05. நீல இரவில் நின் முகம்

 


சிட்டவுட்டில் போட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்திருந்த வசீயின் சிந்தை வேறு எங்கோ இருக்க 

மேலே பார்த்த வண்ணம் இருக்கும் மகளிடம் வந்தார் சரவணன். 


“என்ன வசீ? ரொம்ப யோசனைல இருக்க..” 


“ஒன்னுமில்லபா… ஸ்கூல்ல நடந்தது பத்தி… 

அதிருக்கட்டும்… இன்னைக்கு என்ன சார் வெளிய உலா போகலையா?” 


மாலை நேர நடை பயிற்சி பற்றி அவள் கேட்க 


‘ஏதோ யோசனை செய்து கொண்டிருந்தவள் எண்ணத்தை மாற்ற முயல்கிறாள்’ என்பது புரிய  

அவளின் தலையை வருடியவாறு 


“இதோ கிளம்பிட்டேன்… போக முன்னாடி உனக்கு வசந்த் கால் பண்ணான்… அதை சொல்ல தான் வந்தேன்… போய் போன் பண்ணி பேசு..”என்று கூற கேட்டு கொண்டிருந்த அவளோ 


“ப்பா… இதை முன்னாடியே சொல்ல என்ன?” என்று மானாய் துள்ளி குதித்து ஓடினாள். 


இப்போது தான் அவருக்கு ஒரு திருப்தி. 


‘எப்படியோ? இனி இவளின் அந்த தீவிர சிந்தனை என்னவென்று தெரியாவிட்டாலும் வசந்த் பார்த்து கொள்வான்..’ என்று எண்ணியபடி நடையை எட்டி போட்டார். 


“டேய் வளந்து கெட்டவனே… ஊருக்கு வரேன்னு 3 நாள் முன்னாடியே மெஸ்ஸேஜ் பண்ணி இருந்த… ஏன் எங்க வீட்டுக்கெல்லாம் வந்தா உன் ஆறடில அரையடி கொறஞ்சு போய்டுமோ?” 


மறுமுனை எடுக்க பட்டதுமே ஏக கடுப்பில் அவள் குமுற


“அடியே குட்டி பிசாசு… கிளம்புற நேரத்துல சீனியர்க்கு ஒரு எமெர்ஜென்சி… அவங்க ஊருக்கு கிளம்ப இங்க இருக்க மைனர் கேஸெல்லாம் என் கிட்ட மாட்டிக்கிட்டு… அதை முடிச்சுட்டு கிளம்ப இன்னும் இரண்டு நாள் ஆகும்… 

அதிருக்கட்டும்… நேத்தே வாட்சப் பண்ணி இருந்தியே… நம்ம ஸ்கூலுக்கு வேலைக்கு போறதா!! இன்றைய அனுபவம் எப்டி?”  


அவளின் பொருமலை ஊதி தள்ளி விட்டு அவன் அவளிடம் விசாரிக்க 


“அதை ஏன்டா கேக்குற? அங்க நடக்கறது எல்லாம் ஒரு வித்தியாசமா இருக்கு…” என்று கூறி பவானி அவளிடம் கூறியவற்றயும் சொல்ல தொடங்கினாள். 


கருத்து புரிதலுக்காக நாமும் கடந்த காலம் சென்று வரலாம். 


ஐந்து வருடங்களுக்கு முன்பு: 


  டெல்லியில் அந்த பிரதான சாலையில் அவனின் ரதம் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது. 


காரின் ஏசியை தவிர்த்து விட்டு கண்ணாடியை பாதி வரை இறக்கி மாலை வேலை குளிரை ரசித்து கொண்டு… 


எப். எமில் இளையராஜாவின் மெல்லிசை மனதை மயக்கி சிறிது கண் மூடி அந்த சுகத்தை சுகிப்பவனாய் நத்தை போல வண்டியை உருட்டி கொண்டிருந்தான் ரகு நந்தன்.

அவன் மனதில் என்ன ஓடி கொண்டிருந்ததோ???

இவனின் இந்த மனவோட்டத்திற்கான காரணம் பின்னால் அறிந்து கொள்வோம்.

இப்போது.. 


நாம் அதிக சந்தோஷத்தில் திலைக்கும் நேரம் தான் கடவுள் சோதனை செய்து பார்ப்பான் போல.. 

அது போல அவனை சோதிக்க வண்ணம் வந்தது அந்த போன் கால். 


“ஹாய் அங்கிள்… எப்டி இருக்கீங்க?” 


“இருக்கேன் ரகு… ரெண்டு நாள் முன்னாடியே வரதா சொன்ன… என்ன ஆச்சு?” என்று செல்வம் கேட்க 


“அது வந்து அங்கிள்…” அவன் குரலில் ஓர் உணர்வு எழுந்து வர அதை அப்போதைக்கு ஒதுக்கியவன்,

“அதிருக்கட்டும்… நீங்க என்ன திடீர்னு கால் பண்ணி இருக்கீங்க?” என்று ஒரு அசட்டு சிரிப்புடன் அவன் பேச்சை மாற்றினான். 


“அது வந்து ரகு… நம்ம ஸ்கூல்ல ஒரு பிரச்சினை…” செல்வம் இழுக்க 

நொடியில் முகத்தில் இருந்த புன்னகை மறைய 

“என்ன ஆச்சு அங்கிள்? என்ன ப்ராப்ளம்? அப்பா எங்க…?” என்று அவன் எதிர்புறம் ஒரு படப்படப்போடு கேட்டான். 

செல்வம் தன் எதிரில் சிலை போல்,

‘என்ன செய்வது?’ என்று தெரியாமல் அமர்ந்திருந்த விஜயனை ஒரு பார்வை பார்த்துவிட்டு 


“விஜி இங்க பக்கத்துல இருக்கான் ரகு” 


“என்ன ப்ராப்ளம் அங்கிள்?”  


ஒரு கணம் தயங்கிய செல்வம் பின், 


“நம்ம XII ஸ்டாண்டார்ட் ல படிக்கிற மாதவி மணின்னு ரெண்டு பசங்க ஓ… காணோம் தம்பி” என்று தயங்கி கூற அவன் கார் சடாரென்று பிரேக் அடித்து நின்றது.

 “அங்கிள் என்ன சொல்றிங்க?” 


“ஆமா ரகு, இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ்னு பொய் சொல்லி இருக்காங்க ரெண்டு பேரும்… அதனால பசங்களோட பேரண்ட்ஸ் ரிலேட்டிவ்ஸ்னு எல்லாரும் ஸ்கூல் முன்னாடி போராட்டம் பண்றாங்கபா…” 


“என்ன முட்டாள் தனம் இது? மொதல்ல போலீஸ்ல கம்பளைன்ட் கொடுத்தாச்சா பசங்கள தேட சொல்லி?” என்று அவன் கேட்க அதற்குள் எதிர்புறம்,


“யோவ் பெரிய மனுஷா, எங்க வீட்டு பசங்கள கண்டு பிடிக்க சொன்னா அங்க போன்ல யாராண்ட இம்மா நேரமா பேசினு இருக்க… ஒருக்க சொன்னது தான்… புள்ளிங்களுக்கு எந்த சேதாரமு இல்லாம எங்களாண்ட கிடைக்கணும்… இல்லைனு வச்சிக்கோ உன் ஸ்கூல் பேரு நாறிப்புடும் சொல்லிட்டேன்..” என்று செல்வத்திடம் 

வந்த கூட்டத்தில் நெடு நேரமாக கத்தி கொண்டிருந்த இரு தலைகளில் ஒரு தலை வந்து கூவ 

இங்கு கேட்டு கொண்டிருந்த ரகுவின் கோவம் கார் ஸ்டியரிங்கை அழுத்தி பிடித்து அடங்க முற்பட்டது. 


“அங்கிள், குறைக்குற நாயெல்லாம் விட்டு தள்ளுங்க.. நான் 12 மணிக்குள்ளே வந்துடுவேன்… அது வரை எப்படியாவது சமாளிக்க பாருங்க...” என்று கூறிவிட்டு மொபைலை கட் செய்துவிட்டு தன் போலீஸ் நண்பனுக்கு அழைப்பை விடுத்தான். 


ரிங் போன சில நிமிடங்களில் மறுமுனை எடுக்கப்பட்டு, 


“ரகு, இப்போ தான் நியூஸ் கிடைச்சுது… ஸ்கூலுக்கு தான் போயிட்டு இருக்கேன்…” என்று கூற 


“சுகேன், நீ இப்போ ஸ்கூலுக்கு போக வேண்டாம்… நான் சொல்றபடி செய்..” 


அவனிடம் சில வேலைகளை செய்ய சொல்லி போனை கட் செய்தவனின் காரும் மனமும் அதிக வேகத்தில் பறந்தது.

சற்று முன் அவனுகிருந்த அந்த சுகந்தம் பறந்து போயிருந்தது. 

இப்போதைக்கு அவன் தன் எண்ணத்தை அந்த நினைவில் இருந்து மீட்டு தந்தையை எண்ணி கொண்டான். 


அவன் மீண்டும் அந்த நினைவை தேடி செல்லும் போது அது அவனுக்கு கிடைக்குமா?? 




Post a Comment

0 Comments