04. சட்டென்று மாறிய வானிலை


 

எலி விரைவாக.. அடுக்களைக்குள் சென்றான்.

அங்கே ஒரு கொலை விழப்போவது நிஜம்... ஆனால்,

அது நம்ம திவ்யாவா? இல்லை எலியா

கொலை வெறியோடு தன்னை நோக்கி வந்த எலியை கொஞ்சமும் கூச்சமில்லாமல் எதிர் கொண்டாள் திவ்யா.

“என்னடா?”

“ம்ம்ம் , மண்ணுடா... ஒரு உயிரோட மதிப்பு தெரியுமா உனக்கு?”

“ ம்ம்ம்ம், அம்பது ரூபா.... இருக்கும் இப்போ எந்த உயிருக்கு என்ன ஆச்சு?”

“ அடிங்க.... இங்க நா என் உயிர கைல பிடிச்சிட்டு வந்துருக்கேன். பேசுற பேச்ச பாரு... கல்யாண வீடுனு பாக்றேன்... இல்லனா இங்க ஒரு கொலையே விழுந்துருக்கும்..”

(அப்போ கொலை விழாதா... ச்ச என்ன ஏமாத்திட்டியே எலி....)

கட்டி இருந்த பாவாடையை மேல் சொருகி சண்டைக்கு தயராகி விட்டாள் திவ்யா.

“வாடா யார யார் கொலை பண்றானு பாத்துடுவோம்” என்று.

“ அட, என்ன இது விஷேச வீட்ல பேசுற பேச்சா இது.... கொலை அது இதுனு... ச்ச... என்ன ஆச்சு?” என்று ரஞ்சிதம் அங்கு வர திவ்யா கப்சிப்.

“ பாருங்க பாட்டி நான் பாட்டுக்கு சித்திக்கு ஹெல்ப் பண்ணிட்டு இருக்கேன். என்கிட்ட சண்டைக்கு வரான் இவன்” என்று இவள் காட்சி அமைப்பையே மாற்ற...

“அய்யையோ , பாட்டி நம்பாதிங்க…” அலறினான் எலி.

“டேய், வயசு பிள்ளைட்ட என்ன வம்பு வேண்டி கிடக்கு உனக்கு? போய் வேலைய பாரு..

இதோ இப்போ வந்துச்சே … அந்த தம்பிய பாரு எவ்ளோ பொறுப்பா கல்யாண காரியம்லா எடுத்து செய்யுது.. அத பார்த்து கத்துக்கடா...”

“ யார் பாட்டி வந்தா?” என்று ஒன்றும் அறியா பிள்ளை போல் அவள் வினவ, ( அடங்கப்பா … இது உலக மகா நடிப்புடா சாமி.... அப்போ கண்ணு மூக்குக்குலாம் மார்க் போட்டதுலாம் மறந்து போச்சு போல)

“அதுவாமா, நம்ம சந்தியா வீட்டிலிருந்து அவ கொழுந்தன் வந்து இருந்தாப்ல... ரொம்ப தங்கமான பையன்.. இந்த வயசுலயும் எவ்ளோ தெளிவா பேசுது தெரியுமா?”

“ஓஹ், அப்டியா” என்று அவள் தாளம் போட நடப்பதை காண சகிக்காமல் எலி,

“பாட்டி, இவள நம்பாதிங்க… நீங்க சொன்ன அந்த தம்பிக்கு பாய்சனே கொடுக்க பாத்துருக்கா இவ..”

“ என்ன, பாயாசமா?” ரஞ்சிதம் வினவ,

“ போச்சுடா!!!! பாயாசம் இல்ல பாட்டி பாய்சன் அதான் விசம்....” 'இவங்கள்ட்ட எப்படி புரிய வைக்கிறது' என்று தெரியாமல் அதற்க்கும் திட்டு வாங்கி கொண்டான்.

“டேய், என்னடா இது கல்யாண வீட்டுல நின்னுகிட்டு விசம் அது இதுன்னு பேசிட்டு இருக்க..”

“அதானே , பாட்டி நா காபி தான் போட்டு கொடுத்து விட்டேன். இவன் தேவை இல்லாம வம்பு பண்றான்.”

“ யாரு நானு, இதோ அவன் குடிக்காத காபி பயபுள்ள ஸ்மெல்ல வச்சே தப்பிச்சுக்கிச்சு... நா தான் அநியாயமா பலியாய்ட்டேன்.... நீங்க வேணும்னா குடிச்சு பாருங்க.” என்று அவரிடம் அந்த கஷாயத்தை நீட்ட அவரோ,

“கூப்ட்டியாமா மேகலா … இதோ வந்துட்டேன்” என்று நழுவி விட்டார்.

அவரின் செய்கையை தன் கண்களால் சுட்டி காட்டினான் எலி.

அவளோ அசால்ட்டாய் தோளை குலுக்கி விட்டு யாருக்கு ஆச்சோ என்று அங்கிருந்து நகர்ந்தாள்.

இவற்றை எல்லாம் பார்த்து கொண்டிருந்த எலியோ தன் தலையை அடித்து கொண்டான். (உன்னால் அது தான் முடியும் எலி)

தேவதையை கண்டேன் ......

காதலில் விழுந்தேன் ...

என் உயிர் உடன் கலந்து விட்டாள்.....

' ச்ச்ச நாம என்ன அவ்வளோ கேவலமாவா பாடுறோம், நம்ம அண்ணா இப்படி காத மூடிட்டானே' என்று எண்ணிய சரவணன்..

“சரி விடுடா, அடுத்த தடவ சுதி சுத்தமா பாடுறேன்” என்று அவன் தோளில் கை வைத்தான்.

“ போடங்க.. நீ சுதி சுத்தமா பாடாதது தான் என் குறை பாரு… போ போய் வேலைய பாரு.. மனுஷனே கடுப்புல இருக்கான்.. இதுல நீ வேற வெறுப்பேத்திட்டு” திவ்யா போனை பிடுங்கி வைத்த கடுப்பை அவனிடம் காட்டினான்.

அவன் தலையை சுற்றி எதையோ சரோ தேட ,

“டேய்…கைய எடுடா.. என்னத்த தேடுற?”

“ ம்ம்ம் ஒன்னும் இல்ல, மனுஷன் கடுப்புல இருக்கானு சொன்னியே அதான் எந்த மனுசன்னு தேடுறேன்”

“ஆமாடா, இப்போ நீ ஜோக் அடிச்சிட்ட அதுக்கு நா சிரிக்கணும்… போடா டேய், இங்க என் பொழப்பே சிரிப்பா சிரிக்குது.”

“டேய், உன்ன எல்லாம் கல்யாண மாப்பிள்ளைனு சொன்னா கல்யாணம் கூட நம்பாது. அப்படி இருக்குற முதல்ல உன் பிரச்சனைய சொல்லு… அப்புறம் பழமொழி சொல்லு,

எப்பவும் என்னைய கிழவன்னு சொல்லிட்டு இப்போ நீ தான் நூத்து கிழவன் மாறி பேசுற”

“என் பிரச்சனையே நீ தான் டா”

“நானா?”

“என்ன ஆனா ஆவன்னானுட்டு… நீ தான் நீயே தான்… உன்ன யார் என் போன பிடுங்கி வச்சிக்க சொன்னது. இப்போ பாரு என்ன ஆச்சுனு?”

வீட்டிற்க்குள் நுழைய போனவனை தடுத்த சந்திரன் ,

“என்னடா? ஏன் இப்படி அம்போனு விட்டுடு போற?”

“ஆமாடா, நீ என் காதலி பாரு உன்ன கர்ப்பமாக்கிட்டு அம்போனு விட்டுட்டு போறேன் . யார்டா இவன்?( இது கூட தெரியலயா பாஸ் உங்க அண்ணா தான்)

நீ பிரச்சனைய சொல்ற மாதிரியே தெரியல … அதான் நா என் வேலைய பாக்க போறேன்.”

“நீ உன் அண்ணி கூட கல்யாணம் வரைக்கும் பேச கூடாதுனு சொல்லிட்டு என் போன பிடுங்கி வச்சிட்டியா”

“ம்ம்ம்”

“நா அம்மா நம்பர்ல இருந்து போன் பண்ணேன்டா .”

“யார் நீயா ?”

“ம்ம்ம், நீ வரதுக்குள்ள அவள்ட்ட எப்படியாச்சும் பேசிடலாம்ன்னு தான்..”

“சரி சரி, மேல சொல்லு...”

அதன் பின் நடந்ததை அவன் சொல்ல….

சரோ வயிற்றை பிடித்து கொண்டு சிரித்து கொண்டிருந்தான்.

வீட்டின் உறவுகள் ''என்னமா அங்க சத்தம்'' என்ற லுக் விட அவனை அடக்க பெரும் பாடுபட்டான் சந்திரன்.

“டேய், கொரங்கே என் மானத்த வாங்காத. அடங்குடா…”

“சரி சரி, சந்து... (பார்டா ரெண்டு பேருக்கும் ஒரே சாட் ஃபார்ம் தான் போல) நீ இப்படி எதாச்சும் ஏடாகூடமா பண்ணுவனு தான் உன் போன நான் பிடுங்கி வச்சதே... இப்ப பாரு நா நினைச்ச மாறியே பண்ணி வச்சிருக்க..”

“என்னடா சொல்லுற?”

“ம்ம்ம்... சொல்றாங்க சுரைக்காய்க்கு உப்பில்லைனு..” (அப்போ கொஞ்சம் போட்டுக்கோங்க பாஸ்)

உனக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபுள் அடிக்கடி வரும்னு எனக்கு தெரியும். ஆனா, போன எடுத்த ஸ்டார்ட்லயே ட்ரபுள் ஆகும்னு தெரியாம போச்சு, எது நடக்க கூடாதுனு நா நினைச்சேனோ அது நடந்தே விட்டுருச்சு..”

“நீ என்ன நினைச்ச?”

பாவம் போல் முகம் வைத்து கேட்கும் தன் தமையனை ஒரு கணம் பார்த்தவன் ,

“நா நினைப்பேன் ஆயிரம்... அதல்லாம் உன்ட்ட சொல்லிட்டு இருக்க முடியுமா, சொல்ல வேண்டியவங்கள்ட்ட தான் சொல்லனும்.”

“தாத்த்த்த்த்த்த்தா.....” என்று பல்லை கடித்தான் சந்திரன்.

“சரி, ரொம்ப கடிக்காத... பல்லு கழண்டுக்க போகுது.”

(ரெண்டு பேருக்கும் ஒரு விஷயத்த ஷார்ட்டா சொல்லவே தெரியாதா..)

“அந்த வீட்டு பெரியவங்க பத்தி நமக்கென்ன தெரியும் சொல்லு சந்து…”

“ அதெல்லாம் இப்போ எதுக்குடா?”

“ம்ஹ்ம், அப்படி இல்லடா…

சில வீட்டுல கல்யாணத்துக்கு முன்னாடி மாப்பிள்ளையும் பொண்ணும் பேசுறத விரும்ப மாட்டாங்க, சோ…

நீ அண்ணிக்கு போன் பண்ணி, அது அந்த வீட்டு பெரியவங்க கைல போச்சுனா அவங்க நம்ம பத்தி என்ன நினைப்பாங்க?

அதுவே நம்ம வீடுனா… நம்ம அப்பாம்மா பத்தி நமக்கு தெரியும். அவங்க அது போல தப்பா எடுக்குறவங்க கிடையாது. அதான் நா அண்ணிட்ட உன் நம்பர கொடுத்து அவங்களயே பேச சொன்னேன். இன்ஃபாக்ட் இந்த ஐடியா கொடுத்ததே நம்ம அம்மாதான்.” ( இது எப்போ எனக்கு தெரியாம)

“என்ன? அம்மாவா?” சந்திரன் வினவ,

“ஆமா, ஆனா நீ என்ன பண்ணி வச்சிருக்க… அந்த வீட்டு பெரியவங்க கைல மாட்டுனா கூட ஈசியா தப்பிச்சுடலாம், நீ அந்த வீட்டு கிழவிட்டல மாட்டிருக்க .. இனி நீ அண்ணிட்ட பேசுனாப்ல தான்.”

வாய் மூடி சிரித்த தன் அண்ணனை புரியாமல் பார்த்தான்.

“அது ஒன்னும் இல்லடா...

அவளும் உன்ன கிழவன்னு சொல்றா… நீயும் அவள கிழவினு சொல்ற....

மொத்ததுல உங்க ரெண்டு பேருக்கும் வேவ் சரியா வேலை செய்யுது.....

உனக்கு அவ தான் கரக்ட்… பதில் கவுண்டர் கொடுக்க.”

அண்ணா கூறியது தன் காதில் தேனமுதை பாய்ச்சினாலும், தன் கெத்தை விட்டு கொடுக்காமல்,

“உனக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சா.. நீ என்னையே கலாய்க்கிறியா....., அவ சொன்ன மாதிரி கல்யாணம் வரைக்குமே பேசாம இரு, அப்போதான் இந்த தம்பி அருமை புரியும் உனக்கு...” என்று வீட்டிற்க்குள் நுழைய போனவனை தடுத்த சந்திரன்,

“அய்யய்யோ, தம்பி சார் மன்னிச்சிக்கோங்க, தெரியாம பேசிட்டேன்.... எப்படியாச்சும் உன் அண்ணி கூட என்னை பேச வச்சிடு இல்ல… இன்னைக்கு நைட் எனக்கு தூக்கம் இல்ல... இந்த அண்ணாவ இப்போதைக்கு உங்க தம்பியா நினைச்சு ஹெல்ப் பண்ணுங்க... ப்ளீஸ்” (என்ன ப்ரோ இப்படி இறங்கிட்டீங்க)

“சரி, சரி ரொம்ப ஃபீல் பண்ணாத, எதாச்சும் யோசிக்கிறேன்” என்று தன் நெற்றியை சிறிது நேரம் தேய்த்தவன் சொடுக்கு விட்டவாறு தன் செல்லை நோண்டினான்.


Post a Comment

0 Comments