17. நீல இரவில் நின் முகம்

 


வசந்த் வசீ கல்லூரியில் படித்து கொண்டு இருந்த சமயம் அது.

 

டெல்லியில் உள்ள ஒரு சட்ட கல்லூரியில் வசந்த்தும் கலை கல்லூரி ஒன்றில் வசீயும் இரண்டாம் வருடம் படித்து வந்தனர். 


விடுதிக்கு ஆகும் செலவை கணக்கிட்டு இவர்கள் இருவர் கூடவே வசந்த்துடன் படிக்கும் மேலும் இருவர் என மொத்தம் நான்கு பேர் தனியே வீடு எடுத்து தங்கி வந்தனர்.


ஒரு மாணவனோடு நெருங்கி பழகினாலே தவறாக பேசுவது மக்களின் இயல்பு தானே. 

“அவ ஏதோ சில பசங்க கூட வீடு எடுத்து தங்கி இருக்காளாம்..” சிலர் முதுகின் பின் பேசுவது வசீக்கு தெரிந்தாலும் அலட்டிக்கொள்ள மாட்டாள். 

அதையும் மீறி சிலர், 

“நீ ஏன் இப்படி இருக்க வசீ?” என்றால் 

“ஏன் இந்த ட்ரெஸ் எனக்கு நல்ல இல்லையா?” என நக்கலாய் கேட்டாலும் 


“தப்பு செய்றவங்க தான் பயப்படனும் கவலையும் படனும்… நாங்க எந்த தப்பும் செய்யலை… நான் ஏன் வருத்தப்படனும்.. அவன் தான் எனக்கு எல்லாமே.. இத சொல்றதுக்கு எனக்கு எந்த தயக்கமும் இல்ல… எங்க நட்பு புனிதமான ஒன்னு… அது உங்க கண்ணுக்கு தப்பா தெரிஞ்சா சினிமால சொல்ற மாதிரி மாற வேண்டியது நீங்க தான்.. நாங்க இல்ல..” என்பாள். 


இந்த விளக்கமும் அவளிடம் உண்மையான அக்கறை கொண்டு பழகும் சில நல்ல உள்ளங்களுக்கு மட்டுமே கிடைக்கும். 

இவை எல்லாவற்றையும் விட, “நீ என்ன சொன்னாலும் நம்ப போவதில்லை.. நான் சொல்வதே உண்மை” என்ற தோரணையில் சிலர் பேசினால்… 

“சொல்வதானால் சொல்லிவிட்டு செல்.. அதனால் எங்களுக்கு எந்த கவலையும் இல்லை” என்று கடந்து செல்வாள். 

இவளுக்கு மட்டும் அல்ல வசந்திடம் கூட இதுவே… 


நாம் யாரிடமும் நம்மை நல்லவர் என்று நிரூபிக்க பிறப்பெடுக்கவில்லை. 

நம் வாழ்க்கை நம் கையில்.. இந்த நொடி சந்தோசம் மட்டுமே வாழ்வில் நமக்கான ஒன்று. 


கடந்து சென்ற கவலை பற்றியோ கடக்க போகும் காலத்தை பற்றியோ எந்த எண்ணமும் இல்லாமல் நட்பை மட்டுமே சுமந்து கொண்டு வாழ்க்கையை கடத்தி செல்லும் உன்னத பிறவிகள் இவர்கள்.. 


இவர்கள் வாழும் வாழ்க்கை கண்டு பொறாமையை கக்கிட சில ஜந்துக்கள் இந்த உன்னத புனித பந்தத்தை கொச்சை படுத்திட நினைப்பர். 

அந்த பொறாமையின் வெளிப்பாடே… 


“ரெண்டு பேருக்கும் நடுவுல லவ் ஓடுது.. அதான் தனியா வீடெல்லாம் எடுத்து தங்கி இருக்காங்க…” பொறாமைக்கு பூவிட்டு அழகாய் அழைத்தனர். 

காதில் விழுந்தாலும் கருத்தில் கொள்ளாமல் செல்வர் இவர்கள்.


“இப்போ நீ வரியா இல்லையா?” நூறாவது முறையாக கத்தி கொண்டிருந்தாள் வசீ. 


கூலாக அமர்ந்து மொபைல் போனில் கேம் விளையாடி கொண்டிருந்த வசந்த்,

“ஏய் கத்திரிக்கா… என்ன விளையாடுரியா? உன் காலேஜ் லோக்கல் ட்ரிப் போனா நானும் உன் கூட வரணும்னு சொல்றது நல்லவா இருக்கு..?” என்று கேட்டான். 


“அதெல்லாம் எனக்கு தெரியாது.. உனக்கும் செம் லீவ் தான.. இவங்க ரெண்டு பேரும் ஊருக்கு கிளம்புறாங்க.. எப்டியும் நீ நான் இல்லாம போக மாட்ட… இங்க இப்படி சும்மா இருக்குறதுக்கு என் கூட வரலாம் தான? உன்னை என்ன எங்க காலேஜ் பஸ்லயா வர சொன்னேன்.. உன் கார்ல வான்னு தான சொல்றேன்…” என்று அவன் நாடி பிடித்து கெஞ்சிட இவன் சிரித்தான். 


“அதில்ல.. ஏற்கனவே உன் காலேஜ் பசங்க என்னை கண்டாலே ஏதோ நம்பியார் லுக் விடுறாங்க.. அதுலயும் அன்னிக்கு எவன் அவன்.. உன்னை ப்ரபோஸ் பண்ணி பல்ப் வாங்குனானே.. அவன் என்னை தீப்பொறி திருமுகம் மாதிரி பாக்குறான்… நான் வந்தா கண்டிப்பா ஏதாவது பிரச்னை பண்ணுவாங்க வசீ… அதுக்கு தான் சொல்றேன்.. நீ மட்டும் போயிட்டு வா…” என்று கூறினான். 


“அதெல்லாம் எனக்கு தெரியாது நீ என் கூட வரணும் இல்ல நானும் போகல.. நாம ஊருக்கு போவோம்…” என்று கூறி விட்டு அறைக்குள் சென்று கொண்டாள்.


“போயிட்டு வா ட்யூட்… அவளுக்கு தான் நீ இல்லாம போக விருப்பமில்லன்னு தெரியுதுல்ல.. அப்புறம் என்ன?? போங்க யாரை பத்தியும் நினைக்காதீங்க..” என்று உடன் இருப்பவர்கள் கூற சிறிது நேரம் யோசித்தவன், 

“சரி… போறேன்…” என்று கூறவும் தான் அறைக்குள் இருந்து ஓடி வந்து அவனை அணைத்து கொண்டாள். 

“சூப்பர்டா நல்லவனே..” என்று.


மறுநாள் தன் தோழிகளிடம் மட்டும் வசந்த் தன்னோடு வருவதை கூறிட அது அவர்களை விரும்பாத வட்டத்திடமும் போய் சேர்ந்தது. 

காதில் புகையை விட்டு கொள்ளாத குறையாய் குமைந்து போயினர் மற்றவர்கள். 


என்ன ஏச்சும் பேச்சும் எதிர்பார்ப்புமாக கழிந்தாலும் தேடும் சமயம் நேரம் நகர்ந்து போகாது என்பார்கள் அதே போல தான் அவர்களை பல நேரம் எதிர்பார்க்க வைத்து விட்டு அந்த நாளும் வந்தது. 


டெல்லியை சுற்றிய லோக்கல் ட்ரிப்பாகும் அதனால் பெரிதும் எந்த சுமைகளை சுமக்காமல் இரண்டு நாட்களுக்கு தேவையானவற்றை மட்டும் எடுத்து சென்றனர். 


காலை 9 மணி அளவில் ராஜ்புத்தில் அமைந்துள்ள நினைவு சின்னமான இந்தியாவின் வாயிலை அடைந்தார்கள். அனைத்திந்திய போர் நினைவு சின்னம் என இது அழைக்கப்பட்டது காரணம் முதல் உலக போர் நடைபெற்ற போது உயிரிழந்த 82,000 வீரர்கள் நினைவாக கட்டப்பட்டதாகும். 


இந்திய ஐக்கிய ராஜ்ஜியம் உட்பட 13,300 வீரர்களின் பெயர்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் பல தகவல்கள் இதை பற்றி பெற்று கொண்டு அடுத்த அரை மணி நேரத்திற்குமான பயணத்தில் அவர்கள் லோட்டஸ் டெம்பிள் எனப்படும் தாமரை கோயிலை அடைந்தனர். 


அதன் பூ போன்ற வடிவமைப்பே மக்களின் மத்தியில் ஒரு முக்கிய ஈர்ப்பாக அமைந்திருக்கும். 

1986ல் கட்டப்பட்ட இது குறிப்பிட்ட மதம் மற்றும் எந்த வழிபாட்டையும் பொருட்டுப்படுத்தாது அனைவருக்குமே திறந்து காட்சி அளிக்கும். 


இதனாலேயே மக்கள் கூட்டம் இதில் பெருகும். 

நீண்டு விரிந்த பசுமை சாலையில் மக்கள் கூட்டம் எறும்புகளாய் காட்சி தரும். 


கண்ணெட்டும் தூரம் வரை இதன் வசீகரத்தை அனுபவித்தவர்கள் அங்கிருந்து அடுத்த ஐம்பது நிமிடங்கள் கடந்து குதுப்மினார் அடைந்தனர். 


என்ன தான் வசந்த் இவர்களோடு வரவில்லை என்றாலும் தனியே வசீயின் அருகில் வந்து நின்று கொண்டு அவர்கள் எப்போதும் விரும்பும் சுயப்படங்களை எடுத்து கொண்டு இருந்தனர். 


“வசீ, வா இந்த லொகேஷன் நல்ல இருக்கு பாரு..” என்று இருவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொள்ள என ஒவ்வொரு பகுதிகளிலும் கழிய அவை சிலருக்குள் கடுப்பை கிளப்பிட முறைத்தனர். 


வசந்த் அவர்களின் முறைப்பை கண்டாலும் அதை பொருட்படுத்தாமல் வசீயோடு வலம் வந்தான். 


237.8 அடி உயரம் கொண்ட குதுப்மினார் தூபியை அவர்கள் இருவரும் சேர்ந்து நின்றபடி நிழற்படம் எடுத்து கொண்டனர். 

செங்கல்லால் செய்யப்பட்ட உலகின் உயர்ந்த பள்ளிவாயில் தூபி இதுவாகும். 


இதன் கட்டட பணி 1193 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு 1386 ஆம் ஆண்டில் பிரோஸ் ஷா துக்ளக் மேற்பார்வையில் கட்டி முடிக்கப்பட்டது. 


இது இந்திய இஸ்லாமிய கட்டிடக்கலைக்கு மிகவும் பழமையான எடுத்துக்காட்டாக பெயர் பெற்றதாகும். 

அதன் பின் டெல்லி செங்கோட்டையை வலம் வந்தனர். 


செங்கோட்டைக்கு என ஒரு நீண்ட வரலாறு உண்டு. இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் முதன் முதலில் இங்கு தான் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 


சுதந்திரத்தை குறிக்கும் வகையில் ஆகஸ்ட் 15, 1947 இல் இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கொடியேற்றி வைத்தார். இதை பின்பற்றி ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினம் அன்று இங்கு கொடியேற்றபடுவது வழக்கம்.


டெல்லி மாநகரத்திற்கு செங்கோட்டை, ஷாஜஹான் அளித்த பரிசு என கூறுவதும் உண்டு. 

இதை கட்டி முடிக்க 9 ஆண்டுகள் ஆனது. சிவப்பு நிற கற்கள் கொண்டு கட்டப்பட்டதாலேயே செங்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இதன் கட்டிட செலவு மட்டுமே ஒரு கோடி என்றும் சொல்லப்படுகிறது. 


யமுனை நதியின் மேற்கு கரையில் இருக்கும் செங்கோட்டை மேற்கில் இருந்து கிழக்கில் நீண்டு செல்கிறது. 

இதன் மதில் சுவர் மட்டுமே 2.41 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. 

தன் பாதி நாட்களை இங்கேயே செலவிட்டு பின் அவர்கள் அனைவரும் சாந்தினி சவுக் வந்து சேர மாலை நெருங்கி இருந்தது.


இதற்கு நிலவு ஒளி சதுக்கம் என்ற பெயரும் உண்டு. 

செங்கோட்டையின் எதிரே இரு நீண்ட பிரதான சாலையை கொண்டும் நட்ட நடுவே பச்சை புல்வெளிகள் அவற்றை சுற்றிய வேலிகள் என சிறிய முதல் பெரிய கடைகளை கொண்ட பெரிய பிரதான வணிக வளாகம் ஆகும். 


அங்கு தான் ஒரு சிறிய கடையில் கீச்செயினில் தங்கள் பெயர் பொறிக்க பட்ட ஒன்றை வாங்கி கொண்டு இருந்தாள் வசீ.


“வசீ, இங்க பாரேன் இந்த வளையல் உனக்கு நல்ல இருக்கும்” அவளின் கைப்பிடித்து வளையலை அவன் அனுவிக்க கீ செயின் இருந்த கையை அவன் தொட்டதால் உதறினாள். 


ஏற்கனவே சில்வண்டுகளாய் முறைத்து கொண்டு வந்த மற்றவர்கள் வழி நடத்தி வந்த ஆசிரியரிடம் சிண்டு முடித்ததில் விபரம் அறியாத அவர்களும் செல்லும் இடமெல்லாம் கூடவே வரும் வசந்த்தை ஒரு கண் வைத்து இருக்க அவன் பிடித்த கையை வசீ உதறவும் தப்பர்த்தம் கற்பித்து வசந்த்தை நெருங்கினார். 


“தம்பி, என்ன இது பொது இடத்துல பொண்ணு கிட்ட தப்பா நடக்குற? உன்னை நான் அப்போல இருந்து கவனிச்சுட்டு தான் வரேன்..” என்று அவனை கையை பிடித்து கேட்டார். 


திடீரென அவர் இருவருக்கும் இடையே வந்து ஏதோ கூறவும் முதலில் புரியாமல் விழித்த வசீ பின் சுதாரித்து,


“சார், இது என்னோட ஃபிரண்ட்… நீங்க தப்பா நினைச்சுகிட்டீங்க..” என்று கூறினாள். 


அவரோ இருவரையும் ஒரு பார்வை பார்த்து பின், 

“நிஜமா தான் சொல்றியா? இவன் ரொம்ப நேரமா உன் கூட நெருங்கி வரத பார்த்துட்டு தான் இருக்கேன்.. பசங்களும் இவன் தொந்தரவு பண்ற மாதிரி தான் சொன்னாங்க.. நீ என்ன இப்படி சொல்ற?” என்றார். 


“இல்ல சார், நான் சொல்றத கேளுங்க மொதல்ல அவன் கையை விடுங்க.. இவன் என்னோட பெஸ்ட் ஃபிரண்ட்.. இவனை பத்தி யார் உங்க கிட்ட சொல்லி இருப்பாங்க எனக்கு தெரியும்..” என்று தள்ளி நின்று தங்களுக்குள் சிரித்து கொண்ட கூட்டத்தை பார்த்து ஒரு முறைப்போடு அவரிடம் கூற அவரும் அவனை விடுத்து சென்றார்.

 

நடந்து கொண்டிருந்த சலசலப்பை தெரிந்த தெரியாத என அத்தனை முகங்களும் வேடிக்கை பார்க்க வசந்திற்கு என்னவோ போல ஆனது. 

வசீ எவ்வளவு சமாதானம் கூறியும் அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை. 


சில நிமிடங்கள் வரை அதே அமைதியில் இருந்தவன், 

“வசீ, நான் ரூமுக்கு போறேன்.. நீயும் உங்க ரூம்க்கு போயிட்டு மெசேஜ் பண்ணு..” என்று கூற இவளும் வேறு வழியின்றி தலையசைத்தாள். 


அதன் பின் சென்ற எந்த இடங்களும் அவளுக்கு இனிக்கவில்லை. 

விரைவாக நேரம் கடந்ததோ என்னவோ அவர்கள் கல்லூரி ஏற்பாடு செய்து இருந்த அறைக்கு வந்து முதலில் வசந்திற்கு செய்தி அனுப்பி விட்டு தான் அமைதியாக முடிந்தது.


உடன் இருப்பவர்களிடம் கூறிவிட்டு உறங்கியவள் அன்றைய தின அலைப்பில் அசதியில் நெடு நேரம் கண் அயர்ந்தாள். 


இரவு மணி பத்தை நெருங்க கண் விழித்தவளுக்கு அப்போது தான் நினைவு வந்தது. 

நாளை வசந்தின் பிறந்தநாள் என்று. 


எல்லா வருடமும் அவன் பிறந்தநாளில் அவனோடு இருக்க வேண்டும் என்று எண்ணுபவள் அதனால் தான் கட்டாயப்படுத்தி வசந்த்தை தன்னோடு வர சொன்னதே… 


ஆனால், அவனுக்கு பரிசாக எதையும் வாங்காமல் வந்ததை எண்ணி தன்னையே கடிந்து கொண்டாள். 


எப்போதும் அவனுக்கான முதல் பரிசு அவளுடையதாக தான் இருக்கும்.. 

‘இந்த வருடமும் அப்படி தான் இருக்க வேண்டும்..’ என்று எண்ணியவள் அடுத்த நொடி கிளம்பியிருந்தாள். 


டெல்லி ஒன்றும் அவளுக்கு பழக்கமில்லாத இடமில்லை. 

விபரம் தெரியா விட்டாலும் ஓரளவிற்கு கண்டு பிடித்

துவிடுவாள். 

அந்த தைரியத்தில் தான் மணியையும் பொருட்படுத்தாமல் சென்றாள்.


அதிக தைரியம் கூட சில நேரம் ஆபத்தை விளைவிக்குமோ??? 


Post a Comment

0 Comments