சுற்றி நடப்பவற்றை பார்த்து கொண்டு வந்த கீர்த்தனாவின் பார்வையில்,
தன் சித்தியிடம் வாசுகி பாட்டி ஏதோ நாடியை தோளில் இடித்து கூற சித்தியின் முகம் சுருங்கியது.
கோவப்பட தெரியாத தன் சித்தியையே கோபப்பட வைத்துள்ளார் என்றால் ....
அது மட்டுமின்றி அங்கு இருக்கும் பாதி ஜனமே தன் உறவுகளை துச்ச படுத்துவது போல் நடந்து கொள்ளும் முறை அவளின் மனதை ஆட்டி பார்த்தது.
இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு நடந்தது ஒன்று.
கூட்டத்தில் சின்ன சலசலப்பு.
“என்னப்பா சதா மாப்பிள்ளை வீட்டார் ஆய்ட்ட. இனி பெண் வீட்டார் உன் கால்ல விழாத குறையாக நடக்கணும்னு சொல்லு” ஒருவர் கூற,
“சதா சொன்ன பேச்சுக்கு பெண் வீட்டார் ஆடலனா, சதா இந்த கல்யாணத்தையே நிறுத்திட மாட்டான்” மற்றொருவர் பதில் கூற
கூட்டத்தில் சிலர் இதற்கு சிரிக்க… ஏற்கனவே பாதி கவலையில் இருந்த சிவராமன் பொறுமையிழந்து கத்தி விட்டார்.
“ஏன்யா ? இப்படி வாய் கூசாமல் பேசுறீங்க.. விஷேச வீட்டில் வச்சு பேசுற பேச்சா இது”
அத்தனை காலமாக மச்சினரின் மேல் கொண்ட கோபத்தை தீர்த்து கொள்ளும் வகையில் சதா சிவமும் பேச தொடங்கினார்.
“ ஏன் மச்சினரே ? ஏன் பேசக்கூடாது. ஊரில் நடக்காததையா இவங்க பேசிட்டாங்க.?”
“வேணாம் சம்பந்தி. இவங்க பேச்சுக்கு நீங்க சப்போர்ட் பண்ற மாதிரி பேசாதீங்க இங்க நடக்கிறது நம்ம ரெண்டு வீட்டோட விஷேசம்.”
“நீங்க எனக்கு ஞாபக படுத்துறிங்களா. இது என் வீட்டு விஷேசம் என்று... நீங்க சொல்லி தான் நான் தெரிஞ்சுக்கணும் என்ற அவசியமில்லை.
நான் மாப்பிள்ளை வீட்டான் . இவங்க சொன்னது போல நான் என்ன சொன்னாலும் நீ கேட்டு தான் ஆகணும்”
சட்டென்று அவர் ஒருமையில் அழைக்க அதிர்ந்து பார்த்தார் சிவராமன்.
பயந்தது போலவே நடக்கிறதோ என்ற எண்ணம் அவருக்கு.
சலசலப்பு கண்டு கணவரின் அருகில் வந்த சாவித்திரிக்காக கண் மூடி அமைதி காத்தார்.
ஆனால் சதாசிவம் தான் அமைதி அடையாமல் ஏதோ கத்த தொடங்க சாவித்திரி,
“ என்னங்க , ஏன் பொது இடத்தில வச்சு இப்படி நாகரிகம் தெரியாம பேசுறீங்க.. கொஞ்சம் அமைதியா போங்களேன்”
சாந்தமாக கூற முயன்றாலும் தன் அண்ணனின் நிலைக்கு தானும் ஒரு காரணமோ என்று எண்ணியவரின் குரல் காட்டமாக தான் வந்தது.
பொது இடத்தில் தன்னிடம் தன் மனைவி கோப பட்டாளா… தாங்க முடியாத சதாசிவம் ,
“ஏய் என்னடி என்னையே எதிர்த்து பேசுற ?” என்று கையை ஓங்க மறு நொடி,
“பளார்….” என்று அவர் கன்னத்தில் இடி விழுந்தது.
சிவராமன் தான் பொறுமையை கை விட்டு அவரை அடித்து இருந்தார்.
சபையே ஒரு கணம் ஸ்தம்பிக்க ,
“ மாமா…” என்ற கார்த்திக்கின் கர்ஜனை குரல் அனைவரையும் ஆட்டியது.
0 Comments