04. நீல இரவில் நின் முகம்

 


XI – A 

வகுப்பறைக்குள் நுழைந்த வசீயை மாணவர்கள் எழுந்து நின்று வரவேற்க சிரித்த முகத்தோடு உள்ளே வந்தவள் அனைவரையும் அமரச் சொன்னாள்.


அமைதியாகவே அமர்ந்திருந்த மாணவர்களிடம் 


“ஹாய் ஸ்டூடண்ட்ஸ், நான்தான் உங்களோட புது கிளாஸ் மிஸ் வசந்த நிலா” என்க அவர்கள் அவளை வெறும் பார்வை பார்த்தனர்.


‘என்னடா இது? நாம சொல்ல வேண்டியதை சரியாத்தான் சொன்னோமா? எல்லோரும் இப்டி பாக்குறாங்க’ என்று தனக்குள் கேட்டுக் கொண்டு,


“இன்னைக்கு முதல் நாள்… அதனால பாடம் நடத்தி உங்கள போரடிக்க விரும்பல… எல்லோரும் உங்க பேரை சொல்லி உங்கள பத்தியும் நாலு வார்த்தை சொல்லி அறிமுகப்படுத்திக்கோங்க தெரிஞ்சிக்கிறேன்” என்று கூறி முதல் வரிசையில் இருந்த மாணவனை கைகாட்ட அவன் எழுந்து, 


“என் பெயர் சரண்” என்றதோடு முடித்து அமர்ந்து கொண்டான்.


 அவனை பின்பற்றி அப்படியே அனைவரும் தங்கள் பெயரை கூறி அமர்ந்து கொள்ள இவளுக்கு ஏதோ வேறுபாடாக பட்டது 


‘என்ன இது? நாங்கலாம் புதுசா ஒரு மிஸ் ஸ்கூல்ல என்டர் ஆனவுடனேயே அவங்க பெயர், ஊர், குலம், கோத்திரம் எல்லாத்தையும் அவங்கள தொல்லை பண்ணாத குறையா கேட்டு தெரிஞ்சிப்போம்… இவங்க என்னடான்னா எதுவுமே கேட்காமல் 

ஏன்? பேருக்கு மேல ஒரு வார்த்தை கூட பேசாம அமைதியா இருக்காங்க!! ஏதோ சரியில்லை…’ என்று தனக்குள் கூறிக் கொண்டாள் 


அமைதியாக கை கட்டி கொண்டு இவள் நிற்க மாணவர்கள் தங்கள் வேலையாக புத்தகத்தில் கண்ணாக இருக்க 


இருந்த நேரங்கள் கடந்து முதல் வகுப்பு முடிந்ததற்கான மணியும் அடித்தது 


எதுவுமே பேச தோன்றாமல் வெளியேறி ஸ்டாப் ரூமை அடைந்தாள்.

அவள் மனம் கேள்வி கேட்டுக்கொண்டு இருந்தது.

‘என்ன நடக்குது இங்கே?’ என்று.



அடுத்து எந்த வகுப்பும் இல்லை என்பதால் அவளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்தவள் நடத்த வேண்டிய பாடத்திற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருந்தாள் 


பொதுவாக ஆசிரியரின் பணியே அது தானே… எத்தனை முறை படித்தாலும் மீண்டும் மீண்டும் படிப்பதனால் அதன் எளிய வழியை முன்னைக்காட்டிலும் பின்னே சுலபமாய் விளக்குவதாலேயே ஒவ்வொருவரும் அன்று கற்கும் மாணவனாக குறிப்பெடுத்துக் கொள்வர்.


அவளும் நீண்ட நேரங்களாக புத்தகத்தில் விழுந்து மிக மிக முக்கிய சில குறிப்புகளை எடுத்து நிமிர இரண்டு வகுப்புகள் கடந்து போயிருந்தது.


‘இனி இந்த ஒரு பிரிவையும் எப்படி தள்ளுவது?’ என்று எண்ணியபடி இருக்க அப்போது உள்ளே வந்தவள் வசீயை கண்டு சினேகமாக சிரித்தாள்.


“ஹாய், நீங்க தான் புதுசா வந்திருக்கிற ஸ்டாஃப்பா?” என்று கேட்க 


‘அப்பாடா கொஞ்ச நேரம் பேச்சு துணைக்கு கிடைத்த ஜீவன்’ என மகிழ்ச்சி பொங்க பார்த்தவள்,


“எஸ், ஐ அம் வசந்த நிலா… நீங்க?” என்று கேட்டாள்.


“நைஸ் நேம், நான் பவானி.. VIII – C கிளாஸ் மிஸ். இரண்டு பேருக்கும் கிட்டதட்ட ஒரே வயசுதான் இருக்கும். நீங்கன்னு அந்நியமா பேசாம நீ வா போனே பேசலாம் நினைக்கிறேன் உனக்கு ஓகேவா?” 


“எனக்கும் டபுள் ஓகே பவானி…” என்று கூறி இருவரும் கைகுலுக்கி கொண்டனர்.

 

“அப்புறம் முதல் நாள் க்ளாஸ் எப்படி போச்சு?” இவள் கேட்க 


“அந்த கொடுமையை ஏன்யா கேட்கிற?” என்று சலித்தவள் நடந்தவைகளை கூற கேட்டு பவானி சிரித்தாள்.



“நீ முதல் நாள்ல்ல அதான் இப்படி வருத்தப்படுற… போக போக பழகிடும்” என்று கூற இவள்,


“என்ன இதுவேதான் தொடருமா இன்னும்? சாவடிச்சிடுவேன்… ஒழுங்கா சொல்லு? இங்க என்ன நடக்குது? ஏதோ வித்தியாசமா இருக்கு!! இல்ல என் கண்ணுக்கு தான் அப்படி தெரியுதா?” என்று கேட்டாள்.


எதிரில் இருந்த பவானியும் சில நொடிகள் அமைதியாக கடத்தி பின் ஒரு பெருமூச்சுடன் கூறினாள்.



“ஏன் வசீ? நீ இந்த ஸ்கூலோட முன்னாள் ஸ்டூடெண்ட் தான… உனக்கு ஒரு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி இங்க நடந்த பிரச்சினை தெரியாதா???”

“தெரியுமே!! அந்த பிரச்சினைக்கு அப்புறம் தான் விஜயன் சார்க்கும் உடம்பு சரியில்லாம போச்சுன்னு கேள்வி பட்டேன்..”

சில நொடிகளில் கூறியிருந்தாள் வசீ பவானி ‘ஆம்’ என்பதாக தலையாட்ட


“ஆனா அதுக்கும் இப்ப ந

டக்குறதுக்கும் என்ன சம்பந்தம்?” என்றாள் புரியாமல். 



Post a Comment

0 Comments