திலகாவின் பேச்சால் சிலையென நின்றிருந்த தாரணியை அறைக்குள் அழைத்து வந்த தர்ஷினி அவளை ஒரு நாற்காலியில் அமர வைக்க
கையை பிசைந்த வண்ணம் இருந்த தாரணியின் மனம் ஒரு நிலையில் இல்லை..
அவள் அடுத்து ‘என்ன செய்ய?’ என்று தோன்றாமல் அமர்ந்து இருக்க தர்ஷினி தான் அவளின் சிந்தையை கலைத்தாள்.
“தரூ…”
“ம்ம்ம்..”
“ என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க… அத்தை பேசுனதுக்கா?” என்று கேட்க
இவள் மீண்டும் தலை குனிந்து கொண்டு கையை பிசைவதை தொடர்ந்தாள்.
“பாவம் விட்ரு வலிக்க போகுது” என்ற தர்ஷினி கூறவும் இவள் புரியாமல் நிமிர்ந்தாள்.
“ இல்ல ரொம்ப நேரமா கைய போட்டு அந்த பாடு படுத்துறியே அதான் வலிக்க போகுதுன்னு சொன்னேன்” என்று சிரிக்காமல் கூற
“ ப்ச்,” என்று சலித்து கொண்டாள் தாரணி.
“ அடேங்கப்பா… சலிப்பை பாரு… சரி இப்போ என்ன உன் பிரச்சனை? உனக்கு அஷ்வினை பிடிக்கும் தானே” என்று அவள் நேரடியாக கேட்க திடுக்கட்டு அவளை பார்த்தாள் தாரணி.
“ ஷாக்க கொறா… நான் என்ன சொல்லிட்டேன்னு இப்டி ஷாக் ஆகுற… நீ அஷ்வினை விரும்புறது எனக்கு மட்டும் இல்ல… எங்க எல்லாருக்கும் தெரியும்… இருந்தும் ஏன் தயங்குற? எனக்காகவா?” என்று தர்ஷினி அவளின் விழியில் நுழைந்து கேட்க தாரணி வார்த்தைகளை தேடினாள்.
“ என்ன தரூ? என்ன சொல்லி இவளை சமாளிக்கலாம்னு யோசிக்கிறியா?” என்று அதற்கும் அவளே விடை கூற
தாரணி பேசா பேதையானாள்.
“ சரி நானே சொல்றேன்…
உனக்கு அஷ்வின் என் அண்ணான்னு தெரிய முன்னாடியே அவன் மேல விருப்பம்…
அந்த சமயம் நடந்த குழப்பத்துல அவன அனுவோட முறைப்பையன்னு பிணைச்சு அவனை அவளுக்கு விட்டு கொடுக்கிறதா முடிவு பண்ணி அவன் மேல இருந்த விருப்பத்தை மனசோட ஆழத்துல வச்சி பூட்டியாச்சு… அப்புறம் அஷ்வின எங்க வீட்ல பாத்ததும் குழப்பம் தீர்ந்து உன் மனசு திரும்ப காதல் கூப்பாடு போட… அதையும் பூட்டு போட்டு பூட்டி வைக்கிற… காரணம்,
ஏற்கனவே காதல் ஒரு நட்பை அழிச்ச கதை மாறி ஆகிட கூடாதுன்னு… சரி தானே?” என்று கேட்க
தாரணி ‘ ஆம்’ என்று தலையசைத்தாள்.
அவளின் அந்த சிறு பிள்ளை தனமான எண்ணம் தானே அது…
அது அவ்வாறு இல்லை… என்பதை அவளுக்கு யார் தெரிய படுத்த?
அதை தானே தர்ஷினி செய்து கொண்டிருக்கிறாள்.
“ பாரு தரூ… உனக்கு ஒரு விஷயம் தெரியப்படுத்துறேன்… நல்ல கேட்டுக்கோ… எனக்கு என் அண்ணா மேல பாசம் தான் அதை எப்போமே இல்லைனு சொல்ல மாட்டேன். அவனுக்காக என்ன வேணா செய்வேன். இது அண்ணாக்கும் தெரியும். ஆனா?” என்று இடைவெளி விட்டவள்
“ அஷ்வினை நீ விரும்பு இல்ல விரும்பாம போ, அது உன்னோட சொந்த விருப்பம்…
ஆனா, ஒன்னு தெரிஞ்சிக்கோ, எப்போமே என் தோழி எனக்கு தோழி தான்… எனக்கும் அவளுக்கும் நடுல எதுவும்..” என்று அவளின் விழியை ஊன்றி பார்த்த வண்ணம்,
“எதுவும்? யாரும்? வரமாட்டாங்க.. வரவும் விட மாட்டேன். அது என் அண்ணனாவே இருந்தாலும் சரி… அதோட உன் மனசை போட்டு உலப்பிட்டு இருக்க ஒரு விஷயத்துக்கு முடிவு…
நீ அஷ்வினை கட்டிக்கிட்டா இந்த உலகத்துல அதிகமா சந்தோஷ படப்போறது நானா தான் இருப்பேன்” என்று கூற மறுநொடி தாரணியின் இறுகிய அணைப்பில் இருந்தாள் தர்ஷினி.
என்ன சொல்வாள்? இத்தனை நாளும் அஷ்வினை நெருங்க விடாமல் தடுத்து வந்த ஏதோ ஒரு மாய வலை இன்று விடுபட்டது போன்ற நிம்மதி.
தோழியின் வாய்மொழி உதிர்த்த சொல்… அவளுக்குள் ஆனந்த அருவியை பெருக்கெடுக்க செய்ய அது சந்தோசமாக அவளின் விழி வழி வெளியேறியது.
அணைப்பில் இருந்து விடுபட்ட தர்ஷினி அவளின் கண்ணீரை துடைத்து கொண்டு,
“அப்புறம் என்ன மேடம்? கொஞ்சம் என் அண்ணா மேல கருணை காட்டு… பாவம் உன் ஒரு ஓர விழி பார்வைக்கே ஏங்கி நிக்கிறான். இப்போ என்னை கட்டிபிடிச்ச மாதிரி அவன் கிட்ட செஞ்சா அவனும் ஹாப்பியா இருப்பான்ல” என்று கண்ணடித்து கூற இவள் வெட்கத்தில் நெளிந்தாள்.
“ ஆனா அதுக்கு நீ பெரிய மனசு பண்ணி வெளிய போகணும் பாப்பு” என்று பின்னால் இருந்து குரல் வர இருவரும் திடுக்கிட்டு திரும்பினர்.
ஆம். அஷ்வின் தான் நின்று கொண்டிருந்தான்.
பாதியில் தூக்கம் தொலைத்து தண்ணீர் தேடி வந்தவன் காதினில் தோழியர் பேச்சு விழவே அசைய மாட்டாது அங்கேயே சிலையாகினான்.
தான் பேசும் நிலை வரும்போது நிச்சயம் பேசுவதாய் கூறிய தர்ஷினி…. இன்று தெளிவாய்
தனக்கு என்ன தேவை? என்பதை அவளுக்கு புரிய வைக்க.. அவளின் தோழியின் மீதான அந்த பாசத்தில் மீண்டும் அஷ்வின் தான் ஆடிப்போனான்.
மெல்ல அவன் நிலை உணர்ந்து கொண்டு பார்க்க தங்கை தன்னவளை கேலி பேசியது காதினில் விழுந்து சிரித்து கொண்டவன் அந்த பேச்சில் தன்னையும் இணைத்து கொண்டான்.
“ அண்ணா! நீ எப்போ வந்த?” என்று தர்ஷினி கேட்க
“ இப்போ தான்டா கொஞ்ச நேரம் முன்னாடி” என்று பதிலை அவளுக்கு அளித்தாலும் அவன் பார்வை தாரணியை சுற்றி வட்டமிட இருவரையும் மாறி மாறி பார்த்த தர்ஷினி,
“ சரி ரெண்டு பேரும் பேசிட்டு இருங்க… நான் போய் தோட்டத்துல வட்டமேசை போட்டு வாழ்றவங்களுக்கு குடிக்க ஏதாச்சும் கொடுத்துட்டு வரேன்” என்று ஓடினாள்.
“அண்ணா, அஞ்சு நிமிஷம் தான் டைம்… சொல்லிட்டேன்” என்று காற்றில் கலந்து வந்த அவளின் குரலில் மெல்ல “ அறுந்த வாலு” என்று சிரித்து கொண்டான்.
தனிமை…
இது அவர்களுக்கான மற்றுமோர் தனிமை…
அவன் விழியால் அவளை துளைக்க அவளோ நிலத்தினில் அகழ் தோண்டி கொண்டிருந்தாள்.
“ம்ஹம்” அவனின் லேசான செருமலுக்கு கூட அவளிடம் அசைவில்லை.
“மிஸ். தாரணி” என்று கண்ணில் குறும்பு மின்ன அவன் அழைக்கவும் நிமிர்ந்து அவனை பொய் கோபத்தோடு ஏறிட்டாள்.
அவளின் அந்த பொய் கோவப்பார்வை அவனின் காதல் விழியில் தொலைந்து தூரப்போய் கன்னி மனம் சிக்கி கொள்ள முகம் வெட்கம் பூச தலை கவிழ சென்றவளை அவன் முகம் நிமிர்த்தினான்.
“உன் கிட்ட ஒன்னு சொல்லணும்டா.. உன் கண்ணை பார்த்து சொல்லணும்” என்று அவனின் இதழோடு சேர்த்து விழியும் கூற அவள் அவனை மட்டுமே பார்த்திருந்தாள்.
“ நான் உன்னை விரும்புறேன் தாரணி. எந்த அளவுக்குன்னு என் இதய துடிப்பை தொட்டு கேட்டா அதோட ஆழம் கூட உன் பேர் சொல்லும்” என்று அவளின் கையை தன் நெஞ்சில் வைத்து அழுத்தி அவன் கூற அவனின் ஒவ்வொரு வார்த்தையிலும் விழுந்து கொண்டிருந்தவள் மொத்தமாய் அவன் மேல் சரிந்தாள். அவனும் அவளை இரு கையோடு அணைகட்ட
அவர்களின் அந்த காதலும் அவர்களோடு அழகாய் இறுகி போனது இனிமையாக.
***
மாலை வேளையில் தூங்கி எழுந்து வந்த சந்தோஷ் கண்ணில் அஷ்வின் தாரணியின் நவரச பயணங்கள் பட அவன் குழப்பமாய் தர்ஷினியை ஏறிட்டான்.
அவளும் அவனையே பார்த்திருந்த படியால் அவனின் விழிவினாவை ஊகித்து கட்டை விரலை தூக்கி காண்பித்தாள்.
அதை கண்ட அவன் விழி மேலும் விரிய எல்லாருக்கும் டீ போட சென்ற தர்ஷினியின் பின்னோடு எழுந்து சென்றான்.
அவன் செல்வதை கண்ட தாரணி அமைதியாக திலகாவோடு தன் பேச்சை தொடர்ந்தாள். விழியால் அஷ்வினுக்கு பதில் அனுப்பியவாறே.
அவனுமே அங்கிருந்த தந்தையின் கேள்விக்கு பதில் அளித்தவாறு இவளை அவ்வப்போது எட்டி பார்த்தும் கொண்டான்.
இவர்களின் சம்பாஷணை புரிந்த பெரியவர்கள் கண்டும் காணாதது போல் இருந்தனர்.
அவர்கள் கடந்து வந்த பருவமாகிற்றே…
அதன் சுகிப்பை அறியாதவர்களா என்ன?
அதிலும் இந்த இருவர் இப்போது தானே காய்விட்டு பழமாகி இருக்கின்றனர்.
அதனால் கூடுதல் சலுகையாக அவர்களை பொருட்படுத்தவில்லை.
நாமும் கண்டுகொள்ளாமல் சமையலறைக்குள் சென்ற ஜோடியை எட்டிப்பார்த்து விட்டு வரலாம்.
“ தர்ஷி என்ன நடக்குது இங்க? எனக்கு ஒன்னும் புரியல… தாரணி எப்படி மனசு மாறுனா? நடக்கிறது கனவா? நனவா? என்னால நம்பவே முடியல” என்று சந்தோஷ் கூறவும் சூடான டீ கப்பை அவன் முழங்கையில் வைத்தாள்.
“ ஸ்ஸ்ஸ்… ஏன்டி?” சூடு பட்ட இடத்தை தேய்த்து கொண்டபடி அவன் கேட்க
“ நீ தானே கனவா? நனவான்னு? கேட்ட அதான் சூடு வச்சேன். எப்டி வலிக்குதா? அப்போ இது நிஜம் தானே?” என்று கண்ணடித்து அவள் கேட்க அவன் அவள் புறம் மேலும் நெருங்கி
“ ஏன் அதை அப்டி தான் தெரியப்படுத்தனுமா? வேற நல்ல முறையில செஞ்சு காட்ட கூடாதா?” என்று கேட்க
அவன் நெருக்கத்தில் லேசாக வெட்கியவள்,
“ வேற எப்டியாம்?” என்று மெல்லிய குரலில் கேட்க அவன் விழியால் அவளிடம்
‘ உனக்கு தெரியாது?’ என்று கேள்வி எழுப்ப
இப்போதோ முழுதும் சிவந்த முகத்தை அவனிடம் காட்டாமல் அவனை தள்ளிவிட்டு இவள் திரும்பி கொண்டாள்.
“ ஏய் தர்ஷீ…” என்ற அவன் அழைப்பை காதில் வாங்காமல் அனைவருக்கும் கப்பில் டீயை ஊற்றினாள்.
“ தர்ஷி… இங்க பாருடி..”அவன் கெஞ்சலாய் அழைக்க அவள் திரும்பாமலே
“ சந்தோஷ் செல்லம் எனக்கு வேலை இருக்கு… நீ நல்ல பிள்ளையா போய் கூட்டதுல உட்காரு” என்று அவள் கூறவும்
“ ஏய், என்ன நீ? என்னைய பாப்பாவை விரட்டுற மாறி விரட்டுற? நான் தான் இந்த கதையோட செகண்ட் ஹீரோ… நியாபகம் வச்சிக்கோ” என்று கூறவும்
தாங்க மாட்டாமல் சிரித்தவள், “ யாரு? நீ செகண்ட் ஹீரோ?” என்று கேட்க,
“ அப்கோர்ஸ் யா.. வேணும்னா நீயே கேட்டு பாரு?”
“ யாரு கிட்ட?”
“ அது… ஹான், உன் மனசாட்சி கிட்ட..”
“ சரிடா… நீ ஹீரோவாவே இருந்துட்டு போயேன்… அதுக்கு இப்போ என்ன செய்யணும்?” என்று சிரிப்பை அடக்கி அவள் கேட்க..
“ ஹான்.. நான் ஹீரோடி… ஹீரோக்கு ஹீரோயின் கிட்ட இருந்து என்ன வேணும்? ஒரு சின்ன கிஸ் தான்” என்று அவன் இழுக்க
“எது???? போடா டேய்…. அதுக்கு வேற ஆள பாரு” என்று இடுப்பில் கை வைத்து அவனை முறைக்க
“ச்ச ச்ச… இதையெல்லாம் வேற யார் கிட்டயாவது கேட்டா அடி விழும்… கேக்க வேண்டியவங்க கிட்ட தான் கேட்கணும்” என்று உதட்டில் கை குவித்து அவன் கண்ணடிக்க இழுத்து வைத்திருந்த பொறுமையை காற்றில் பறக்க விட்டுவிட்டு அவனை நல்ல சாத்தினாள்.
“ கேப்பியா? கேப்பியா? எவ்ளோ தடவ சொல்லி இருக்கேன்… இப்டி கேக்க கூடாதுன்னு” என்று மேலும் சில அடிகளை வழங்கினாள்.
அவளின் அடிக்கும் கைகளை தன் கையில் பற்றி கொண்டவன் மறுகையால் அவளை தன் புறம் இழுத்து,
“என்னடி ரொம்ப துள்ளுற? நானும் எவ்ளோ டைம் சொல்லி இருக்கேன்… நானா கேட்டா நல்ல பிள்ளையா ஒன்னு தந்துட்டு போ… இல்லனா நானே தேவைக்கும் அதிகமா எடுத்துக்குவேன்னு… ஹீரோன்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாம அடிக்கற நீ?’ என்று கூறி கொண்டே அவனுக்கு வேண்டியவற்றை தேவைக்கும் அதிகமாக எடுத்து கொண்டே அவளை விடுத்தான்.
இவங்க இந்த ஜென்மத்துல வெளிய இருக்கவங்களுக்கு டீ கொண்டு போய் கொடுத்த மாதிரி தான்.
ஒருவழியாக அவனோடு அக்கப்போர் நடத்திவிட்டு அனைவருக்கும் டீ எடுத்து கொண்டு அவளும் ஸ்னாக்ஸ் எடுத்து கொண்டு அவனும் வந்து சேர்ந்தனர்.
அஷ்வின் அருகில் சென்று அமர்ந்த சந்தோஷ் அவன் இன்னமும் அவளையே விழுங்கி கொண்டிருப்பதை பார்த்து அவன் அருகில் குனிந்து..
“ மச்சி தொடச்சிக்கோடா… அடிக்கிற வெயிலுக்கு உனக்கு மட்டும் எப்டி வாய்ல தனி ஃபால்ஸ் ஓடுது” என்று கூறவும் அஷ்வின் ஒரு வெட்க சிரிப்பை சிந்த…
“ அடே அடே… இப்போ நீ செஞ்ச கருமத்துக்கு பேரு வெட்கமா? சகிக்கல அதெல்லாம் உன் ஆளு கிட்ட மட்டும் வச்சிக்கோ.. இப்டி என் கிட்டயெல்லாம் காட்டி என்னை பயமுறுத்தாத சொல்லிட்டேன்…” என்று கூற
“ விடு மச்சி… என் தங்கச்சி உனக்கு ஓகே சொல்லும் போது உன் வாயில இருந்து ஒரு டேம் தண்ணி ஒடுச்சே நான் ஏதாச்சும் சொல்லி இருப்பேனா… நீயும் அதை மாறி கண்டுக்காத” அவன் தோளில் கை போட்டு அஷ்வின் கூற
“ ஆமா கேட்கணும் நினைச்சேன்… தங்கச்சி உன் கூட எப்டி சமாதானம் ஆனா?”
“ எல்லாம் என் அருமை தங்கச்சி பண்ண வேலை தான்டா” என்று கூறி அவனுக்கு மட்டும் கேட்கும் படி நடந்தவற்றை கூறி முடித்தான்.
“ அப்போ இனி உன் காதல்ல எந்த தடையும் இல்லைனு சொல்லு” என்று ஏக குஷியில் சந்தோஷ் கேட்க அஷ்வின் இடம் வலமாக தலையசைத்து,
“ இருக்கு மச்சான்… இனிமே தான் பெரிய பூகம்பமே இருக்கு… நாம சென்னையில பாத்து வச்சிட்டு வந்து இருக்கோமே அந்த வேலை இனிமே தான் பூகம்பம் எரிமலைன்னு எல்லாத்தையும் உண்டு பண்ணும்” என்று அவன் கூறவும் சந்தோஷ் அவனை கண்டு எழுந்த சிரிப்பை அடக்க பெரும் பாடு பட்டான்.
அவன் சிரிப்பதை கண்டு முறைத்த அஷ்வின்,
“ என்ன சிரிப்பு?’ என்று பல்லை கடிக்க…
“இல்ல மச்சி… உன்னோட லவ்வுக்கு மட்டும் எப்டி டிசைன் டிசைனா பிரச்சனை வருதுன்னு நினைச்சேன் சிரிப்பா வருது” என்று கூறி மேலும் சிரிக்க
“ ரொம்ப சிரிக்க வேண்டாம் மச்சி… சென்னை பூகம்பத்தால் பாதிக்க படப்போவது நானும் என் காதலும் மட்டும் இல்லை… நீயும் உன் காதலும் சேர்த்து தான்” என்று அஷ்வின் கூற
அவன் சொல்வது விளங்க,
தூரத்தில் தாரணியோடும் திலகவோடும் சிரித்து பேசி கொண்டிருந்த தர்ஷினியை அதிர்ந்து பார்த்தான் சந்தோஷ்.
0 Comments