06. உனது விழியில் எனது காதல்




தொடங்கியது கண்ணாமூச்சி ஆட்டம்.. இப்போதெல்லாம் அவன் வகுப்பெடுக்க வருவதில்லை மாறாக ஷைலாவே வகுப்பெடுத்தாள். 

முன்போ இவன் வெளியூர் சென்றதால் ஆன நிர்பந்தம். 
ஆனால் இன்று அங்குதான்  வலம் வருகிறான். வேண்டுமென்றே தன்னை எதாவது ஒரு வேலையில் தலையை விட்டு கொள்வான். அடிக்கடி ரிஷிகாவின் பார்வை சாஹித்யனை தேடும்.. 

அவள் கண்களில் தோன்றும் ஏமாற்றம்.. கவுதமிற்கு ‘இது வெறும் ஈர்ப்பு அல்ல’ என்று தான் தோன்றியது.  

அது வெறும் ஈர்ப்பாய் இருக்கும் பட்சத்தில், அவனை பார்க்காமல் இருப்பதானால், அதை சட்டை பண்ணாமல் மற்ற வேலைகளில் கவனம் செலுத்தலாமே... ஆனால் இவளோ? அவனை தேடித்தேடி தோற்று போன பாவனையோடு அல்லவா திரும்புகிறாள். நிச்சயம் இது உண்மையான காதல் உணர்வு என்றே தோன்றியது.

 “என்னடா க்ளாஸ்க்கு போறதா உத்தேசமே இல்லையா உனக்கு..? உனக்குன்னு எப்படி தினமும் எதாவது ஒரு வேலை இருக்கு.. என்னால ஷைலா பாட்ச் பசங்களுக்கு பதில் சொல்ல முடியல..

 “என்னவாம்..?”

 “பின்ன  அவங்களோட ட்ரைனர் இப்படி வேற பாட்ச்சுக்கு போனா நாங்க எப்படி படிக்கறதுனு கேக்றாங்க.”

 ஏனோ, அவன் ஒருவனால் மற்றவர்கள் பாதிக்கப்படும் ரீதியில் கவுதம் பேச சிறிது நேரம் யோசித்து கொண்டிருந்தவன் நீண்ட பெருமூச்சோடு, 

“சரிடா, நாளைல இருந்து க்ளாஸ் அட்டெண்ட் பண்றேன்”   என்றான்.

 ‘இதற்கு தானே ஆசைபட்டோம்.. எதோ ரிஷிகாவிற்கு தன்னால் இயன்ற உதவி’ என்று தனக்குள் கூறி கொண்டான்.

 ***

Post a Comment

0 Comments