06. நீல இரவில் நின் முகம்

 



நேரம் இரவு 12.30 இருக்க ரகுவின் கார் வேகமாய் பள்ளியின் வளாகத்தில் நுழைந்தது. 

A.H.M நந்தகுமார் அவசரமாக அவனிடம் ஓடி வந்தார். 

“சார்..” 


“செல்வம் அங்கிள் எங்க?” அவன் கேட்க 


“சார், விஜயன் சார்க்கு திடீர்ன்னு நெஞ்சு வலி வந்துடுச்சு.. அதான் செல்வம் சார் அவரை ஹாஸ்பிடல் கூட்டு போயிருக்காங்க…” 


“என்ன??” அவன் அதிர்ச்சி அடைந்த வண்ணம் செல்வத்தை தொடர்புற 


“ரகு, நீ விஜிய நினச்சு கவலை படாம அங்க பாரு.. இங்க நான் பாத்துக்கிறேன்” என்று சிறிது நேரம் அவனிடம் ஆறுதலாய் பேசிவிட்டு அவர் வைக்கவும் சுகேன் வரவும் சரியாக இருந்தது. 


“வா சுகேன்.. என்ன ஆச்சு?” என்க 

அவன் விழியால் சைகை கூற 


“நந்தகுமார் சார்…” 


“சொல்லுங்க சார்”


“பசங்களோட பேரண்ட்ஸ் மட்டும் ரூம்க்குள்ள அனுப்புங்க… மத்த எல்லாரும் கிளம்பி போக சொல்லுங்க” என்று கூற 

கூட்டத்தில் இருந்த ஒரு தலை எழுந்து வந்தது. 


“அது எப்டி சார்? எங்க வூட்டு பிள்ளைங்கள கண்ணால காணாம எங்குட்டு போக சொல்ற? அதுலா முடியாது… எங்க புள்ள எங்க வீட்டுக்கு வந்தாகனும்.. அதோட எங்க புள்ளிய இட்டுன்னு ஓடுனானே அந்த பொறம்போக்கு அவன புடிச்சி ஜெயில்ல போடாம நாங்க யாரிம் இங்க இருந்து நவுறதா இல்ல.. எங்க பொறந்த நாயி அவன் எங்க புள்ளைய இழுத்துட்டு போற அளவுக்கு தகிரியம் எங்க இருந்து வந்துச்சு..… அவனலா சும்மா உடக்கூடாது…. என்னாங்கடா சொல்றிங்க???” என்று கூட்டத்தை பார்த்து கேட்க கூட்டமும் கோரஸ் பாடியது. 


சுகேனை ஏறிட்டு பார்த்தவாறு அந்த தலையின் கன்னத்தில் 

“பளார்” என்ற அறையை ரகு விட அவன் ஒரு சுற்று சுற்றியபடி கூட்டத்தில் போய் விழுந்தான். 


“யோவ், என்ன மேல கை வைக்குற…. நா யார் தெரியுமா?” அவன் மீண்டும் எகிற 

மறுபடியும் ஓர் அறை அவனை நோக்கி பறந்தது. 


“டேய் பன்னாட இங்க வா… நீயெல்லாம் மழைக்காச்சும் பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கி இருக்கியா… அப்டி இருக்கும் போது…. 

சரி சொல்லு, அந்த பொண்ணு… அதான் உங்க வீட்டு பொண்ணு… அது எத்தனாவது படிக்குது தெரியுமா? என்ன க்ரூப்? என்ன ஸ்டாண்டார்ட்?? சொல்லு… சொல்லுடாங்கிறேன்???” அவன் சட்டையை பிடித்து தூக்கி நிறுத்தி அவன் கேட்க 

திருதிருவென முழித்தான். 


அதெல்லாம் அவனுக்கு தெரிந்தால் தானே!!! 


அந்த பெண், அவர்கள் ஏரியா… அவ்வளவே… 

பிரச்சினை தனிப்பட்ட முறையில் செல்லும் போது அவன் பெயர் பிரபலமாக வாய்ப்பில்லை என்பதாலேயே… 

பெண்ணின் பெற்றோரிடம்,


“மொதல்ல ஸ்கூல்ல போய் போராட்டம் பண்ணுவோம்.. இல்ல பொண்ணை மீட்டு தர மாட்டாங்க… பத்தோட பதினொன்னு சொல்லி கேஸ இழுத்து அடிப்பாங்க… அதுவே ஸ்கூலோட பேர இழுத்து விட்டா… பேர் கெட்டு போகாம இருக்கணும் சொல்லி… அவங்களே எல்லா நடவடிக்கையும் எடுப்பாங்க…” என்று ஏகத்துக்கும் அவர்களை குழப்பி அழைத்து வந்திருந்தான். 

பொதுவாக இந்த மாதிரி விவகாரத்தில் தலையிட்டு தனக்கு பேர் வாங்கி கொள்ள வேண்டும் என்பது தான் இந்த குலவிகளின் கொள்கையே.. 


“என்ன? தெரியலை அப்டி தானே… ஏன்டா நீங்களாம் உண்மையிலே அக்கறை உள்ளவங்களா இருந்தா இந்நேரம் அந்த பெண்ணை கண்டு பிடிச்சு இருப்பீங்க… அதை செய்யாம எங்க போய் நின்னா நமக்கு விளம்பரம்னு வந்துட வேண்டியது… உனக்கு பத்து நிமிஷம் டைம்… அதுக்குள்ள உன்னோட அல்லக்கைகள கூட்டிக்கிட்டு இந்த இடத்தை விட்டு போயிருக்கணும்… இல்ல?” என்று முறைத்தபடி சுகேனை பார்க்க


“சிறப்பா செஞ்சுடலாம் ரகு” என்று அவனும் கை முஷ்டியை முறுக்கினான். 


அவ்வளவு தான் ஏற்கனவே ரகுவிடம் வாங்கிய அடியில் கதி கலங்கி நின்றவன் அடுத்து அவர்களின் மௌன மொழி ‘என்ன சொல்லியது?’ என்று புரிய அந்த விட்டு அக்கணமே ஓடி இருந்தான். 


               ***



 அறைக்குள் தயங்கியபடி வந்த மாணவர்களின் பெற்றோர்கள் ரகு காட்டிய இருக்கையில் அமர்ந்து கொண்டு 


“ஏன் சார் பொண்ணு காணாம போனவுடனே போலீஸ் கம்பளைன்ட் பண்ணனும்னு யாரும் சொல்லலையா?” அவன் கேட்க 


“பக்கத்துல ஒரு ஸ்டேஷன்ல கம்பளைன்ட் பண்ணிட்டோம் சார்.. இருந்தாலும் சீக்கிரம் நடவடிக்கை எடுக்கணும்னா ஸ்கூல்ல போய் நிக்கணும் சொன்னாங்க… அதான்…” அவர்கள் இழுக்க

மற்றொரு பெற்றோர்களை ஏறிட்டான். 


“அவங்க சார்பா ஒரு படையே வந்துச்சு.. உங்க சார்பா ஒரு ஈ எறும்பு கூட காணோம்?” என்று அவன் கேட்க அவர்கள்,


“எங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க யாரும் கிடையாது சார்…” என்று கூற 

அதற்கு மேல் எதுவும் கேட்காமல் சுகேனிடம் திரும்பி 


“சுகேன், பசங்கள பத்தி டீடைல்ஸ் சொல்லு…” என்றான். 


“ரகு, நீ சொன்ன மாதிரி பசங்களோட போட்டோஸ் வச்சு பஸ் ஸ்டாப்ல விசாரிச்சப்போ, 

ஒருத்தர் மட்டும் தான் கவனிச்ச மாதிரி சொன்னாங்க… அவங்க சொன்ன நேரம் வச்சு பாக்கும் போது விருதுநகர் இல்ல மதுரை ரெண்டு பஸ் தான் அப்போதைக்கு கிளம்பி இருக்கு… சோ அந்த டிராவல்ஸ்க்கும் கால் பண்ணி விசாரிச்சதுல நாம சொல்ற பசங்க மதுரை போற பஸ்ல இருக்கிறதா தகவல் வரவும்… மதுரை லோக்கல் போலீஸுக்கு தகவல் கொடுத்தோம்… அவங்க அந்த பசங்கள கூட்டிக்கிட்டு வந்துட்டு இருக்காங்க… இன்னும் கொஞ்ச நேரத்தில வந்துடுவாங்க…” என்று கூறி முடிக்க 


பெற்றவர்கள் முகத்தில் அப்போது தான் ஒரு கவலை நீங்கியது போல இருந்தது. 

நன்றியாக ரகுவை பார்க்க அவன் மெல்ல தலையாட்டி கொண்டான். 


“உங்களுக்கு ஒன்னு புரியல… நீங்க இதை பப்ளிக் மீடியானு கொண்டு போகாம நேரடியா இங்க கொண்டு வந்து இருந்தாலும் இத தான் செஞ்சு இருப்போம். எங்க பள்ளி பேர் கெட கூடாதுன்னு நாங்க இதை செய்யல… ரெண்டு பேரும் சின்ன பசங்க… நேரம் ஆக ஆக விபரீதமா எதுவும் நடக்க கூடாதுன்னு தான்… இதை பெர்சனலா எடுத்து பண்ண சொன்னேன்… மத்தபடி இதுல எங்க உள் நோக்கம் எதுவும் இல்லை…” என்று விளக்கம் கூற அவர்கள் தலை குற்ற உணர்வில் குனிந்தது.


சரியாக அரைமணி நேரத்தில் இரண்டு போலீசார் மாதவியையும் மணியையும் கொண்டு வந்து பள்ளியில் விட 

திருதிருவென முழித்து கொண்டிருந்தவர்கள் பள்ளியில் பெற்றோர்களை கண்டதும் 

அதுவரை இருந்த பயம் விலகி ஓடி போய் தாயை கட்டிக்கொண்டாள் மாதவி.


“அம்மா… ” என்று அழுத படியே..

அவளை கட்டி கொண்டாலும் 


“பாவி மகளே… என்ன காரியம் பண்ண பாத்த… தப்பானவங்க கைல மாட்டி இருந்தா இந்நேரம் உன் நிலமை என்ன ஆகி இருக்கும்? கொஞ்சமாச்சும் யோசிச்சு பாத்தியா? கல்யாண ஏற்பாடு பிடிக்கலனா… பிடிக்கலன்னு சொல்லறத விட்டுட்டு இப்படியா… அய்யோ நினைக்கவே பயமா இருக்கே… அந்த தம்பி மட்டும் சரியான நேரத்துல உங்களை மீட்டலனா என்ன ஆகி இருக்கும்?” என்று அவள் முதுகில் அடிக்க அமைதியாக அழுகையோடு வாங்கி கொண்டாள்.


“மணி, மாதவி இங்க வாங்க…” என்ற ரகுவின் குரலில் அவன் புறம் திரும்பியவர்கள் தயங்கியபடி அவன் அருகே சென்றனர். 


எப்போதாவது தான் அவன் பள்ளிக்கு வருவான். அந்த சமயம் மட்டுமே அவனை பார்த்திருந்தவர்கள் அதுவும் பு

ன்னகை முகமாக தான்… 


ஆனால் இப்போதோ கடும் சிவப்பில் கோவம் தலைக்கேற நின்றிருந்தான்.



Post a Comment

0 Comments