08. என் உள்ளம் உன் வசம்



விக்னேஷ் படிப்பு முடிந்து, வீட்டிற்கு வந்து பார்த்த போது வீடே மாறி போய் இருந்ததை கண்டு அதிர்ந்தான்.

எல்லாவற்றையும் விட தன் தாயின் நிலை அவனை கவலை கொள்ள செய்தது.

தன் குடும்பத்தை மீட்க சுய நலமே என்றாலும் அவன் கீர்த்தனாவை தேட தொடங்கினான்.

கடந்த மூன்று மாதமாக தேடிய தேடலில் , தன் நண்பனின் திருமணத்திற்கு திருநெல்வேலி சென்ற போது அவளை பார்க்க முடிந்தது.

சில நாட்களாக அவளிடம் பேசி பேசி தங்கள் கம்பெனியின் interviewக்கு வர அவளை சம்மதிக்க வைத்திருந்தான்.

இருக்கையில் சாய்ந்து கண் மூடிய கீர்த்தனாவின் கண்கள் லேசாக கசிய ஆரம்பித்தது. மெல்ல அதை உள்ளே இழுத்து கொண்டவள், " தன் கை கையில் கிடந்த நிச்சயம் அன்று கார்த்திக் போட்ட மோதிரத்தை” பார்த்திருந்தாள்.

கார்த்திக்கும் அதே மனநிலையில் தான் இருந்தான். கையில் கிடந்த மோதிரத்தை பார்த்தவன் கண்கள் செருக தூங்கி போனான்.

எப்போதும் சிந்தனையோடு இருக்கும் கீர்த்தனாவின் அருகில் வாந்தார் சிவராமன்.

“என்னமா? என்னயோசனை?”

கையில் இருந்த கவரை அவரிடம் நீட்ட, அதை வாங்கி பார்த்தவர் மனநிலையை வார்த்தையால் சொல்ல முடியாது. முடிந்து போனதாய் நினைத்தது மீண்டும் தொடர்கிறதா இல்லை. என் மகளின் துயரம் காணாது இறைவனும் மனம் இறங்கி விட்டானா?'

எதுவாயினும் நடப்பவை நல்லவையாக இருக்க வேண்டும் என அந்த உள்ளம் வேண்டி கொண்டது.

“என்னமா செய்ய போற?”

“தெரியலப்பா”

“எதுவானாலும் நல்ல யோசிச்சு செய்மா. என் பொண்ணால யாருக்கும் எந்த கஷ்டமும் வந்துட கூடாது. அவ யாருக்கும் அப்படி மனசால் கூட தீங்கு நினைக்க மாட்டா. மத்தவங்களுக்காக தன் சந்தோசத்தை கூட விட்டு கொடுப்பவ அவ. நீ என்ன முடிவு எடுத்தாலும் அதுக்கு எங்களோட முழு ஒத்துழைப்பும் இருக்கும்.”

“நான் விக்கிட்ட யோசிச்சு நாளைக்கு முடிவு சொல்றேன்னு சொல்லி இருக்கேன்ப்பா”.

“சரிம்மா.”

நல்ல யோசித்தவள் மாறுநாளே தந்தையிடம் தன் முடிவை கூறி விட்டாள்.

“நான் போறேன்ப்பா. யாருக்காக இல்லைனாலும் அத்தைக்காக நான் போறேன். இரண்டு குடும்பமும் மீண்டும் ஒன்னு சேர்வது சாத்தியமா என்று தெரியல இருந்தும். அத்தையோட சந்தோசத்துகாக நான் போறேன். என்னை ஒரு முறை பார்த்தாலாவது அத்தை மாறிடும் என்ற நம்பிக்கை இருக்குப்பா எனக்கு.”

தன் தங்கையின் நிலையை மகள் வாயிலாக கேட்டு அறிந்தவர் கண்களும் கலங்க “எனக்கும் நம்பிக்கை இருக்குமா” என்றார் ,

அவரின் நம்பிக்கை , அத்தையின் சந்தோசமே இரு குடும்பமும் இணைவதில் அதுவும் தன் மகளின் கையில் தான் இருக்கிறது , என்பதை புரிந்து கூறினார்.

“அங்க எங்கடி தங்க போற.” ஜானகி கேட்க,

“விக்கி வீடு பாத்து வச்சிருக்கான் மா. இதோ அதோட அட்ரஸ். ஏற்கனவே ஒருத்தங்க தங்கி இருக்காங்க போல அவங்களும் நானும் சேர் பண்ணிக்கலாம் என்று சொன்னான்”.

அதன் பின் சிவராமன் – ஜானகியே நேரில் வந்து கீர்த்தனாவை கொண்டு வந்து விட்டனர்.

“வாங்க வாங்க…. விக்கி சொன்னது உங்களை தானா! நான் மித்ரா.”

முதல் பார்வையிலேயே மித்ரா அவர்களிடம் நன் மதிப்பைப் பெற்று விட்டாள். அதன் பின் அவளின் குடும்ப விபரம் கேட்டு தெரிந்து கொள்ள,

அப்பா சிறு வயதிலேயே தவறி விட்டார். அம்மா கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தவறி விட… பெங்களூரில் வேலை பார்த்து கொண்டிருந்தவள், சென்னைக்கு இரு வாரங்கள் முன்பு தான் மாற்றல் வாங்கி வந்திருந்தாள்.

தன்னிடம் உள்ள மற்றொரு வீட்டு சாவியை கீர்த்தனாவுக்கு கொடுத்தவள் அவள் தங்கும் அறையையும் காட்டினாள்.

மாடியில் இருந்த அந்த அறையை அவள் ஏற்கனவே இவளுக்கு தயார் செய்து வைத்திருந்தாள்.

ஊருக்கு கிளம்பிய சிவராமன் ஜானகியிடம் , தான் கீர்த்துவை பத்திரமாக பார்த்து கொள்வதாய் கூற,

அவர்களும் “ இனி அவளுக்கு பெற்றவர்கள் இல்லை என்று சொல்ல கூடாது. இனி கீர்த்தியோடு நீயும் எங்கள் பெண் தான். கீர்ததனா ஊருக்கு வரும் சமயம் கட்டாயம் மித்ராவும் வர வேண்டும்” என கட்டளையிட்டு விட்டு சென்றனர்.

     


Post a Comment

0 Comments