03. சட்டென்று மாறிய வானிலை

 


இன்று....

“ ஹேய், டோரா பாக்குறவங்களாம் அங்க போங்க… பீம் பாக்குறவங்களாம் என் கிட்ட வாங்க…

ஒன்.. டூ.. த்ரீ…. டென்….

ஹேய் என் கட்சி தான் மெஜாரிட்டி சோ நீங்கலாம் தோத்தான்கோலி… போங்க போய் வேற விளையாட்டு விளையாடுங்க” என்று அந்த சிறுவர் பட்டாள தலைவன் (கொஞ்சம் வயசுல மூத்தவன் ஏழு வயசு )க்கு கட்டளை இட்டாள் இந்த கூட்டத்தின் தலைவி திவ்யா. ( இவளுக்கு நான் ஜோடி தேடிட்டு இருந்தா.. இவ கார்ட்டூன் பாக்குறா இவளை)

அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவிக்க இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ( நண்பர்களே , செய்திகள் வாசிப்பது என்ற பாணியில் இதை படிக்க தவறாதிர்கள்.)

“ அடியே, பத்திரிக்கை கொண்டு மாப்பிள்ளை தம்பி வர நேரத்துல என்ன இந்த பசங்களோட சண்டை போட்டுட்டு இருக்க…

உன்னை காலேஜ் படிக்குற பொண்ணுனு சொன்னா காலேஜ் கூட நம்பாது.

(எங்களாலயும் நம்ப முடியல அம்மா… ஆமா ஃப்ரண்ட்ஸ் இவளுக்கு இப்போது தான் 12th ரிசல்ட் வந்து போன வாரம் தான் என்ஜினீயரிங் கல்லூரியில் அட்மிஷன் போட்டு வந்தாள்… கதையோட ஆரம்பத்துல இவ வெளிய போய்ட்டு வர மாதிரி சொல்லி இருப்பேனே … அது அங்க தான் போனா…. சாரி அதை சொல்ல மறந்துட்டேன்)

“ போ... போய் அக்கா ரெடியா இருக்காளான்னு பாரு” மேகலா அவளை தலையில் கொட்டி சொல்ல… வலித்த தலையை தேய்த்து கொண்டே,

“ ம்மா, அவள தான் சோளகொல பொம்மை போல இந்த கொஞ்ச நாளா ரெடி பண்றீங்களே … இத நா வேற தனியா போய் பாக்கணுமா... வேற ஏதாவது நல்ல வேலை சொல்லு செய்றேன். இப்படி உப்புக்கு பெறப்படாத வேலைலாம் சொல்லாதே என் கிட்ட”

“ அப்படியா சரி அப்போ போய், சமையல் கட்டுல உன் சித்தி தனியா கஷ்டப்படுறா அவளுக்கு ஹெல்ப் பண்ணு… போ” அம்மா விரட்டினார்.

“ அக்கா எந்த ரூம்லமா இருக்கா... அத சொல்லாம இப்படி வள வளன்னு பேசிட்டு இருக்க” சட்டென்று பின் வாங்கினாள் நம் வீர மங்கை (ஹா ஹா ஹா திவு செல்லம் உனக்கு உங்க அம்மா தான் சரி)

“ ஹேய், என்ன கல்யாண பொண்ணு ரெடியா?”

“ அட போடி, நீ வேற இவ வீட்ல இருந்து ஆள் வராங்கனு எங்கள படுத்தி எடுக்கறா… நீ தான் இந்த அநியாயத்த தட்டி கேக்கணும்” என்றாள் மண பெண்ணின் தோழி காவ்யா.

“ அப்படியா, உங்க கல்யாணத்துல நீங்க இத விட அலப்பறை பண்ணதா இவ சொல்லிட்டு இருந்தாளே… அது சரி தல வலியும் காய்ச்சலும் தனக்கு வந்தா தான் தெரியும்னு எங்க பாட்டி சொல்றதுல தப்பே இல்ல போல”

“ அதுசரி உன்ன போய் நியாயம் பேச கூப்டேன் பாரு என்ன சொல்லணும்” காவ்யா கடுப்பானாள்.

“தெரிஞ்சா சரி” திவ்யா தோளை குலுக்கினாள்.

அவள் அங்கிருந்து நகர முற்பட சந்தியாவின் செல் சிணுங்கியது.

“ அத கொஞ்சம் எடேன்... இதோட மூணாவது தடவ அடிச்சிட்டு”

சந்தியாவின் சேலை கொசுவத்தை சரி செய்தவாறு காவ்யா கூற,

“ கொஞ்சம்னா எப்படி செல் கவர மட்டும் எடுக்கவா?” (ஐயோ அம்மா முடியல)

“உன் மொக்கைய நிறுத்திட்டு அதுக்கு உயிர் கொடு” சந்தியா காதில் வராத இரத்தத்தை துடைத்த படி கூறினாள்.

“ஹலோ”

“ஹலோ சந்தியாவா?”

“அக்...”

“ நா சந்திரன் பேசறேன்.”

' அட ..ஆடு தானா வந்து மாட்டுது சரி என்னனு கேப்போம் '

“ம்ம்ம்”

“ வந்து.. சாரிங்க உங்கள காண்டக்ட் பண்ண ரொம்ப ட்ரை பண்ணேன்... இப்போ தான் கிடைச்சது. அதோட என் தம்பி வந்து என் போன பிடுங்கி வச்சுகிட்டான். கல்யாணம் முடியுற வரை பேச கூடாதுன்னு கிழவன் எனக்கு ஆர்டர் போட்டு இருக்கான். இப்போகூட கைல கிடச்ச நம்பர்ல இருந்து பேசறேன்.

நைட் பத்து மணிக்கு மேல நீங்க ஃப்ரீயா இருந்தா… நா சொல்ற நம்பர்க்கு மிஸ் கால் கொடுங்க நானே கால் பண்றேன்..

இது தான் அந்த நம்பர் xxxxxxxxxx....”

மூச்சு விடாமல் பேசி கொண்டே போனவன் சிறிது இடைவெளி விட்டு,

“ வந்து என்ன பிடிச்சிருக்கா?” என்று இழுக்க (ச்ச ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப சீக்கிரமே கேட்டிங்க போங்க)

“ ஹா ஹா ஹா.... போன் எடுத்ததும் சந்தியாவான்னு? கேட்டிங்க ,

நா பதில் சொல்றதுகுள்ள நீங்க பாட்டுக்கு பேசிட்டே போறீங்க . நா சந்தியா இல்ல அவ சிஸ் திவ்யா.”

“ ஒஹ் ... சாரி பாப்பா கொஞ்சம் அக்காட்ட போன கொடேன்”

“என்னது பாப்பாவா?” ( பின்ன பீம்க்கும் டோராக்கும் சண்ட போடுறவள பாப்பானு சொல்லாம பீப்பானா சொல்வாங்க)

“ என்னாச்சு ஏன்மா இப்படி கத்துற யாரும் அடிச்சிட்டாங்களா?”

“ ஹலோ நா காலேஜ் போறேன். என்னையா பாப்பான்னு சொல்றிங்க? இருங்க உங்க ஃபியான்சி கூட உங்கள பேசவிடாம பண்றேன்.”

“ அய்யோ, அப்டிலாம் செஞ்சிடாத தாயே… உனக்கு புண்ணியமா போகும். எங்க வீட்டுல பொண்ணோட தங்கச்சி ஸ்கூல் படிக்கறானு சொன்னாங்க அதான் தெரியாம சொல்லிட்டேன் அதோட உன் குரலும் கீச் கீச்னு கிளி மாறி இருந்துச்சா அதான் ... வேணும்னா நாலு அடி கூட அடிச்சிக்கோ” என்று என்னென்னவோ கூறினாலும் அவள் சமாதானம் ஆகவில்லை.

“ அதெல்லாம் முடியாது, நீங்க உங்க கிழட்டு தம்பி சொன்னது போல கல்யாணம் வரைக்கும் பேசாம இருக்கிறது தான் என்னோட தண்டனை... பாய் பாய்…”

“ அடிப்பாவி, போன்ல யாரு அவங்களா? ஏண்டி அவங்க கிட்ட இப்படி பேசுன எதாச்சும் தப்பா எடுத்துக்க போறாங்க”

“அதெல்லாம் முடியாது.. எப்படி அவங்க என்ன பாப்பானு சொல்லலாம்?” என்று மிடுக்கி கொண்டாள்.

“ஆமா, உன்ன போய் பாப்பா னு சொல்லிட்டாங்களே அத தான் என்னால தாங்க முடியல” காவ்யா நக்கலடித்தாள். (எங்களாலயும் தான்)

“சரி, என்ன சொன்னாங்க? அத மட்டும் சொல்லாம… மத்தத சொல்றியே செல்லம்… ம்ம்ம், சொல்லு அவங்க என்ன சொன்னாங்க?”

வேறு வழியின்றி தங்கையின் காலில் விழுந்தாள்.

“ஓஹ் அதுவா, அவங்க சைடுல கல்யாணத்த எடுத்து செய்ய ஆள் காணாதாம் அதான் சம்பிரதாய பத்திரிக்கைய கொண்டு அவங்களே வராங்களாம்..”

இதற்குள், தோழிகளின் உதவியோடு சேலையை கட்டியவள் மற்றவர் வெளியேற காவ்யாவுடன் அங்கிருந்த இருக்கையில் அமர அவளோடு அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் திவ்யா

'நங்.........'

“ ஸ்ஸ்ஸ் ஆஆஆ….

டேய் எலி ஏன்டா என்ன கொட்டுன?”

இதற்கு மறுபடியும் ஒரு கொட்டு வாங்கி கொண்டாள்.

“ எத்தனை தடவ சொல்லிருக்கேன் என்னை எலின்னு கூப்டாதனு…”

“டேய், அதுக்கா கொட்டுன!! அப்போ முதல் கொட்டு எதுக்குடா?”

“ அதுவா, பத்திரிக்கைய கொண்டு மாப்பிளை தான் வரதா யார் சொன்னா உனக்கு?”

“ஏன்டா? அம்மா தான் மாப்பிள்ளை தம்பி வராங்கனு சொல்லுச்சே”

“அடியே, நீ எல்லாம் எக்ஸாம்ல என்ன தான் எழுதி கிழிச்சியோ?”

“கவலை படாத நீ எடுத்தத விட கூடவே தான் எடுத்து இருக்கேன்.”

“ம்க்கும்.. இந்த வீராப்புக்கு ஒன்னும் குறை இல்லை.”

“வேற எது குறை?”

“மூளைல குறை..”

“ம்ம்ம், அப்படியா… அப்போ நீயே குறை இல்லாம சொல்லிடு”

“மாப்பிள்ளை தம்பி வரல.. மாப்பிள்ளையோட தம்பி வராப்ல.”

“ஓ, அது எனக்கு தெரியும்டா எலி..” என்று வெளியே கூறியவாறே மனதிற்குள் 'எப்படியோ சந்திரனிடம் பேசுனதை மறந்துட்டாங்க' கூறி கொண்டாள்.

“ ம்ம் அப்புறம்”

“ சும்மா உன் மூளைய டெஸ்ட் பண்ணேன். பரவா இல்லை நீ பாஸ் ஆய்ட்ட”

“ நீ மொதல்ல என்ட்ரன்ஸ்ல பாஸ் ஆகுடி… அப்புறம் எனக்கு நீ டெஸ்ட் வைக்கலாம்.

“ அதோட மூளை இல்லாத நீ என் மூளைய டெஸ்ட் பண்றியா?

இது எப்டி தெரியுமா இருக்கு…

புளி, எலுமிச்ச பழத்த பாத்து… “நீ ரொம்ப புளிக்கறனு சொல்லுச்சாம்” அந்த கதையா இருக்கு”

கன்னத்தில் கையூன்றி வேடிக்கை பார்த்த காவ்யா, சந்தியா இருவரையும் ஒரு பார்வை பார்த்தவள் அவனிடம் திரும்பி,

“டேய், நீ ரொம்ப பேசுற அடக்கி வாசிக்கல... உன் அரளிக்காய் மேட்டர அவுத்து விட்ருவேன்.” விரல் நீட்டி மிரட்டினாள்.

மேலும் சுவாரஸ்யம் கூட,

“ அது என்ன... எப்ப பார்த்தாலும் அவன அரளிக்காய் னு சொல்லி ஆஃப் பண்ற. அது என்ன சொல்லு கேப்போம்?”

“ ஹேய் சந்து, அவ எதோ சொல்றான்னு… நீயும் கூட எதோ கதை சொல்லுற மாறி கேட்டுட்டு இருக்க அது எதுனா பீலா விடும் அத விடு…”

“அது எப்டி விடலாம்? நீ என்னை மூளை இல்லாதவன்னு சொன்னீல... அதுக்கு இது தான் பணிஷ்மன்ட். அந்த கதைய சொல்லியே தீருவேன்.”

இருக்கையில் நன்றாக காலை மடக்கி அமர்ந்து கொண்டாள்.

“அது ஒரு கனா காலம் சந்து

நீயும் நானும் அந்த ஸ்கூல்ல சேர்ந்தப்ப நடந்தது.

இவன் 8th படிச்சிட்டு இருந்தப்போ… இவன் கிளாஸ்ல ஒரு நியூ ஸ்டூடண்ட் சேர்ந்தா..

கொஞ்ச நாளாவே அவளுக்கு இந்த சார் மேல கண்ணு. இவர் போற இடம்லாம் வாறதும் போறதுமா... ஒரு மினி லவ் ஸ்டோரியே ஓடிருக்கு .

ஒரு கட்டத்துல அந்த அம்மா அவளோட ப்ரண்ட் கிட்ட,

“அவன் எனக்கு கிடைக்கலனா இந்த அரளிக்காய அரச்சி குடிச்சி செத்துருவேன்”னு சொல்லி இருக்கா.”

“அரளிக்காயா? அது ஸ்கூல்ல எங்க இருக்கு... எனக்கு தெரியாம?” சந்தியா கேட்க,

“ அதானே நாங்க படிக்குற வரைக்கும் பார்க்கவே இல்லையே” காவ்யா எடுத்து கொடுத்தாள்.

“அதுவா.. குட்டியா கோலிகுண்டு சைஸ்ல ஒரு காய் இருக்குமே… அத தான் மகா ராணி அரளிக்காய்னு சொல்லிருக்கா..”

“ஓஹ்.... அப்புறம்..?”

“அவள் தோழி நேரா, இவன் அத்தை மக ரத்தினம் கோமதி கிட்ட பத்த வச்சு விஷயம் கிளாஸ் மிஸ்க்கு தெரிஞ்சி...”

“ம்ம்ம்ம் தெரிஞ்சு அப்புறம் என்னாச்சு”

“வேற என்ன? எல்லா கதைலயும் வர மாறி ஒரு காதல் ஜோடி புறாவ பிரிச்சிடாங்க...” என்று தன் கண்ணில் சிந்திய போலி நீரை விரலால் சுண்டி தெறித்தாள்.

“அது சரி, இதுல இவன் பயப்படற அளவுக்கு என்ன இருக்கு?” என்று காவ்யா கேட்க,

“அது வேற ஒன்னும் இல்ல... இந்த மூஞ்சியையும் ஒரு பொண்ணு பார்த்து அத கரக்ட் பண்றதுக்குள்ள இப்டி கட் பண்ணி விட்டுட்டாங்களேன்னு.. என் கிட்ட சொல்லி ஒரே அழுகை அதான்.”

“ ஓ, இது அந்த கோமதிக்கு தெரியுமா? கட்டுனா இவன தான் கட்டுவேன்னு ஊர்ல சொல்லிட்டு இருக்காளே அதான் கேட்டேன்” காவ்யா அவனை சந்தேகத்துடன் பார்த்து கேட்க,

“அவளுக்கு தெரிய கூடாதுன்னு தான் இவ கால் விழாத குறையா கெஞ்சுறேன்” அவசரமாக கூறினான் எலி சாரி எழிலரசன்.

“அப்போ இவ சொன்னதுலாம் உண்மையா நா கூட இவ எதோ கப்சா விடுறானு நினச்சேன்” சந்தியா அதிர்ந்து கேட்டாள்.

“ அட சந்து, இவள பத்தி தெரியாதா? பாதி நிஜம்.. பாதி புருடா.. அந்த பொண்ணு என்ன பார்த்து அதுக்கு என் மேல சின்ன அட்ராக்ட் வந்ததுலாம் உண்மை. ஆனா விஷயம் கிளாஸ் மிஸ் வர போய் அவ வீட்ல பாதியிலேயே படிப்ப நிப்பாட்டிட்டாங்க… அத தான் இவ கிட்ட சொல்லி பீல் பண்ணேன்.

இவ ப்ளேட்டையே மாத்தி போட்டு என் வாழ்க்கைக்கு உலை வைக்க பாக்குறா... அதான் அந்த மேட்டர ஆரம்பிச்சாலே அவ கால்ல விழுந்துடுவேன்.

எங்க மாமாக்கு தெரிஞ்சா அப்புறம் கோமதி எனக்கில்லை..” என்று அவன் வெகு வருத்தமாகவே கூற அங்கு எழுந்த சிரிப்பலை ஓய வெகு நேரம் ஆனது.

“ அட என்ன இங்க நடக்குது? அடி திவ்யா, வெட்டியா உக்கார்ந்து கதை பேசாம போய் எதாவது வேலைய பாருடி.. போ...

டேய் எழில், அங்க உங்க பெரியப்பா கூப்ட்டாங்க போய் என்னனு கேளு?

இந்தாமா, இந்த பூவ இன்னும் கொஞ்சம் கூட வச்சிக்கோ…”

இப்படி ஆளுக்கொரு வேலையை ஏவி விட்டது வேறு யாராயிருக்கும் மேகலா தான்.

“ ச்ச… கல்யாண பொண்ணா கூட இருந்துடலாம். கல்யாண பொண்ணுக்கு தங்கையா மட்டும் இருந்துடவே கூடாது. எவ்ளோ வேலை ஏவுறாங்கப்பா” வாய்க்குள் முணுமுணுத்து கொண்டே சமையலறைக்கு சென்றாள். ( அப்படி மேடம் எவ்ளோ வேலை பாத்துட்டாங்கன்னு நாம கேட்க கூடாது சரியா?)

“ஹாய் சித்தி, எனி ஹெல்ப்?” என்றபடி அங்கு வந்தாள் திவ்யா.

அவளருகே வந்த எழிலின் அம்மா அவளின் தலையை மேலும் கீழும் , முன்னும் பின்னும், இடமும் வலமும் திருப்பி பார்தார்.

“ என்ன சித்தி என்ன பாக்குற?”

“திவு செல்லம் எதாவது கனவு கண்டியா?”

“இல்ல… ஏன் கேக்குற?”

“ பின்ன எதாச்சும் அடி பட்ருச்சா?”

“ப்ச்... இல்ல சித்தி ஏன் இப்படி கேக்குற அத சொல்லு?”

“அப்புறம் ஏன்மா திடீர்னு இப்படிலாம் பேசுற?”

“எப்படி?” என்று யோசித்தவள்,

“ சித்திய்ய்ய்ய்ய்...” என்று பல்லை கடித்தாள்.

' ச்ச, நாமே திருந்தணும்னு நினச்சாலும்… உலகம் நம்ம திருந்த விடாதே ' என்று தனக்குள் கூறி கொண்டாள்.

(மக்களே, உலக மகா அதிசயம் திவ்யா திருந்த போறாளாம் )

“ சரி சரி, உனக்கே அத்தி பூத்தாற் போல நல்ல குணம் வந்துருக்கு… அத ஏன் கெடுக்கணும்?

இந்தா… வந்திருக்க தம்பிக்கு காபி போட்டு வை... இதோ வரேன்” என்று அவர் நகர இவளுக்குள் பூகம்பமே வெடித்தது .

' இந்த சித்திக்கு நாம என்ன கெடுதல் செஞ்சோம்? இல்ல வந்திருக்கவர் தான் என்ன கேடு செஞ்சார்? இப்டி நம்ம கையால காபி போட்டு தர சொல்லுதே...' என்று யோசித்தவள்,

அடுக்களையில் இருந்து சற்று தலையை வெளிய தள்ளி அந்த நபருக்கு தன் இரங்கலை கண்களால் தெரிவிக்க முயன்றாள்.

சட்டென்று அவளின் மூளைக்குள் பல்ப் ...

“ டட்டடைங்...”

‘ அட இந்த கண்ணு என்ன? மின்மினி பூச்சி மாறி இங்கயும் அங்கயும் துள்ளுது. அப்புறம் இந்த மூக்கு அது கூட பரவா இல்ல கொஞ்சம் நல்ல இருக்கு. அப்புறம் அது என்ன வாயா? அது இதுவரைக்கும் இந்த தண்ணி தம்லாம் பாத்ததே இல்ல போல... அப்புறம் அந்த மீசை அது கூட பாக்ற மாறி தான் இருக்கு… மொத்ததுல ஒரு 99 மார்க் கொடுக்கலாம். அவ்ளோதான் கூடலாம் கொடுக்கமுடியாது (எப்படி நம்ம ஹீரோ இன்ட்ரோ )

திவ்யா தன் நிலை மறந்து அவனுக்கு மார்க் போட்டு கொண்டு இருக்க...

நம்ம ஹீரோவோ ,

' ச்ச... என்ன இது யாரும் பேச்சு துணைக்கு கூட வர மாட்டேங்றாங்க?

எதோ இந்த வீட்ட விலைக்கு வாங்க வந்த மாறி எவ்ளோ நேரம் தான் சுவத்தையும் ஜன்னலையும் மாறி மாறி பாக்குறதாம்’ என்று எண்ணி கொண்டிருக்கும் போதே...

என்ன தோன்றியதோ !!!

அவன் சமையலறை பக்கம் பார்வையை திருப்பினான்.

சட்டென்று இவள் தலை உள் புறம் சென்று கொண்டது.

சுற்றும் முற்றும் தேடியவள் ,

“ டேய் அஅண்ண” என்றாள்.

அங்கு எழிலோ, தன் முன்னும் பின்னும் பார்த்து விட்டு

“யாரடி கூப்டற ?” என்றான் கேள்வியோடு.

“ டேய் எலி, உன்ன தாண்டா..”

“ அது … அப்படி கூப்டா தானே எனக்கு புரிபடும். அத விட்டுட்டு அண்ணான்னு சொன்னா மனுஷனுக்கு என்னனு விளங்குறதாம் ?” என்றவாறு அவள் அருகில் சென்றான்.

ஆனால் உள்ளுக்குள்ளோ,

‘ இவ மரியாத கொடுக்கும் போதே போயிருக்கனும். எல்லாம் ஸ்டண்ட்அப் காமிடி பண்றேன்… நினைச்சு, என் இமேஜ நானே டாமேஜ் பண்ணிக்கிறேன்” என்று கூறியது அவளுக்கு கேட்கவில்லை (ஆனா எனக்கு கேட்டுருச்சே )

“எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுடா”

“என்ன ஹெல்ப்? ஓ அந்த கண்ணன்ட்ட கடலை மிட்டாய் கேட்டியே அத வாங்கி கொண்டு வந்து தரவா?”

அவள் இல்லை என்று எதோ கூற வரும் முன்னரே அவன்,

“ அப்போ... ஓ ஐஸ் பார் விளையாடுறியா?. யார்ட்டயும் சொல்ல கூடாதா ? சரி சரி, நீ அந்த ட்ரம் பின்னாடி ஒளிஞ்சிக்கோ யாருக்கும் தெரியாது .

என்ன நீ இருக்குற சைஸ் க்கு இங்க நின்னாலே யாருக்கும் தெரியாது சோ டோன்ட் வொர்ரி .

அப்புறம் யாரும் உன்ன சமையல் கட்டுல தேடவே மாட்டாங்க .

ஏன்னா இந்த உலகத்துலேயே நீ போகாத... போக விரும்பாத ஒரே இடம் இது தான்னு எல்லாருக்கும் தெரியும் . யு கேரி ஆன்”

' ஹப்பா நான் ஸ்டாப் டேமேஜ்… ஐ அம் வெரி ஹாப்பி '

“ டேய் கொரங்கே என்னை பேச விடு” ( திவ்யா வாயையே அடைத்த பெருமை உன்னையே சேரும் எழில்.)

“ அதோ பாரு..” என்று அவள் ஹாலில் இருந்த அவனை நோக்கி கை காட்ட அவளின் கை வழி சரவணனை அடைந்தது எழிலின் பார்வை .

“ ம்ம்ம் ... அவர் தான் நீ சொன்ன மாப்பிள்ளை தம்பி .. அதுக்கு என்ன இப்போ ?”

“அவர பாரேன் .. எதோ இந்த வீட்ட விலைக்கு வாங்க வந்த மாறி விட்டதையும் தரையையும் மாறிமாறி பாக்குறத” ( பார்டா ரெண்டு பேருக்கும் வேவ் லென்த் கரக்ட்டா பொருந்துதே)

“ போடா... அவர் கூட கொஞ்சம் பேசிட்டு இரு” என்று கூற அவனோ

“ இல்லப்பா எனக்கு நிறைய வேல இருக்கு… நா ரொம்ப பிஸி” என்று கூற அவனின் தலையில் கரண்டியால் ஒரு இடி கொடுத்தாள்.

“ உன் வேலைய பத்தி எனக்கு தெரியாதா?

எட்டணாக்கு வாங்கிய இந்த கண்ணாடிய போட்டுக்கிட்டு… அம்பது காசு மொபைல காதுல வச்சு … எதிர் வீடு பொண்ணு கிட்ட சீன போட போற அதானே... ஒழுங்கா போய் சொன்னத செய்.. இல்ல இதையும் கோமதி கிட்ட போட்டு கொடுக்க வேண்டி இருக்கும் சொல்லிட்டேன்.

மறந்துடாதே... அவ என் கூட தான் காலேஜ்க்கு வருவா இனிமே.. சோ சொன்னதை செய்”

அவளின் இந்த மிரட்டலில் மீண்டும் அவளிடம் சரணடைந்து அவளின் சொல்லுக்கு கீழ் படிந்தான்.

“ ஹாய் நான் எழில் , பொண்ணுக்கு தம்பி முறை வேணும்.”

“ ஓ ஹாய் நான் சரவணன். முறைலாம் இல்ல நா பையனுக்கு தம்பியே தான்.”

பேச்சு துணைக்கு ஆள் கிடைத்து விட்ட சந்தோசத்தில் அவன் மனம் துள்ளி குதித்து கூற...

‘ பார்டா… புது இடம், புது மக்கள்னு கூச்சம் நாச்சம்லாம் இல்லாம பய புள்ள தெளிவா பேசுது. எதோ சொல்வாங்களே… புலியூர்க்கு பயந்து எலியூர்க்கு வந்தா எலியூரும் புலியூராச்சாம் ...

அவளுக்கு பயந்து இங்க வந்தா… இங்க உயிரே போய்டும் போல … டேய், எழில் உன் பாடு ஏண்டா இப்டி போய்டுச்சு ?' மிரண்டான்.

அவனின் மிரண்ட விழிகளை கண்டவன் தன் இயல்பான சிநேக புன்னகையை சிந்த அதன் பின்பு தான் இவன் சமாதானம் அடைந்ததே. ( நீ ரொம்பவே வீக்கா இருக்க எலி )

அங்கு சமையல் அறையில்,

‘ காபிக்கு மொதல்ல சக்கரைய போடணுமா இல்ல காபித் தூள்ள போடணுமா ??? '

( மொதல்ல அடுப்ப பத்த வச்சி பால் சூடேத்தனும்… ஹாஹாஹா இந்த காபிய குடிக்க போறவன் நிலை இப்போவே நமக்கு தெரியுதுல ப்ரண்ட்ஸ் )

எப்படியோ அவள் ஒரு வழியாக இருவருக்கும் காபி போட்டு வைப்பதற்குள் ஒரு மினி வேர்ல்ட் வாரே நடத்தி விட்டாள் . (இருவருக்கா… அப்டினா எலிக்கும் எலி பாய்சன் ரெடியா ..)

தன் முன்னே ட்ரேயை நீட்டிய சந்தியாவினை கண்ட சரவணன் , புன்னகையோடு அதை வாங்கி கொண்டான்.

மற்றொரு கப்பை எழில் முன்பு நீட்ட அவன் அதை எடுக்க எத்தனிக்கும் போதே கைகள் செயல்பட மறுக்க…

விரல் கோர்க்க மறுக்க…

அதை கட்டு படுத்தி அந்த கப்பை வாயின் அருகே கொண்டு சென்றவன் கட்டளையை ,

மறுத்து உதடுகள்… பிரிய மறுத்து விடவே,

மிகவும் சிரமப்பட்டு அதை பிரித்து விட அங்கு நாக்கோ,

பற்கதவு கொண்டு தன்னை மூடிக்கொள்ள அதை தகர்த்தெறிந்து… துடிதுடித்த நாக்கினுல் அந்த காபியை விட தொண்டை வழி செல்லும் முன்னே அடி வயிற்றில் இருந்து ஓர்

அலறல் “அய்யோ என்னை கொல்லாதே” என்று.

அவ்வளவு தான்… அவன் முகம்,

என்றோ தன் தாய் நில வேம்பு கசாயம் குடிக்க சொன்ன போது கூட இவ்வளவு அஷ்டகோணலாய் மாறியது இல்லை.

இன்று அவன் முகம் நவ ரசத்தையும் பிழிந்து தள்ளியது.

சட்டென்று தன் புதிய நண்பனின் முகம் நோக்க அவன் இதற்குள் தன்னை ஓரளவு சமாளித்து விட்டிருந்தான் போல இவனை பார்த்து சிரித்தான் சரவணன்.

இருவரின் பார்வையும் “வொய் ப்ளட் சேம் ப்ளட்” என்று கூறி கொண்டன.

சரோவின் பார்வையை விடுத்து எலியின் பார்வை சமையல் அறை பக்கம் கொலை வெறியோடு திரும்பியது.

அவனின் பார்வையை பின்பற்றி சரோவின் பார்வையும் அங்கு செல்ல ,

' டட்ட டய்ங்...'

‘ என்ன கண்ணு இது கோலி குண்டு கண்ணு.. அதுல ஒரு வெற்றி புன்னகையும் கூட (கண்ணுல புன்னகையா உனக்கு என்னமோ ஆய்டுச்சு ப்ரோ)

அந்த மூக்கு கூட எவ்ளோ க்யூட்டா இருக்கு பாரேன். எதோ பொம்மைக்கு இருக்கிறது போல... (என்னது பொம்மையா , இத அவ கேட்டுருக்கனும் . உன்ன என்ன பண்ணி இருப்பானு எங்களுக்கே தெரியாது )

அப்புறம் இந்த கன்னம் அது கூட பஞ்சு மிட்டாய் போல இருக்குல்ல… (இருக்கா இல்லையா ப்ரோ)

இந்த உதடு இருக்கே... ( ஹெய் , ப்ரோ நான் ரொம்ப சின்ன பிள்ள என்ன கெடுக்காத)

ம்ம்ம் சூப்பர் அவ்வளோதான். மொத்ததுல இவ ஒரு அப்சரஸ்.'

இப்படி இவன் வர்ணித்து கொண்டிருக்க இவன் தோளின் மேல் ஒரு கை விழுந்தது.

“ வணக்கம் தம்பி, வந்து ரொம்ப நேரம் ஆச்சா? இங்க பக்கத்துல போய்ருந்தேன்.” நாகேந்திரன் நின்று கொண்டிருந்தார்.

அவன் சின்கமாய் சிரிக்கவும் அவர் பக்கவாட்டில் திரும்பி,

“ தம்பிக்கு குடிக்க காபி தண்ணி கொண்டுவாமா” எனக்கூறியதும் தான் இவனுக்கு உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பித்து விட்டது.

இதை கண்டும் காணாதது போல் இருந்த சந்தியா, “களுக்” என்று சிரிக்க உடன் சேர்ந்து சிரிக்கவா? இல்லை அழவா? என்று அவனுக்கு தெரியவில்லை .

ஆனால், எலி இருக்கையில் இருந்து எழுந்தே விட்டான் .

“ என்னாச்சு எழில்?” என்று அவர் ஒன்றும் அறியாது வினவ..

“ ஒன்னும் இல்ல பெரியப்பா… அப்பா கூப்ட்ற மாறி இருந்துச்சு அதான்” என்று அவன் இழுக்க

“ என்ன? அவன நான் டவுனுக்கு தானே அனுப்புனேன்... அதுக்குள்ள வந்துட்டானா!” என்று வாயிலை நோக்கியவர்,

“ போடா … யாரும் இல்லை நீ உட்கார்” என்றார் சமர்த்தாக.

அவனோ , ‘ அய்யோ இவர் வேற நேரம் காலம் தெரியாம... அவ ரெண்டாவதா காபி கொண்டு வந்து கொடுத்து... மறுபடியும் அந்த கஷாயத்த யார் குடிக்கறதாம்? அய்யோ நம்மால முடியாதுப்பா.' அவன் மனம் ஓலமிட,

அவனை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாக ,

“ இருக்கட்டும் மாமா, இப்போதான் காபி சாப்டோம்.” என்று சரோ கூற,

எலியின் பார்வை அவனிடம் ' உன் மனச தொட்டு சொல்லு அதுக்கு பேர் காபியா’ என்று கேட்டது.

அவனின் பதில் பார்வை சமையல் அறையை சுட்டி காட்ட அங்கு நம்ம திவ்யா, காளி அவதாரம் எடுத்து நின்றாள் .

‘ இவ எதுக்கு நம்மல கொலவெறி லுக் விடுறா நியாயமா பார்த்தா நாங்க தானே இவள கொல கூட பண்ணனும்.' என்று எண்ணி கொண்டான்.

உண்மையில் திவ்யாவோ , இப்போ தானே ஒரு வழியா… ரெண்டு பேருக்கும் காபி போட்டு கொடுத்து விட்டேன். இப்போ ரெண்டாவதும் போட சொன்னா மனுசனுக்கு கடுப்பாகாது என்று விறைத்து கொண்டாள். ஆனாலும் அதையும் தாண்டி ஹாலில் நடந்த ஒரு சம்பவம் அவளை அதி கோவம் கொள்ள செய்தது.

' என் வீட்டுல எனக்கு தெரியாம சீக்ரட்டா… விடமாட்டேன் ' என்று கருவினாள்.

“அப்படியா, தம்பி சரி.. தம்பிக்கு ஸ்வீட் கொண்டு வாம்மா”

“ பரவா இல்லை மாமா, நேரம் ஆகுது. நிறைய வேலை இருக்கு.. பாட்டிய வர சொல்லுங்க மாமா” என்றான்.

அதற்குள் ரஞ்சிதமே அங்கு வர, அவரிடம் அந்த சம்பிரதாய பத்திரிக்கையை கொடுக்க…. அவரோ,

“இல்ல தம்பி அவங்க ரெண்டு பேரயும் நிக்க வச்சி கொடுக்றது தான் முறை” என்றார்.

அவனோ,

“ இல்ல பாட்டி எங்க வீட்ல வயசுல மூத்தவங்க கிட்ட தான் கொடுக்கனும். நீங்க தான் உங்க பேத்தி கல்யாணம் நல்ல படியா முடிஞ்சி… அடுத்தடுத்து இந்த வீட்ல விசேஷம் வரனும்னு கடவுள்ட்ட வேண்டிகிட்டு … உங்க பிள்ளைட்ட கொடுங்க” என்றான்.

அவனின் அந்த துடுக்கான பேச்சை கேட்ட அனைவருக்குமே அவன் மேல் ஒரு பாசம் ஏற்பட்டது உண்மையே.

(உன் பேச்சுல எதோ உள் குத்து இருக்குற மாறி தோணுது ப்ரோ)

அவன் எல்லாரிடமும் விடை பெற்று கொண்டான்.

Post a Comment

0 Comments