சிறிது நேரம் கழித்து வெளி வந்த நர்ஸ் சகியிடம்,
“சார், டாக்டர் உங்கள கூப்டறாங்க”
விடுவிடுவென்று உள்ளே சென்றான்.
“மிஸ்டர்....??”
“சாஹித்யன்..”
“ம்ம்ம்... நீங்க இவங்கள்ட்ட என்ன பேசுனீங்கனு தெரியாது.. ஆனால் நீங்க போன கொஞ்ச நேரத்துலயே இவங்களோட பல்ஸ்ல கொஞ்சம் மாற்றம். நீங்க இவங்க பக்கத்துல இருக்கனும்னு நினைக்குறாங்க போல ... சோ நீங்க பேசுங்க.. இவங்க பழைய மாதிரி திரும்ப உங்களோட பேச்சு ஒரு ஊன்று கோலா இருக்கலாம்.”
பார்க்க கூட அனுமதிக்க முடியாது என்ற மருத்துவரே இப்போது இவனை இங்கும் அங்கும் அசையாது அவளருகில் இருக்க கோரினார்.
“ரிஷிகா... ரிஷிகா... நா பேசுறத உன்னால புரிஞ்சிக்க முடியுதா? என்ன பாரு ரிஷிகா ... கண்ண திறந்து பாரு ரிஷிகா...” பரபரத்தான். “
சார், பதறாம பொறுமைய பேசுங்க சார்..” மென்மையாய் கூறினாள் நர்ஸ்.
நீண்ட பெரு மூச்சுடன், அவளின் தளிர் கரங்களை தன் கைக்குள் கொண்டு வந்தவன்.. விடாமல் பேசி கொண்டிருந்தான்..
“ரிஷிகா... நான் பேசுறது உனக்கு கேக்குதானு தெரியல... இருந்தாலும் பேசுறேன்... என் கிட்ட வந்துடுமா... நீ இப்படி இருக்குறத என்னால பார்க்க முடியல... நான் முதல் முறை பார்த்த ரிஷிகா வேணும்... என்னை பார்த்ததும் துடித்த அந்த விழிகளை நான் பார்க்கணும்.”
அவளின் கரங்கள் மெல்ல நடுக்கம் கண்டது.
“என்னை பத்தி நிறையவே சொல்லனும் உன் கிட்ட.. என் மனசை பத்தி... என் மனதில் நீ வந்த கதையை பற்றி பேசணும்.”
அவளின் விழிகள் நீரை சிந்தியது. அதை துடைத்தவன்,
“எந்த மன கசப்பிற்கும் இடம் கொடுக்க மாட்டேன் ஏன்னா..? நான்.... " நான் உன்னை காதலிக்கிறேன் ரிஷிகா " இப்போது அவள் உடல் தூக்கி போட்டது.
பதறி எழுந்த சாஹித்யன்... “ரிஷிகா...ரிஷிகா...” அவளின் கன்னம் தொட்டு எழுப்பினான். அதே நேரம், அவளிடம் தெரிந்த சிறு அசைவிலேயே மருத்துவரை அழைத்திருந்தாள் நர்ஸ்... ரிஷிகாவின் உடல் அதிர்வுறவும் மருத்துவர் உள்ளே நுழையவும் சரியாய் இருந்தது.
“டாக்டர்... ரிஷிகா....”
“ஈசி ஈசி... நீங்க கொஞ்சம் வெளிய இருங்க...” என்றவாறே சிஸ்டரை அழைத்தார். மீண்டும் அதே இடத்தில் தஞ்சம் அடைந்தவன் கண் மூடி கொண்டான்.
புதிதாய் வந்தவனையும்... புதிராய் நடப்பவற்றையும் புரியாமல் பார்த்து கொண்டிருந்த ரகுராமனுக்கு மகளின் மன சிக்கலுக்கான முனை கிடைத்து விட்டதாய் உணர்ந்தார்.
நீண்ட நேர இடைவெளிக்கு பின் இன்முகமாக வெளிப்பட்டார் மருத்துவர். அனைவரின் பார்வையும் ஆவலாய் அவர் முன்...
“மிஸ்டர்.ரகுராமன் .. உங்க பொண்ணு ஆபத்து கட்டத்த தாண்டிட்டாங்க” என்று கூறவுமே...
அத்தனை நேரமும் அடைபட்டிருந்த அனைவரின் மூச்சு காற்றும் சீரான வேகத்தில் சீறி பாய்ந்தது.
“ரொம்ப நன்றி டாக்டர்...” அவரின் கை பிடித்து கண்ணீர் சிந்தியவரை தேற்றி “நாங்க எங்க ட்யூட்டிய தான் செஞ்சோம் சார்...அதோட ஸ்லீப்பிங் டேப்லட் கொடுத்து இருக்கோம்.. டூ அவர்ஸ் கழிச்சு கண் முழிச்சுடுவாங்க அப்போ போய் பாருங்க” என்று கூறி நகர்ந்தார்.
ஏனோ அந்த கணம் தான் அனைவரின் மனமும் லேசானதை போன்று உணர்ந்தனர். வட்ட வாயிலின் வழியே ரிஷிகாவை பார்த்தவர்களின் மனதில் இப்போது பயம் இல்லை.
“சகி, ஒரு கப் டீ சாப்பிடவா..ரொம்பவே சோர்வா தெரியுற” என்று கவுதம் அழைக்க...
“ப்ச்...வேண்டாம்டா” மறுத்தவனை வலுக்கட்டாயமாக இழுத்து சென்றான். மஹேன் கவுதமுடன் செல்லும் சகியையே பார்த்து கொண்டிருந்தார் ரகுராமன்.
வனிதாவின் மூலம் விபரம் சேகரித்து வைத்திருந்த மஹிமா... ரகுராமனின் பார்வையை புரிந்தவளாய்...
“என்ன அங்கிள் ... சகி சார அப்படி பார்க்குறீங்க?”
“என்னமா?” சிந்தனை கலைந்தவாறு இவளிடம் வினவ..
சின்ன சிரிப்போடு, “சகி சாரயே பாக்குறீங்களேனு கேட்டேன்” என்றாள்.
அவளின் கேள்விக்கு பதில் அளிக்காது சுவர் கடிகார மணியை பார்த்தவர், “அடடா மணி 7.30 ஆய்டுச்சே நேரம் வேற இருட்ட தொடங்கிருச்சேமா வீட்டுல...” என்று வருந்த போனவரிடம்...
“வீட்டுக்கு போன் போட்டு சொல்லியாச்சு அங்கிள்... அதோட என்னை மஹேனும் வனிதாவ கவுதமும் ட்ராப் பண்றதா சொல்லிட்டாங்க..”
அவரின் கவலைக்கு முற்று புள்ளி வைத்தாள்.
0 Comments