ஆனதும் கை கழுவிடுவீங்களே...” என்றவாறு அவன் நகர இவள் சந்திரனோடு பேச தொடங்கினாள்.

“ஹலோ சந்தியா”

“ம்ம் சொல்லுங்க...”

“ஸ்ஸ்ஸப்பா... உன் கிட்ட பேசுறதுகுள்ள என் முடியெல்லாம் கொட்டி பாதி கிழவன் ஆய்டுவேன் போல”

வாய் மூடி அவள் சிரிக்க அவனும் அவளோடு சேர்ந்து சிரித்தான்.

“ம்ம்ம் சொல்லுங்க...”

“என்ன? என்னையே சொல்லுங்க சொல்லுங்கனு சொல்ற தவிர நீ ஒன்னும் சொல்லவே மாட்டுக்க...

நீ எதாச்சும் சொல்லுடா?”

“நானா? நா என்ன சொல்ல நீங்க தானே போன் பண்ணீங்க நீங்களே சொல்லுங்க...”

“சொல்லுங்க தவிர வேற எதுவும் சொல்ல மாட்டியா?

பேச ஆரம்பிச்சதுல இருந்து இதையே திரும்ப திரும்ப சொல்லுற... இல்ல எனக்கு தான் காதுல சொன்னதே திரும்ப திரும்ப கேக்குதா..?”

“வயசானாலே இப்படி தான் இருக்கும் கவலை படாதீங்க..”

“என்ன? என்ன சொல்லுற நீ புரியலயே” என்று அவன் கேட்க அவள் நிச்சயத்திற்க்கு முன் தன் சந்தேகத்தையும் அதற்கு தன் தங்கையின் விளக்கத்தையும் கூறினாள்.

“ உன் வீட்டுல எல்லாரையும் விட உன் தங்கச்சி புத்திசாலி தான் போல.. என்ன பத்தி கரக்ட்டா புரிஞ்சி வச்சிருக்கா..”

“ம்ம்ம்ம்”

“ என்ன ம்ம்ம்ம்? பதில் சொல்லு... நீ இப்போ என்ன பத்தி, என் கிட்ட பேசுறத வச்சி என்ன நினைக்க?”

“ம்ம்ம்”

“என்ன ம்ம்ம்… போடுற பக்கத்துல யாராச்சும் இருக்காங்களா என்ன?” அவன் வினவ ,

“ஆமா மாப்பிள்ளை சார், போன் லவுட் ஸ்பீக்கர்ல இருக்குறதோட… நானும் நந்தி போல பக்கத்துலயே இருக்குறதால அவளால பேச முடியலையோ என்னவோ?”

திவ்யாவின் குரலில் தன் கையில் இருந்த போனை தவற விட்டான் சந்திரன்.

அது எதைச்சையாக அங்கு வந்த சரோவின் கையில் விழ, போனை தன் அண்ணனிடம் நீட்டினாலும் அவனின் மிரண்ட விழிகளை கண்டவன்,

செல்லை ஸ்பீக்கரில் போட்டு கேட்க ஆரம்பித்தான்.

‘ நிச்சயம் பண்ணும் போது மாப்பிள்ளைய பார்த்தது... அப்போ கூட பெருசுங்களா பேசி அவர வழி அனுப்பி வச்சுட்டதால பேச கூட முடியல...

சரி ஒரு முறை எதேர்ச்சையா பேச முடிஞ்ச கேப்புல, கொழுந்தியா குறும்ப காட்டலாம்னு விளையாட்டுக்கு அத்தான்ட்ட அப்படி பேசுனேனே தவிர உண்மையில் போன பிடுங்கி வைக்கணும்னு தோணல…

ஆனா, அக்கா காபி கொண்டு போற சாக்க வச்சு மாப்பிள்ளையோட தம்பிய ரெண்டாவது தடவையா சைட் அடிக்கலாம்னு பார்த்தா அந்த ஆளு. .

யாருக்கும் தெரியாம அக்கா கைல எதையோ கொடுத்துட்டு, இப்டி இப்டி புருவத்த தூக்கி காமிச்சு கட்டை விரலையும் தூக்கி காமிக்குது.

இதுக்கு எங்க வீட்டு மகா ராணியும் சப்போர்ட்டா சிரிக்குது...

ஓஹ், நமக்கு தெரியாம எதோ ப்ளான் போடுறாங்க போல விட கூடாதுன்னு... என்னோட ஏழாவது அறிவ தீட்டி என்னனு துப்பு துலக்கும் போது தான் தெரிஞ்சது… அது மாப்பிள்ளையோட செல் நம்பர்னு,

அத்தான் நாம போட்ட போடுல பயந்து இப்படி ப்ளான் போட்டாங்க போலனு நினைச்சி, உள்ள புகுந்து உசுப்பேத்தலாம்னு ஃப்ரண்டுக்கு போன் பண்ண போறதா சொல்லி அக்காட்ட செல்ல வாங்கி வச்சிகிட்டு கொஞ்ச நேரம் கழிச்சி கொடுக்கலாம்னு வந்தா, அக்கா அத்தானோட பேசிட்டு இருக்கா... அவ பேசுனத வச்சு பார்த்தா இது அத்தானோட ப்ளான் இல்ல… அவர் தம்பி போட்டதுனு தெரியுது.

நாம எட்டடி பாஞ்சா இந்த ஆளு பதினாறு அடில பாய்றாரு.... சரியான ப்ளான் பிஸ்தா தான்..'

அவளின் எண்ண குதிரை இப்படி தறிகெட்டு ஓட, சரோவின் குரல் அவளை இயல்புக்கு இழுத்தது.

“என்ன அண்ணி? கேக்குறேன்ல அண்ணா ஏன் இப்படி பேய் அடிச்ச மாதிரி லுக் விடுறான்.. பதில் சொல்லுங்க?” என்று.

மனமோ, ‘ வாய்ஸ் கூட நல்லா தான் இருக்கு இதுக்கும் சேர்த்து ஒரு மார்க் போட்டு நூறு மார்க் கொடுத்துடலாம் பாவம் பிள்ளை பொழச்சி போகட்டும்.' என்று தாளம் போட்டது.

“அதுவா? சரவணா சார், நா கல்யாண மாப்பிள்ளைட்ட பேசவே இல்லை… அதான் பேசலாம்னு வந்தா உங்க அண்ணா சார் பயந்துட்டார்.... இல்ல அத்தான்...” என்று அவள் ராகம் பாட இங்கு சரோவோ,

‘ அட இது நம்ம ஆளு... பரவா இல்லையே வாய்ஸ் கூட குயில் போல தான் இருக்கு...' என்று எண்ணி கொண்டே, அண்ணனை லுக் விட அவன் இவனிடம், பார்வையாலயே காப்பாற்றுமாறு வேண்டி கொண்டிருந்தான்.

அவனுக்கு தலையை ஆட்டியவன்,

“என்ன அண்ணி? மிமிக்கிரிலாம் தூள் கிளப்புது. பட் ஏன் ஜென்ஸ் வாய்ஸ்ல பேசுறிங்க லேடிஸ் வாய்ஸ்லயே பேசலாமே?” எனக் கூற,

சந்திரன் தன் தலையில் கை வைத்து விட்டான்.

“அத்தான் உங்களுக்கு என் அக்கா கூட பேச வேண்டாமா?” என்று அவள் பல்லை கடிக்க...

அவசரமாய் சந்திரன் அவசரமாக,

“அய்யயோ திவ்யா என் ஃபியூச பிடிங்கிறாதமா… நா வேணுனா இவன உன் சார்பா ரெண்டு அடி அடிச்சிடறேன்” என்று கூற,

அவளோ, “ஹாஹாஹா.... என்ன அத்தான் இப்படி படி இறங்கி வந்துட்டீங்க?” என்று கூறினாள்.

“அந்த அளவுக்கு அவர பயமுறுத்தி வச்சிருக்க...” என்று பல்லை கடித்தாள் சந்தியா.

“ பார்டா, இவர சொன்னா மேடமுக்கு கோவம் வருதாக்கும்” என்று தன் அக்காவிடம் பழிப்பு காட்டினாள்.

அதற்க்கு அவள் இரண்டடி போட,

“அய்யோ, அத்தான் உங்க பொண்டாட்டி என்ன அடிக்குறா..” என்று இவள் அலற,

அவசரமாக இடை புகுந்த சரோ, “அண்ணி என் செல்லத்த அடிக்காதிங்க” என்று பதற அவனை புரியாமல் பார்த்தான் சந்திரன்.

இங்கு இவர்களோ தன் காதை நம்ப முடியாமல் பேய் முழி முழித்தனர்.

“ என்ன அத்தான்? உங்க தம்பிக்கு மர கழண்டுருச்சா” என்று அவள் வினவ

அவனை ஒரு பார்வை பார்த்தவாறே,

“இவன் எப்பவுமே இப்படி தான் திவ்யா, எங்க மாமா அத்தை பொண்ணுங்கள்ட்டயும் இப்படி தான் வம்பிழுப்பான்!!” என்று கூறினான்.

ஆனாலும் சந்திரனுக்கு சரோ கூறியது விளையாட்டோ என்று தெரிய வேண்டி இருந்தது. அதற்காகவே இப்படி போட்டு வாங்கினான்.

இங்கு திவ்யாவிற்கோ முகம் வாடி போனது.

' இவன் எல்லோரிடமும் இப்படி தானா? நாம் தான் தவறாக ஏதேதோ கற்பனை செய்து விட்டோமா என்று.' (எதேதோனா?)

தங்கையின் முக மாறுதலை கவனித்த சந்தியாவோ இவளை புரியாமல் பார்த்தாள்.

‘ முதலில் சரவணன் கூறியதை கேட்ட இவள் முகம் பட்டாசாய் ஜொளித்ததென்ன?

இப்போது இவர் கூறுவதை கேட்டு முகம் காற்று போன பலூனாய் மாறியதென்ன?' என்று.

அவசரமாக சரவணன்,

“அது எல்லாம் முறை பொண்ணுங்கள்ட்ட பண்ற விளையாட்டு அண்ணா...

இது நிஜம்... ஆமா அண்ணி... திவ்யா நான் உன்னை விரும்புறேன்.

எப்போ இருந்துனுலாம் தெரியாது உன்ன பார்த்ததும் எனக்கு இப்படி பட்ட பொண்ணு மாதிரி மனைவியா கிடைக்கனும்னு தோணுச்சு..

அதுவே மாதிரி என்ன மாதிரி... ஏன் நீயாவே இருக்க கூடாதுன்னு கேட்டுட்டேன்... நீ சரினு சொல்லு, அண்ணா அண்ணி பக்கத்துல நமக்கும் ஒரு மேடை போட்டு நம்ம கல்யாணத்த முடிச்சிடலாம்… என்ன சொல்ற? என கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் தன் மனதில் உள்ளதை பட்டென்று உடைத்து விட்டான். (ஆனாலும் ரொம்ப ஸ்பீட் பாஸ் நீங்க)

அதை கேட்ட மற்ற மூவரின் நிலை தான் வார்த்தையில் அடங்காதது. ஆனால், சந்திரனுக்கு அதிர்ச்சியை காட்டிலும் சந்தோஷமே,

ஆம், அவர்கள் வளர்ந்த விதம் அவ்வாறு. தங்களின் தாய் தந்தை சிறு வயதில் இருந்தே இவர்களின் கருத்தையும் சந்தோசத்தையும் கேட்டு கேட்டு அதில் உள்ள நிறை குறைகளை எடுத்து கூறி வளர்த்த விதம் இவனை இப்படி பட்டென்று கூற வைத்தது.

ஆனால், அவனின் எண்ணம், ‘இது இவன் மனதில் ஏற்பட்ட உண்மை காதலா இல்லை.... தடுமாற்றமா? ஏனென்றால் திவ்யாவை இவன் சந்தித்து முழுதாக ஒரு மணி நேரம் கூட நெருங்காத நிலையில் இவன் இப்படி பேசுவது தான் அவனுக்கு எதோ தடுக்க...'

அதற்கு மறுப்பு கொடுக்கும் வண்ணம்,

நிச்சயத்தின் போது சந்தியாவை சில நிமிடங்களுக்கும் குறைவான நிமிடத்தில் பார்த்த தனக்கே… தன் மனதிற்கே இவள் என் மனைவி என்ற எண்ணம் வருகையில் தன் தம்பியின் இடத்தில் இதுவும் சாத்தியமே....'

என்றவோர் எண்ணம் இவன் மற்ற எண்ணத்தை அடியோடு அகற்றியது....

'ஆக தன் தமையனின் இந்த முடிவுக்கு தானும் ஏன்? தன் குடும்பமே முழு சம்மதம் தெரிவிப்போம்' என்று அவன் எண்ணம் தறிகெட்டு ஓடியது.

திவ்யாவின் எண்ணமோ,

' என்ன இவன் இப்படி அக்கா அத்தான் முன்னாடி புரப்போஸ் பண்றான்' என்று வெட்கம் பிடுங்கி தின்றது. ( நல்ல பாத்து கோங்க ப்ரெண்ட்ஸ் நம்ம திவ்யா வெட்க படுறாளாம்)

தன் கொழுந்தனின் வார்த்தையில் வாயை பிளந்து நின்ற சந்தியா,

'அய்யோ, இதுக்கு இவ கடுப்பாகி. கண்ட வார்த்தைலலாம் திட்டிற கூடாதே' என்று பதறி போய் திவ்யாவை காண,

அவளின் அந்த கூடுதல் வெட்கம் இவளுக்கு மயக்கத்தையே கொடுத்தது எனலாம்.

மூவரின் இந்த மோன நிலையை சரோவின் குரல் தான் நடப்பிற்கு கொண்டு வந்தது...

“ என்ன எல்லாரும் அமைதியாய்டீங்க?

திவ்யா நா கேட்டதுக்கு பதில் சொல்லு…” என மேலும் கூற அந்த இடத்தை விட்டு ஓடி விட்டாள் அவள்.

“ஹேய் திவ்யா…” என்ற சந்தியாவின் குரல் அவளின் செய்கையை இவனுக்கு உணர்த்த,

“என்ன அண்ணி? உங்க தங்கை பறந்துட்டாளா பதில் சொல்லாம?” என்று வினவ,

“ஆமாம், சரவணன் ஆனா?” என்று அவள் இழுக்கவே,

சந்திரன் இடை புகுந்து...

“சந்தியா, அதெல்லம் அப்புறம் பேசிக்கலாம்.. டேய் நீ இடத்த காலி பண்ணு… நா கட்டிக்க போறவள்ட்ட என்னை தவிர எல்லாரும் பேசுறீங்க” என்று அங்கலாய்க்க..

சந்தியா பதிலாக புன்னகையை சிந்தினாள்.

நாகரிகம் கருதி சரோவும் நகர, அதன் பின் தன் சந்தேகத்தை அவனிடம் கூறி விட்டு தனக்கு கிடைத்த தகவலையும் கூறினாள்.

அதன் பின்னரே இருவரும் “நாம் நினைப்பது நடந்தால் மிகவும் நன்றாகவே இருக்கும் " என்று ஒருமித்தமாக முடிவெடுத்தனர்.

சிறிது நேரம் அவர்கள் இருவரும் தங்களின் கற்பனையில் மிதந்தனர்.

திருமண நாள்:

ஒரு பக்கம் பெரியவர்களின் சடங்கு வேலைகள் , இள வயது கன்னிகளின் அலங்காரங்கள், அதை ஓர கண்ணால் ரசிக்கும் இளமை பட்டாளங்கள், சின்னஞ்சிறு மொட்டுகளின் துள்ளல்கள், அதுவரை அந்த ஊரில் புது மண தம்பதி என்று பெயர் எடுத்தவர்களின் கண் ஜாடை மொழிகள், இப்படி எல்லாமும், சேர்ந்து அந்த திருமண மண்டபத்தையே பிரம்மாண்டமாய் காட்டியது.

மணமகனின் அருகில் மணப்பெண் அமர, அவளின் சங்கு கழுத்தில் நாண் பூட்ட அவளின் செம்மையான முகத்தை காண துடித்தான், சரவணன்.

அவனின், முகம் காண வெட்க பட்டு நிலம் நோக்கி குனிகிறாள் திவ்ய மங்கை..

அக்னி குண்டத்தில் இருந்து சூடு கையில் பட்டதோ என்னவோ? சூடு தாங்காமல் இருக்கையை விட்டு துள்ளி எழுந்து விட்டான்,

“ டேய், என்னடா உக்காந்துட்டே தூங்குற?” என்று அருகில் காபியோடு நின்று கொண்டிருந்தான் எழில்.

“ ஹிஹிஹி” என்று அசடு வழிய நின்றான் சரோ.

ஆனாலும் அவன் பார்வை திவ்யாவை தேடியது.

கொஞ்ச நாட்களாக அவள் இவனுக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி கொண்டிருந்தாள்.

சரியாக கூற வேண்டுமானால் இவன் தன் காதலை கூறியதிலிருந்து...

ஆனால் அவளால் அதிக விளையாட்டு காட்ட முடியாதவாறு அவன் பார்வையில் சிக்கினாள்.

வெள்ளையும் பிஸ்தா க்ரீமும் கலந்த காக்ரோ சோளியில் .

அவன் தன்னை மறந்து அவளை சைட் அடிக்க…

‘ போச்சுடா… இவன் மறுபடியும் கனவுலகத்துல சஞ்சரிக்க ஆரம்பிச்சுட்டான்... இது வேலைக்காகாது...” என்று எண்ணி கொண்டிருக்கும் போது இவன் பின்னிருந்து,

“ம்க்ம்...” என்று தொண்டையை செருமும் சத்தத்தில் திரும்ப அங்கோ அவன் கோமதி.

“மாமா...”

“ஹேய் மதி...”

“மாமா இந்த டிரெஸ் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்கு”

அவளின் அந்த நாணம் கூடிய சொல்லில் அவன் மேலே பறந்தான்.

இப்படி இருவரும் ஒருவரை ஒருவர் காதல் பார்வை பார்க்க இதை பார்த்த திவ்யாவோ, குறும்பு பார்வையுடன் அவர்கள் அருகே நெருங்கினாள்.

ஆனால், இவள் தன்னை நோக்கி வருவதாய் முதலில் எண்ணிய சரோவோ அவள் கண்கள் கூறிய செய்தியில், ‘ என்னமோ நடக்க போகுது ' என்று இரண்டு ஸ்டெப் பின் வாங்கினான்.

“டேய் எலி.... உன்ன எங்கலாம் தேடுறது...?” என்ற அவளின் கேள்வியில் உலகம் மீண்டனர் இருவரும்.

“என்னையா? ஏன் தேடுன?” அவன் அப்பாவியாய் வினவினான். தனக்கு வரப்போகும் ஆபத்து அறியாமல்,

“அதோ அந்த வெள்ளை கலர் சுடிதார் போட்ட பொண்ணு பேர் கேட்டியே.... அவ பேர் நி..வே..தி..தா... வாம்” என்று அழுத்தி கூறி அங்கிருந்து நழுவ அவள் பின்னோடு சரோவும் சென்றான்.

சற்று முன் காதல் பார்வை பார்த்த மதியின் முகம் இப்போது அனல் பார்வையை கக்க அங்கிருந்து நகர்ந்தாள்.

அவளின் பின்னோடு “மதிய்ய்ய்ய்” என்று அழைத்தவாறு எழில் சென்றான்.


Post a Comment

0 Comments