26. என் உள்ளம் உன் வசம்



காலையில் எழுந்ததில் இருந்தே சாவித்திரியின் மேலேயே தன் பார்வையை சுழற்றி கொண்டு இருந்தார் சதாசிவம்.

அவருக்கு ஏனோ இன்று தன் மனைவி புதிதாய் பிறந்து இருப்பவரை போல் தோன்றினார்.

அவரின் கண் தன் மனைவியை விட்டு இங்கும் அங்கும் நகரவில்லை. அதோடு அவரும் தன் அறையை விட்டு வெளியே வரவில்லை.

எங்கே தான் சென்றால்,

அவள் தன் கூட்டுக்குள் புகுந்து கொள்வாரோ என்ற பயம் அவருக்கு.

சாவித்திரி அவசரமாய் விக்கியை எழுப்புவது பக்கத்து அறையில் இருந்த அவருக்கு நன்றாகவே கேட்டது.

“ டேய் சீக்கிரம் எந்திரிடா… எவ்ளோ நேரம் தான் தூங்குவ… நீ தான சொன்ன காலைலயே கூட்டிட்டு போறேன்ன்னு… இப்போ என்ன மல மாடு மாதிரி படுத்து தூங்கிட்டு இருக்க… சீக்கிரம் எந்திருச்சு ரெடி ஆகு…”

அவனை குளியல் அறைக்குள் தள்ளுவது இவருக்கு நன்கு புரிய,

“ எங்கே போக போறா..?” என்ற கேள்வியே பிரதானமாக மண்டையை குறைந்தது.

அதை அறிந்து கொள்ளும் ஆவலும் அவருக்குள் எழுந்தது.

காலை உணவை எல்லோருக்கும் தயார் செய்து விட்டு கொஞ்ச நேரத்தில் விக்கியோடு அவர் காரில் ஏறி புறப்பட்டு விட அவரை பின் தொடர வேண்டி தன் காரினுள் என்று அமர்ந்தார்.

பின்னால் வாசுகி எதோ கையை அசைத்த வண்ணம் வர வண்டியை கொஞ்சம் தளர்தினார்.

“ சிவம் எங்கப்பா போற..?” அவர் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல தயங்கினார் அவரின் அருமை மகன்.

“ அம்மா அது வந்து…” பதில் கூற முடியாமல் அவர் திணற,

“ எனக்கும் நீ போற இடத்துக்கு போகணும் ப்பா… அதனாலே சீக்கிரம் வண்டியை எடு…” என்று கூறி கொண்டே அவரும் உடன் ஏறி அமர்ந்து கொண்டார்.

அவரும் காலையில் இருந்து தன் மருமகளை பார்த்து கொண்டு தானே இருந்தார்.

“ அப்பா சிவம், நம்ம சாவித்திரி யோட இந்த திடீர் மாற்றதுக்கான காரணம் என்னனு நமக்கு தெரிஞ்சுடுச்சுனா.. அவ நம்மல மன்னிக்குறதுக்கான சூழலும் நமக்கு அமைஞ்சுடும்னு என் மனசு சொல்லுதுப்பா..”

வாசுகியின் எண்ணம் தான் தன் எண்ணமும் என்பதால் அவரும் அதை ஆமோதிப்பதாய் தலை அசைத்து கொண்டார்.

விக்கி சென்ற கார் ஓர் வீட்டின் வாசலில் நிற்க அங்கிருந்து கொஞ்சம் தள்ளி தன் காரை நிறுத்தினார்.

“ யாருடைய வீடு இது?..” வாசுகியின் கேள்விக்கு தெரியவில்லை என்று உதடு கடித்தார்.

கொஞ்ச நேரத்தில் கார்த்திக் வெளியே வர,

' இது கார்த்திக் வீடா.. அவன் எப்போது வீடு மாற்றினான். என்னிடம் சொல்லவில்லையே..' சதாசிவம் எண்ணம் கூற,

“ கார்த்திக்கிடம் கேட்டு பாரேன்” வாசுகி கேட்டு கொண்டதுக்கு,

“ வேண்டாம்மா..கொஞ்சம் பொறுத்து பார்ப்போம்.” என்று மறுப்பு கூறினாலும் அவர் மனம் இது சிவராமனின் வீடாய் இருக்குமோ என்று கணக்கிட்டது.

நெடு நேரம் காத்திருந்தும் ஒரு பலனும் இல்லை என்று தோன்றி வண்டியை கிளப்பும் நேரம் அங்கு ஒரு ஆட்டோவில் சிவராமன் – ஜானகி இறங்குவதை கண்டு அப்படியே வண்டியை நிறுத்தினார்.

“ அம்மா…” என்ற அதிர்ந்த குரலில் தன் தாயை பார்க்க,

அவரும் அங்கு தான் பார்த்து கொண்டு இருந்தார்.

“ இதை நாம எப்பவோ செஞ்சு இருக்கணும்டா… காலம் தப்ப விட்டுட்டோம். இப்போவும் எந்த தயக்கமும் வேணாம்… நாம போனா அவங்க நம்மள ஏத்துக்குவாங்க…” தன் மகனுக்கு புரிய வைத்தார் வயதில் மூத்தவர்.

நீண்ட நெடு காலமாக தனக்கும் இந்த எண்ணம் தோன்றுவதால், அவரும் அமைதியாய் அதை கேட்டு கொண்டார்.

ஆனாலும் ஒரு தயக்கம் அவருக்கு

'தான் சிவராமனிடம் முகம் திருப்பியதை போல் அவரும் தன்னை விட்டு முகம் திருப்பி விட்டால்… அதை தன் மனம் தாங்குமா? ' என்ற எண்ணம்.

கையை பிசைந்த வண்ணம் அவர் இருக்கவே அடுத்ததாய் கார்த்திக்கும் அந்த வீட்டில்… இன்னும் தெளிவாக கூற வேண்டுமானால் அந்த குடும்பத்தில் ஒன்றிணைய.. தாங்கள் இருவர் மட்டுமே தனித்து விடப்பட்டு விட்டோமோ என்று தன்னிரக்கம் தோன்றவே மீண்டும் தயங்கினார்.

'இது வேலைக்கு ஆகாது…' என்று எண்ணிய வாசுகி வெடுக்கென்று கார் கதவை திறந்து கொண்டு விடுவிடுவென்று நடையை போட்டார்.

தயக்கம் உடைத்து சதாசிவமும் அவர் பின்னால் ஓடினார்.

“ அம்மா வேணாமா, சாவித்திரி இப்போ தான் கொஞ்சம் சந்தோசமா இருக்கா… நம்மல கண்டா கண்டிப்பா அவ மனசு கஷ்டபடும்… வேண்டாம்… நாம இப்படியே போய்டுவோம்… அவங்களுக்கா நம்மல ஏத்துக்கணும் தோணுச்சுன்னா… நம்மல தேடி வரட்டும்.. அது வரை நாம காத்து இருப்போம்…” கலங்கிய கண்களுடன் அவர் கூற, என்ன சொல்வதென்று தெரியாமல் வாசுகியும் அமைதியாய் விழிநீர் சிந்தினார்.

ஆனால் உள்ளிருந்து வந்த சிவராமனின் பேச்சு குரல் அவர்களை பிரமிக்க வைத்தது.

சதாசிவம் மேல் தப்பே இல்லை… தன் மேல் தான் அத்தனை பிழையும் என்ற ரீதியில் அவர் பேச

' இந்த மனிதரின் மேலா நாம் இத்தனை நாளும் கோபம் கொண்டோம்' என்று தன் மனம் குன்றி போனார்கள் இருவரும்.

அந்த கணமே அவர்களிடம் தன் மன்னிப்பை வேண்ட வேண்டும் என்று தோன்றவே உள்ளே சென்றார் சதாசிவம் வாசுகி பின் தொடர,.

அவரை அந்த கணத்தில் எதிர்பார்க்காத எல்லோரும் திக் பிரமையில் நிற்க,

கீர்த்தனா தான் தன்னை சுதாரித்து கொண்டு அவரிடம் சென்றாள்.

“ வாங்க மாமா… வாங்க பாட்டி.., இன்னக்கி என்ன அதிசயம்… எல்லாரும் ஒண்ணா கூடி இருக்கோம்… எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு… அப்பா யார் வந்து இருக்காங்க பாருங்க… அம்மா, மாமாவும் பாட்டியும் வந்து இருக்காங்க…” சிலையென நின்ற தன் பெற்றவர்களை மற்றவர்கள் அறியாமல் உசுப்பினாள்…

வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்க சொல்லி கொடுத்த நீங்களே இப்படி நிற்கலாமா? என்று பார்வையை தாங்கியபடி,

அவளுக்கும் அவர்கள் மேல் கோவம் உண்டு தான்… ஆனால் அதை காண்பிக்கும் சரியான தருணம் இது இல்லை… என்று தோன்றவே தன் பெற்றவர்களை உள்ளிழுத்து விட்டாள்.

அதற்குள் நிலை மீண்ட சிவராமன் ,

“ வாங்க அத்தை…வாங்க சம்பந்தி…” என்று புன்னகையோடு வரவேற்றார்.

கீர்த்தனாவுக்காவது அவர்கள் மேல் கோவம் ஆனால் மற்ற இருவருக்கும் அவர்கள் மேல் எந்த வருத்தமும் இல்லை… என்பது தான் உண்மை… அதை அப்போதே கார்த்திக்கிடம் தெளிவு படுத்தி விட்டார் சிவராமன்.

அதனால் அவர்களை வரவேற்பதில் இருவருக்குமே எந்த சங்கோஜமும் இல்லை.

ஜானகியும் மித்ராவும் எல்லோருக்கும் உணவு எடுத்து வைக்க… அமைதியாய் உண்டவர்கள் இடையில் எதுவும் பேசவில்லை.

கீர்த்தனாவும் தன் தந்தையின் நடவடிக்கையால் கொஞ்சம் மனம் இறங்கினாள்… என்று சொல்லலாம்.

சதாசிவம் வாசுகி மீண்டும் தங்கள் மன்னிப்பை வேண்ட,

“ அய்யோ என்ன மச்சான் இது சின்ன புள்ளையாட்டம் சொன்னதையே சொல்லிகிட்டு…. அதையெல்லாம் விடுங்க... அப்படி நீங்க மன்னிப்பு கேக்குறதா.. இருந்தா… எங்களையும் மன்னியுங்க…”

என்று அவர் கூற மனமே இல்லாமல் அமைதி ஆனார்கள் இருவரும்.

அதன் பின் சிவராமன் தான் ஏதேதோ பேசி அவர்களை சமநிலைக்கு கொண்டு வந்தார்.

இருந்தாலும் சாவித்திரி மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாய் கூட்டத்தில் அமர்ந்து இருந்தார்.

பின், வேலை இருப்பது போல் சமையலறைக்குள் சென்று கொண்டார்.

சாவித்திரியின் மேலேயே பார்வையை ஏக்கத்தோடு சதாசிவம் வைத்த வண்ணம் இருக்க,

அவரின் பார்வையை புரிந்து கொண்ட கீர்த்தனா… மெல்ல அத்தையின் பின்னோடே சமையலறைக்கு சென்றாள்.

“அத்தை” என்று பின்னால் நின்று கொண்டு தன்னை கட்டியவளின் கன்னத்தை செல்லமாய் தட்டினார் சாவித்திரி.

“ என்னடாமா?”

“ ஏன் அத்தை ஒரு மாதிரி இருக்கீங்க?”

“இல்லையடா கண்ணம்மா நான் நல்லா தானே இருக்கேன்.”

“பொய் சொல்லாதீங்க அத்தை… எனக்கு தெரியாதா?.. ஏன் அத்தை மாமா மேல இன்னும் கோவமா தான் இருக்கீங்களா?”

இந்த சின்ன பெண்ணுக்கு எவ்வளவு மூளை என்று எண்ணினாலும் அதை தவிர்த்து விட்டு,

“ கார்த்திக் மேல எனக்கு இருந்த கோவம் தான் போய்டுச்சேமா…” என்று புன்னகையோடு கூறிவரை இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்தாள்.

பின்னே அவள் யாரை கேட்டால்… இவர் யாரை சொல்லுகிறார்…

அவளை கண்டு அவர் மேலும் சிரிக்க…

“ போங்க அத்தை… நான் கார்த்திக் மாமா பத்தி கேக்கல…. சிவம் மாமா பத்தி கேட்டேன்..”

“அதெப்படிடீ உனக்கு கார்த்திக்கும் மாமா…. அவர் அப்பாவும் மாமாவா? இதென்ன லாஜிக் எனக்கு புரியலை?”

வேண்டும் என்றே அவர் பேச்சை மாற்ற… இவள் வழக்கம் போல் பல்லை கடித்தாள்.

“ அத்தை…. கார்த்திக் மாமா…. எனக்கு மட்டும் மாமா…. இதுல எந்த லாஜிக்கும் இல்ல…. அப்புறம் அவங்க அப்பா… சிவம் மாமா…. அது என்னோட செல்ல அத்தையோட கணவன் என்றதால மாமா…. போதுமா…

சரி பேச்சை மாத்துனது போதும் இப்போ என் கேள்விக்கு பதில் சொல்லுங்க….மாமா மேல இன்னும் கோவமா தான் இருக்கீங்களா?”

'எப்படி போனாலும் விட மாட்டேங்குது பாரு' என்று தலையை அடித்து கொண்டவர்,

“ அம்மாடி, எனக்கு உங்க மாமா மேல கோவம் இன்னும் இருக்கானு தெரியல… ஆனா வருத்தம் ரொம்பவே இருக்கு… நீங்க எல்லாரும் என்ன சமாதானம் ஆனாலும்… இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் அவர் தானோ என்னவோன்னு என் மனசு வலிக்குது.

தெரியல… நடந்ததையே நினைச்சுட்டு இருக்குறதுக்கு பதிலா… இப்போ எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டோம்ன்னு நினைச்சு கொஞ்சம் கொஞ்சமா மனசை தேத்திட்டு வரேன்… நிச்சயம். என் மனசும் தெளியும்னு நம்புறேன்டா…. அவ்வளோ தான்…”

இதை கூறும் அந்த பெண்மணியின் கண்கள் கூட கலங்கி இருந்தது போல.

சமையலறை பக்கம் தன் மனைவியை சமாதான படுத்த வந்த சதாசிவம் கண்களும் கலங்கின என்று நான் சொல்ல தேவை இல்லை.

“ எல்லாமே சரி அத்தை. ஆனா நானும் கார்த்திக் மாமாவும் பிரிஞ்சது எப்படி உங்களுக்கு கஷ்டமா இருந்துச்சோ அது போல தான் அத்தை நீங்களும் மாமாவும் இப்படி ஒன்னா இருந்தும் பிரிஞ்சு இருக்கிறது… ரொம்ப கஷ்டமாக இருக்குது அத்தை.

நம்ம மனசுக்கு புடிச்சவங்க நம்மல விட்டு தள்ளி நிக்கும் போது ரொம்ப வலிக்கும் அத்தை.. அந்த வலியை நீங்க மாமாக்கு கொடுத்துடாதீங்க…”

கீர்த்தனாவின் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டவர்,

“ நிச்சயமாடா… சீக்கிரமே என் மனசை தேத்திக்கிறேன் போதுமா”

என்று அவள் தலையில் செல்லமாய் முத்தம் வைத்தார்.

அவளும் சினேகமாய் சிரித்தாள்.

.

.

.

.

.

.

.

எபி லாக்:

சில மாதங்களுக்கு பிறகு:

ஜூலை 9:

சொந்த பந்தங்கள் திரள,

சிறு சிறு சில்வண்டுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சுற்றி வர,

திரண்ட ஒட்டு மொத்த கூட்டத்துக்கும் ஓர் அறையில் விருந்து தயாராக,

அந்த மண்டபத்தின் வாசலில்,

Kaarthik Weds Keerthana

Vignesh Weds Mithra

என்ற பெயர் தாங்கிய பலகை புதிதாக வருவோரை வரவேற்றது.

குறித்த நேரத்தில் பெண் மங்கைகள் இருவரின் சங்கு கழுத்திலும் பொன் விலங்கு பூட்டி அவர்களை தம் சொந்தமாக்கி கொண்டனர் அண்ணன் தம்பி இருவரும்.

சிவராமன் ஜானகி தம்பதி

தங்கள் மகள்கள் இருவரின் நிறைவான வாழ்க்கை கண்டு உள்ளம் பூரித்து விழி நீர் சிந்தினர்.

சாவித்திரி, தனக்கு மகள்களாய் வரவிருக்கும் மருமகள்களின் முகத்தையும் … நேற்று தான் தொட்டிலில் கிடத்தியது போல் தோன்றும் தன் மகன்களின் முகத்தையும் நேசம் பொங்க பார்த்தவராய் அருகில் நின்ற சதாசிவம் கைகளை பாசத்தோடு பற்றி கொண்டார்.

அவர் நிலை உணர்ந்த சிவமும் சாவித்திரியின் கைகளை தட்டி கொடுத்தார்.

இவர்களை விடவும் அந்த மண்டபத்தில் தனித்துவமாய் தெரிந்தவர்,

நாற்பது வயது குறைந்தது போல் அங்கும் இங்குமாக ஓடி ஆடி சுற்றி கொண்டிருந்த வாசுகி தான்.

திருமணத்திற்கு வந்தவர்கள் மறக்காமல் விருந்திலும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துமாறு கேட்டு கொள்கிறோம்.

                             *** முற்றும் ***


Post a Comment

0 Comments