மேலும் இரு நாட்கள் அவளை காதலில் தவிக்க விட்டுவிட்டு வந்து சேர்ந்தான் சாஹித்யன்.
வழக்கம் போல் வந்தமர்ந்து கதை பேசி பின் காபியருந்த சென்றவர்களோடு தானும் உடன் சென்றாள்.
‘அங்கு சட்டமாய் கவுதமின் அருகினில் நின்று பேசி கொண்டிருப்பது சாஹித்யனா?’
ஓடி செல்ல துடித்த காலை மிகவும் சிரமப்பட்டு தடுத்து தோழியரோடு சென்றாள்.
“என்ன சார், கொஞ்ச நாளா எங்க க்ளாச கட் பண்ணிட்டு ஓடிட்டீங்க?”
“ம்ம்ம், கொஞ்ச நாளாவது உங்க தொல்லைல இருந்து தப்பிக்கலாம்னு தான் மஹிமா. ஆனா பாரு வேற வழியில்லாம திரும்ப உங்களுக்கே க்ளாஸ் எடுக்கனும்னு என் தலைல எழுதியிருக்கு போல” பாவமாய் கூறியவனை இமை சிமிட்டாது நோக்கினாள் ரிஷிகா.
‘அவனை பிரிந்து நான் தவித்தது போன்று அவனுக்குள் எந்தவொரு தவிப்பும் இல்லையா?’ அவன் விழிகளுக்குள் ஊடுருவினாள். அதில் விடைதான் கிடைக்கவில்லை.
அவளின் கூரிய பார்வையை கண்டு அவன் புருவம் உயர்த்த, அவ்வளவு தான்... மற்ற எல்லாவற்றையும் மறந்து அந்த பார்வையை நெஞ்சில் சேமித்தாள். அவனுக்கு எதுவும் புரியவில்லை...
பார்வையை கவுதமும் மஹிமாவும் பேசிகொண்டிருந்ததன் பக்கம் திருப்பி விட்டான்.
ஆனால், வகுப்பில் பாடம் எடுக்கும் போது அவள் கண்கள் ரசனையோடு தன் மீது படிவதை கண்டவனுக்கு எல்லாமும் விளங்கியது.
‘ இவளுக்கு தன் மேல் எதோ ஈர்ப்பு போல’ என்று எண்ணி கொண்டான்.
“என்ன சார் ? அப்படியே ஃப்ரீஸ் ஆகிட்டீங்க...”
“ஹான், ஒன்னுமில்லை...” என்று கூறிவிட்டு அவளின் பார்வையை மொத்தமாக தவிர்த்தான்.
“சரி இது போதும் நீங்க வொர்க் பண்ணுங்க” என்று விட்டு அங்கிருந்து சென்று விட்டான்.
“என்னடா? இங்க வந்து உக்காந்திருக்க” தோளில் கவுதமின் கை விழ,
“த்சு, ஒன்னும் இல்லைடா..." என்று விட்டு தன் எண்ணவோட்டத்தை கூற நண்பனை விசித்திரமாய் நோக்கினான் கவுதம்.
இது போன்று பல சமயங்களில் நிகழ்ந்திருக்கின்றன. அப்போதெல்லாம்,
“எனக்கென்னடா? பாடத்த கவனிச்சா ஃப்யூச்சருக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.. அத விட்டுட்டு என்னை கவனிச்சா என்ன ப்ரயோஜனம்?” என்று அசால்ட்டாய் தோளை குலுக்குவான்.
ஆனால் இன்றோ இவன் செய்கை ஆச்சர்யப்படுத்துகிறது.
***
0 Comments